ரோகினியின் சதியால் முத்து-மீனாவை கைது செய்யும் போலீஸ், சிந்தாமணி வலையில் சிக்குவாரா விஜயா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினியின் பித்தலாட்ட வேலையை சத்யா, மீனா- முத்துவிடம் சொல்லிவிட்டார். முத்து வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லி ரோகினி மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பதாக சொன்னார். அந்த சமயம் வந்த வித்யா, ரோகினி சேர்ந்த எல்லா சதி வேலைகளையும் புட்டு புட்டு வைத்தார். இதைக் கேட்டு விஜயாவிற்கு தலை சுற்றுகிறது. மனோஜ், போலீசில் புகார் கொடுக்க இருந்தார். உடனே அண்ணாமலை, நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். ரோகினி இந்த வீட்டு மருமகள் கிடையாது. மனோஜ்க்கு விவாகரத்து வாங்கி கொடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
விஜயா, மனோஜ் இருவரும் சேர்ந்து ரோகிணிக்கு விவாகரத்து கொடுப்பதற்காக வக்கீலை சந்தித்து பேசி இருந்தார்கள். வக்கீல், ரோகினிக்கு விவாகரத்து நோட்டீஸ் சம்மந்தமாக மெயில் அனுப்பினார். இன்னொரு பக்கம் மீனாவின் தோழிகள், ரோகினி செய்த வேலையை சொல்லி திட்டிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் வக்கீல் நோட்டீஸ் வந்ததை பார்த்து ரோகினி ஷாக் ஆனார். அதற்குப்பின் ரோகினி, கிருஷை பள்ளியில் விட்டு வரும் போது மீனாவின் தோழிகள் ரோகினியை வண்டிக்குள் ஏற்றி அடி அடி என்று துவைத்தார்கள். பின் ரோகினியை, முத்து,மீனா இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
அதை பார்த்து முத்து-மீனா, எதற்காக இப்படி செய்தீர்கள் என்றார்கள். அதற்கு மீனாவின் தோழிகள், உங்களுக்கு செய்த துரோகத்திற்கு இதெல்லாம் குறைவு. இவர்களை சும்மா விடக்கூடாது என்றார். பின் மீனா, தன்னுடைய தோழிகளை திட்டினார். இருந்தாலும் ரோகினி, மீனா- முத்துவின் மீது தான் பயங்கரமாக கோபப்பட்டார். பின் மனோஜ் கடைக்கு சென்ற ரோகினி, முத்து-மீனா செய்ததை சொல்லி அழுதார். உடனே கோபத்தில் மனோஜ், ரோகினியை திட்டி அனுப்பி விட்டார். பின் வீட்டிற்கு வந்த மனோஜ், முத்து-மீனா செய்த வேலையை அண்ணாமலையிடம் சொன்னார். மீனா, நாங்கள் அடிக்கவில்லை. இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வந்த போலீஸ், ரோகிணி புகார் கொடுத்திருப்பதாக சொல்லி முத்து-மீனா இருவரையும் கைது செய்கிறார்கள். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனில் ரோகினி, முத்து-மீனாவால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மீண்டும் ட்ராமா போடுகிறார். அதை நம்பிய போலீஸ், முத்து-மீனா மீது எஃப் ஐ ஆர் போட சொல்கிறார். அந்த சமயம் பார்த்து ஒரு சிறுவனுக்கு தொண்டையில் சாப்பிடும் பொருள் அடைத்ததால் முத்து உதவி செய்து அந்த சிறுவனை காப்பாற்றினார். இதை பார்த்த போலீஸ் மனம் இறங்கி ரோகினியை விசாரிக்கிறார். பின் ரோகினி செய்த எல்லா பித்தலாட்ட வேலையையும் முத்து-மீனா சொல்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது ரோகினி இல்லை என்று மறுக்கிறார். உடனே அங்கு வந்த அருண், முத்து-மீனா சொல்வது தான் உண்மை என்கிறார். இதனால் போலீஸ் ரோகினியை திட்டி அனுப்பி விடுகிறார்கள். பின் ரோகினி, மனோஜுடன் சேர்ந்து வாழ நான் என்ன வேணாலும் செய்வேன் என்று சவால் விட்டு செல்கிறார். வீட்டிற்கு வந்த முத்து, போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை சொல்கிறார். அப்போது வந்த பைனான்சியர், சிந்தாமணி எனக்கு தெரிந்தவர்தான். அவர்தான் உங்களுடைய கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு என்னிடம் பேசினார். பேங்கில் இருக்கும் கடனை நானே அடைந்து விடுகிறேன். பத்திரத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்கிறார். இதைக் கேட்ட முத்து-மீனா இருவரும் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். பின் நடந்ததை பைனான்சியர் சிந்தாமணியிடம் சொல்கிறார். சிந்தாமணி, முத்து-மீனா அந்த வீட்டை விட்டு போனால் தான் நிம்மதி என்கிறார். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜ்க்கு போன் செய்து ரொமான்டிக்காக பேசுகிறார்.