மனோஜிடம் ரோகினி போட்ட கண்டிஷன், விஜயா என்ன சொல்ல போகிறார்? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் விஷயத்தை அவருடைய நண்பர், முத்து- அண்ணாமலை இடம் சொன்னவுடன் வீட்டில் எல்லோருமே பதறி இருந்தார்கள். பின் முத்து- அண்ணாமலை இருவருமே போலீஸ் ஸ்டேஷன் வந்தார்கள். அங்கு மனோஜ் போலீஸ் இடம் அலப்பறை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து மன வேதனையில் அண்ணாமலை, குடும்ப பிரச்சனையால் தான் அவன் இப்படி பண்ணி விட்டான் என்று மன்னிப்பு கேட்டார். அந்த சமயம் பார்த்து அருண் வந்தார். அருணை பார்த்தவுடன் முத்து ஷாக் ஆனார். முத்துவின் அண்ணன் தான் மனோஜ் என்று தெரிந்தவுடன் வெளியே விடக்கூடாது என்று அருண் நினைத்தார்.
உடனே அங்கு வந்து எஸ் ஐ, மனோஜை வெளியே விட சொன்னார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த மனோஜ் மீண்டும் அலப்பறை செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து அண்ணாமலைக்கு ரொம்பவே மனவேதனையாக இருந்தது. பின் அவர், நான் என் அம்மாவை வரவைக்கிறேன். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறேன் என்று தன்னுடைய அம்மாவை அழைத்து வர சென்றார். இன்னொரு பக்கம் பஸ் ஸ்டாண்டில் சீதா, நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்தவுடன் அருண், என் காதலுக்கு எப்போதுதான் பதில் சொல்லுவாய்? நீ என் பைக்கில் வந்து ஏறினால் என்னை காதலிக்கிறாய் என்று அர்த்தம் என்று சொல்ல, சீதாவும் பைக்கில் ஏறினார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் அருண், என் காதலை ஒத்துக் கொண்டாயா? என்று கேட்க, நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று சீதா விளையாடி இருந்தார். பின் சீதா, பாதியிலேயே விட்டு விடாதீர்கள் என்று சொன்னவுடன் அருண் கடைசிவரை உன்னுடன் தான் நான் சேர்ந்து வாழ்வேன் என்றார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவருமே மனோஜின் நிலைமையை நினைத்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போ மீனா, உங்கள் அண்ணன் செய்வது ரொம்ப தவறு. ரோகினி பக்கம் இருக்கும் நியாயத்தை கேட்டு இருக்க வேண்டும். ஆனால், அவர் அதைப் பற்றி எல்லாம் எதுவுமே கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார் என்றார்.
நேற்று எபிசோட்:
இது எல்லாம் கேட்ட மனோஜ், என் விஷயத்தைப் பற்றி பேச உங்கள் இருவருக்குமே உரிமை கிடையாது. உங்கள் வேலையை பாருங்கள் என்று கோபமாக திட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் ரோகினி, ஸ்ருதிக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது ஸ்ருதி, ரோகினி பற்றி தெரிந்த விஷயத்தை சொன்னவுடன் அவர் ஷாக் ஆனார். பாட்டியை வர வைக்கும் விஷயத்தை சொன்னவுடன் ரோகினிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாட்டியை அண்ணாமலை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்.
பாட்டி வந்த உடனே பாட்டி மனோஜை திட்டி அவர் செய்த வேலையை கேட்கிறார். அப்போது ஸ்ருதி, ரவி இருவருமே வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். பின் ரோகினிக்கு போன் செய்து வர வைக்க சொல்கிறார் பாட்டி. மனோஜ் போன் செய்தும் ரோகினி எடுக்கவே இல்லை. ரொம்ப நேரமாக மனோஜ் ட்ரை பண்ணியுமே ரோகினி எடுக்கவில்லை.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் போனை எடுத்த ரோகினி அழுதார். உடனே மனோஜ், பாட்டி உன்னை வீட்டிற்கு வரச் சொன்னார் என்று சொன்னவுடன் கோபப்படுகிறார். பின் ரோகினி, நான் வீட்டுக்கு வர வேண்டும் என்றால் உன் அம்மா என்னை அடிக்கக்கூடாது, திட்டக்கூடாது என்று கண்டிஷன் எல்லாம் போடுகிறார். மனோஜிமே ஒத்துக்கொள்கிறார். அதற்குபின் அண்ணாமலையும் விஜயாவிற்கு போன் செய்கிறார். ஆனால் விஜயா, போனிலேயே ருத்ரதாண்டவம் ஆடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.