பிரச்சனையில் சிக்கி கொள்வாரா ரோகினி? முத்து என்ன செய்ய போகிறார்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 14/12/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஆர்டரின் மூலம் தனக்கு கிடைத்த லாபத்தை நினைத்து மீனா சந்தோஷப்பட்டார். அப்போது அந்த மண்டபத்தின் மேனேஜர், இங்கு சிந்தாமணி என்பவருக்கு தான் எப்போதுமே ஆர்டர் கிடைக்கும் என்று பயங்கமராக பில்டப் விட்டார். அந்த சமயம் பார்த்து மண்டபத்திற்கு வந்த சிந்தாமணி, ஆர்டர் கொடுக்காததால் மேனேஜரிடம் சண்டை வாங்கி இருந்தார்.
இன்னொரு பக்கம் மீனா, உங்களை விட நான் தான் அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று சொன்னவுடன் முத்துவின் முகமே மாறி இருந்தது.

நேற்று எபிசோட்டில் மீனா, காலையில் எழும்போது இருந்தே முத்து காணவில்லை. அவர் தன்னிடம் சொல்லாமல் சென்றது நினைத்து கவலைப்பட்டார். இதை பற்றி மீனா, அண்ணாமலை இடம் கேட்க, அவருமே நான் முத்துவை பார்க்கவில்லை என்றார். அதற்குப்பின் மீனா, முத்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று விசாரித்தார். இன்னொரு பக்கம் பார்வதி வீட்டிற்கு சென்ற விஜயா, மனோஜ் வாங்கும் புது பங்களா பற்றி பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய தம்பி சத்யாவிற்கு ஃபோன் செய்து முத்துவை பற்றி சொல்ல, இருவருமே முத்து போகும் இடங்களுக்கு எல்லாம் சென்று விசாரித்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

சத்யா- மீனா இருவருமே எல்லா இடத்திலும் முத்துவை தேடி பார்த்தும் கிடைக்கவே இல்லை. இதனால் ரொம்பவே மனமுடைந்து மீனா வருத்தப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த மீனாவிடம் அண்ணாமலை விசாரிக்க, அவர் எங்கேயுமே இல்லை என்று சொன்னார். அதன் பின் வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு முத்துவிற்காக மீனா காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த முத்துவை பார்த்து அண்ணாமலை திட்டி இருந்தார். பின் முத்து-மீனா இருவரும் பேசி கொண்டு இருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது மீனா, ஏன் சொல்லாமல் போனீர்கள்? என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். உடனே முத்து, உன்னை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும். அதற்காகத்தான் சவாரிப் போயிருந்தேன் என்று சொன்னவுடன் மீனா ரொம்பவே வருத்தப்பட்டார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அதன் பின் மீனா கோபத்தில் சாப்பிடாமல் தூங்க போய் விட்டார். கடைசியில் முத்து, மீனாவிடம் மன்னிப்பு கேட்டு அவருக்கு சாப்பாடு ஊட்டி விட்டார்.

https://www.youtube.com/watch?v=FLB9FJFDVgE

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தாங்கள் வாங்க இருக்கும் புது பங்களாவின் ரெஜிஸ்ட்ரேஷனுக்காக ரோகினி- மனோஜ் இருவரும் ரெஜிஸ்டர் ஆபீஸ் போய் சென்றிருக்கிறார்கள். அந்த இடத்திற்கு தான் மனோஜின் முன்னாள் காதலி ஜீவா வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க கொண்டார்கள். பின் ஜீவா, முத்துவின் காரில் தான் வந்திருக்கிறார். காரில் ஏறியவுடன் ஜீவா, நான் யாரை பார்க்கக்கூடாதுன்னு நினைத்தேனோ அவர்களை தான் பார்த்தேன் என்று ரொம்ப கோபமாக பேச, முத்து ஷாக் ஆகிறார். இனிவரும் நாட்களில் மனோஜ்- ரோகினியின் சுயரூபம் வெளியே வருமா? அவர்கள் எண்ணம் ஈடேறியதா? போன்ற விறுவிறுப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full