விஜயாவை எதிர்த்து பேசிய ரோகினி, மீனா தொடங்கிய புது பிசினஸ் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 14/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண், எனக்கு பிடிக்காதவர்களுடன் நீ பேசக்கூடாது. எனக்கு அந்த முத்துவை பிடிக்காது என்று திட்டினார். இதனால் சீதா, கோபப்பட்டு வீட்டை விட்டு வந்து விட்டார். அதற்கு பின் வீட்டில் மீனா, அம்மா எல்லோரும் விசாரித்தார்கள். அதற்கு சீதா, நடந்ததை சொல்லி அருணே என்னை வந்து அழைத்து போகட்டும். நான் போகமாட்டேன் என்றார். இன்னொரு பக்கம் ஸ்ருதி அப்பா-அம்மா இருவரும் நீத்துவை பார்த்து ரொம்ப மோசமாக பேசி விடுவதால் நீத்து அழுதார். இதை பார்த்து ரவி விசாரிக்க, நீத்து உண்மையை சொல்லி விட்டார். பின் ரவி, ஸ்ருதி அப்பா-அம்மா மீது கோபப்பட்டார்.

நேற்று எபிசோட்டில் நீத்து கிளம்பிய உடனே ரவி கிளம்பியதால் ஸ்ருதி பயங்கர கோபத்தில் இருந்தார். பின் ஸ்ருதி, ரெஸ்டாரண்ட் உனக்காக தான் ஆரம்பித்தேன். எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாய்? உனக்கு நீத்து ரொம்ப முக்கியமானவளாக போயிட்டாளா? என்று பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். ரவி உண்மையை சொல்லப் பார்த்தார். ஆனால், சுருதி கொஞ்சம் கூட கேட்கவில்லை மோசமாக ரவியை திட்டி விட்டார். இன்னொரு பக்கம் பார்வதியின் குரல் சரியில்லை என்று வசந்த் அவருக்கு சூப் வைத்து வீட்டுக்கு கொண்டு வந்தார்.

சிறகடிக்க ஆசை:

பின் வசந்த்- பார்வதி இருவருமே பேசிக் கொண்டிருப்பதை பார்த்த விஜயா திட்டினார். வசந்த், நாங்கள் நண்பர்களாக தான் பழகுகிறோம் என்றார். இருந்தாலுமே விஜயா இருவரையும் திட்டி வார்னிங் கொடுத்தார். அந்த சமயம் பார்த்து சுருதியின் அப்பா, அம்மா வந்தார்கள். அப்போது ஸ்ருதியின் அப்பா, ரவி, நீத்துவின் ரெஸ்டாரன்டை விட்டு ஸ்ருதியுடன் சேர்ந்து ரெஸ்டாரன்ட் நடத்த சொல்லுங்கள் என்றார். பின் வீட்டில் மூன்று ஜோடிகளுமே தங்களுடைய தொழில்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஆன்லைன் மூலம் பூ டெலிவரி செய்யலாம் என்று சுருதி, மீனாவிற்கு ஐடியா கொடுப்பதால் முத்து சந்தோஷப்படுகிறார். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் சுருதி செய்து தருவதாக சொல்கிறார். அதற்குப்பின் விஜயா, ஸ்ருதி நடத்தும் ரெஸ்டாரண்டில் வேலை செய்ய சொல்கிறார். ஆனால், ரவி முடியாது என்று சொல்லுகிறார். அதற்குப்பின் சுருதி- ரவி இருவருக்கும் இடையே சின்ன சின்ன மன கசப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்குப்பின் மீனா, தன் தொழிலில் டெவலப் செய்வதற்காக செய்யும் வேலைகளை எல்லாம் அண்ணாமலையிடம் முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்த விஜயா கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். அதோடு ரோகிணியை ரொம்ப இழிவாக பேசுகிறார். இதைக் கேட்ட ரோகிணி, நானும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறேன். மனோஜ் இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் நான் தான் என்றெல்லாம் விஜயாவையே எதிர்த்து பேசுகிறார். இதனால் கோபத்தில் கொந்தளித்த விஜயா ருத்ர தாண்டவம் ஆடி ரோகினியை திட்டுகிறார். ஆனால், ஒரு வார்த்தை கூட மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full