மனோஜிக்கு ரோகினி கொடுத்த சர்ப்ரைஸ், முத்துவிடம் சிக்குவாரா மலேசியா மாமா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் முத்துவின் வீட்டிற்கு செல்வம் அவருடைய மனைவியை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். முத்து, அவர்களை சாப்பிட வைத்தார். இன்னொரு பக்கம் மனோஜ், வேலைக்கு டைம் ஆகிறது சாப்பாடு ரெடியா? என்று கேட்டார்ர். ரோகினி மீனாவிடம் கேட்க, அவர்கள் சாப்பிட்ட பின்னால் சாப்பிடட்டும் என்று சொன்னார். பின் கோபத்தில் ரோகினி, இதை மனோஜிடம் சொல்ல, அவர் ஆவேசமாக முத்துவையும் அவருடைய நண்பரையும் பற்றி தரகுறைவாக பேசி இருந்தார். இதனை கேட்ட முத்து, மெதுவாக பேசு. அவர்கள் சாப்பிடட்டும். எதற்காக இப்படி எல்லாம் பேசுகிறாய்? என்று கேட்டார்.
மனோஜ், யார் சொல்வதையும் கேட்காமல் ரொம்ப கேவலமாக எல்லாரையும் பேசிக் கொண்டிருந்தார். இதை கேட்ட செல்வம் தன்னுடைய மனைவியை சாப்பிடாமல் அழைத்துக் கொண்டு சென்று விட்டார். இதனால் கோபப்பட்ட முத்து, மனோஜை உட்கார வைத்து வாயில் சாப்பாடு போட்டு திணிக்கிறார். உடனே மனோஜ், என்னை கொல்ல தானே பார்க்கிறாய், நீ ஏற்கனவே ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தானே என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். இதனால் இன்னும் கோபத்தின் உச்சிற்க்கு சென்ற முத்து, கத்தியை எடுத்து மனோஜை குத்தப் போனார். பின் எல்லோருமே மனோஜ், முத்துவை தடுத்து விட்டார்கள்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் சுருதி, மனோஜ்-முத்து இடையே இருக்கும் சண்டையை தீர்ப்பதற்கு ஒரு கேமை விளையாட வைத்தார். நேற்று எபிசோட்டில் சிந்தாமணி, டிரைவிங் கத்து கொள்ள முத்து வீட்டிற்கு வந்தார். ஆனால், அது மீனாவின் வீடு தெரியாமல் சிந்தாமணி வந்து விட்டார். பின் அவர் மீனா, முத்துவை பார்த்தவுடன் கிளம்ப பார்த்தார். உடனே முத்து, உங்களுக்கும் மீனாவுக்கும் தான் போட்டி. எனக்கும் உங்களுக்கும் இல்லை. நான் நன்றாக சொல்லி தருகிறேன் என்று சொல்கிறார். ஆனால், சிந்தாமணி பார்க்கலாம் என்று கிளம்பி விட்டார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் வித்யா-ரோகினி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து அங்கு கதிர் வந்தார். அவரை பார்த்தவுடன் கோபத்தில் ரோகினி அவரிடம் சண்டை போட்டார். உடனே கதிர், ரோகினியை தள்ளி விட்டு தப்பித்து ஓடி இருந்தார். பின்னாடியே ரோகினியும் துரத்திக் கொண்டு சென்றார். ஆனால், கதிர் எப்படியோ எஸ்கேப் ஆகி விட்டார். பின் இதைப்பற்றி மனோஜிடம் ரோகினி சொன்னார். அதற்குப்பின் விஷயம் அறிந்த பார்வதி, சாமியார் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர் வெற்றிலையில் மை போட்டு தொலைந்து போன பொருள்களை கண்டுபிடித்து விடலாம் என்று சொல்ல, முத்து கிண்டல் அடித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்தநிலையில் இன்றைய எபிசோட்டில் சாமியார், வெற்றிலையில் மை தடவி ஓட்டை போட்டு விட்டார். உடனே வீட்டில் உள்ளவர்கள் சிரிக்க, அவர் அங்கிருந்து வேகமாக கிளம்பினார்.மனோஜ்க்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது முத்து, கதிர் பண விஷயத்தை நானே கண்டுபிடிக்கிறேன் என்று கூறுகிறார். மறுநாள் காலையில் மனோஜிக்கு பிறந்தநாள் என்பதால் ரோகினி சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதோடு அவருக்காக புது கார் வாங்கி தருகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மனோஜ் பிறந்த நாளைக்கு கேக் வெட்டி எல்லோருமே கொண்டாடினார்கள். அதற்கு பின்பு பவானியில் கல்யாணத்திற்கு அண்ணாமலையின் குடும்பமே சென்றது. அங்கு மலேசியா மாமா கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்பாடுகளையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார். ஆனால், முத்து குடும்பத்தினர் அங்கு வந்திருப்பது அவருக்கு தெரியவே இல்லை. அண்ணாமலை குடும்பத்திலிருந்து ஒவ்வொருவரும் வருகின்ற தருணத்தில் எல்லாம் எப்படியோ மலேசியா மாமா அங்கிருந்து சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.