தன் மீது பழியை போட்டுக் கொண்ட மனோஜ், உண்மையை சொல்வாரா ரோகினி? சிறகடிக்க ஆசை

By subhashini · 3/4/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் பாட்டியை அண்ணாமலை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். பாட்டி வந்த உடனே பாட்டி மனோஜை திட்டி அவர் செய்த வேலையை கேட்டார். அப்போது ஸ்ருதி, ரவி இருவருமே வீட்டிற்கு வந்து விட்டார்கள். பின் ரோகினிக்கு போன் செய்து வர வைக்க சொல்கிறார் பாட்டி. மனோஜ் போன் செய்தும் ரோகினி எடுக்கவே இல்லை. ரொம்ப நேரமாக மனோஜ் ட்ரை பண்ணியுமே ரோகினி எடுக்கவில்லை.

அதற்கு பின் போனை எடுத்த ரோகினி அழுதார். உடனே மனோஜ், பாட்டி உன்னை வீட்டிற்கு வரச் சொன்னார் என்று சொன்னவுடன் கோபப்பட்டார். பின் ரோகினி, நான் வீட்டுக்கு வர வேண்டும் என்றால் உன் அம்மா என்னை அடிக்கக்கூடாது, திட்டக்கூடாது என்று கண்டிஷன் எல்லாம் போட்டார். மனோஜிமே ஒத்துக்கொண்டார். அதற்குபின் அண்ணாமலையும் விஜயாவிற்கு போன் செய்தார். ஆனால் விஜயா, போனிலேயே ருத்ரதாண்டவம் ஆடி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் விஜயா, அந்த துரோகி இருக்கும் இடத்திற்கு நான் வரமாட்டேன் என்று சொன்னார். உடனே பாட்டி, போனை வாங்கி விஜயாவிடம் பேசி இருந்தார். பின் வீட்டிற்கு விஜயா வரும் நேரம் பார்த்து ரோகினியும் வந்திருந்தார். அவரை பார்த்த உடனே பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப்பின் பாட்டி, ரோகினி எதற்காக பொய் சொன்னாள்? இந்த காரணத்தை கேட்க வேண்டும் என்றவுடன் விஜயா, அதெல்லாம் முடியாது. அவளிடம் பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

பின் விஜயா, ரோகினியை அடிக்கச் சொல்லி சொன்னார். ஆனால், மனோஜ் அமைதியாக இருந்தார். இதனால் ஆத்திரத்தில் விஜயா ரோகினியை அடித்தார். உடனே மனோஜ், அடிக்காதீர்கள். இந்த உண்மை எனக்கு ஏற்கனவே தெரியும் என்று பொய் சொன்னார். இதனால் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. பின் எல்லோரும் மனோஜ் பக்கம் திரும்பி விட்டார்கள். முத்து, நீ உனக்கு தெரியவே தெரியாது என்று சொன்னாயே, இப்ப எதுக்கு மாத்தி சொல்கிறாய் என்று கேட்டதற்கு, ஏதோ காரணங்களை மனோஜ் சொன்னார். ஆனால், விஜயாவால் எதுவுமே நம்ப முடியவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் மனோஜ், என்னிடம் ஏற்கனவே ரோகினி சொல்லிவிட்டாள். நான் அம்மா திட்டுவார்கள் என்று தான் சொல்லவில்லை என்கிறார். உடனே விஜயா, மனோஜை அடிக்கிறார். இருந்தாலுமே மனோஜ், ரோகினிக்கு சப்போர்ட் செய்கிறார். ஆனால், ரோகினி அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் பாட்டி, எதற்காக பொய் சொன்னாய்? என்று கேட்கிறார். அதற்கு ரோகினி, எனக்கு மனோஜ் ரொம்ப பிடிக்கும்.
நாங்கள் மலேசியாவில் தான் இருந்தோம். எனக்கு சின்ன வயதிலேயே என்னுடைய அப்பா ரொம்ப குடிப்பார். அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் என்னுடைய அம்மாவை அடித்து துரத்தி விட்டார்.

சீரியல் ட்ராக்:

என் சின்ன வயதிலேயே நானும் என் அம்மாவும் இந்தியா வந்தோம். பின் என் அம்மா வேதனையிலேயே இறந்து விட்டார். அதற்கு பிறகு கஷ்டப்பட்டு படித்து நான் ஒரு பார்லர் தொடங்கினேன். மனோஜை பார்த்தவுடன் பிடித்தது. அப்போதுதான் அத்தை பணக்கார பெண்ணை தேடுகிற விஷயம் தெரிந்துதான் நான் இப்படி பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டேன் என்று சொன்னவுடன் விஜயா, இன்னும் என்னென்ன பொய் சொல்கிறாய் என்று அதிகமாக கோபப்படுகிறார். உடனே அண்ணாமலை, இது மட்டும் தானா, வேற ஏதாவது மறைக்கிறாயா? எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லிவிடு. இந்த குடும்பத்திற்கு உண்மையாக இரு என்று சொல்கிறார். அதற்கு ரோகினி, அவ்வளவுதான் என்று தான் திருமணம் செய்த விஷயத்தை மறைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full