கிரிஷை வைத்து ரோகினி போட்ட ட்ராமாவில் அவமானப்பட்ட மனோஜ், விஜயா முடிவு என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, நாம் உறவுக்காரர்களா என்று சந்தோஷப்பட்டார். உடனே பெண்ணின் தாத்தா, நீங்கள் எங்களுக்கு தூரத்து சொந்தம். உங்கள் மகன் அண்ணன் முறை வேண்டும் என்றார். இதைக் கேட்டு மனோஜ் ஷாக் ஆகி விட்டார். பெண் வீட்டாரருக்குமே ஒன்றும் புரியவில்லை. இந்த சம்மந்தம் வேண்டாம். உறவு முறை சரி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். மனோஜ்-விஜயா சோகமாக இருந்து கிளம்புகிறார்கள். பின் வீட்டில் மனோஜ், முத்து, ரவி எல்லோருமே மாடியில் சரக்கடித்துக் கொண்டு தங்களுடைய சோக கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள்.
சமையல் செய்வதற்காக விஜயா ஒரு ஆளை வீட்டிற்கு வரவைத்தார். அந்த நபர் வீட்டிற்கு வந்தவுடன் 1008 கண்டிஷன் போட்டார். விஜயாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இதனால் கோபப்பட்டு விஜயா அந்த நபரை திட்டி அனுப்பி விட்டார். பின் முத்து, இப்போதாவது மீனாவின் அருமை தெரிகிறதா என்றார். இருந்தாலும் விஜயா, மீனாவின் மீது கோபத்தில் தான் இருந்தார். பின் இதை பற்றி முத்து, மீனாவிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது மீனா, நான் என்ன உங்க வீட்டு சமையல் காரியா? என்று கோபப்பட்டார். பின் முத்து, மீனாவை சமாதானம் செய்தார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் சுருதி, ரவி இருவரும் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வந்த மீனா, நீத்து ஹோட்டல் நிறுத்திவிட்டு பூக்கடையை ஆரம்பித்திருந்தார். அந்த கடைக்கு ரவியின் பெயரை வைத்திருந்தார். அந்த கடைக்கு சிந்தாமணி தான் எல்லா பூவெல்லாம் கொடுக்கிறார். இதனால் ஏதோ ஒரு பிரச்சனை செய்ய இருக்கிறார் என்றார். இதனால் சுருதி, ரவி இருவரும் கோவப்பட்டார்கள். ரவி, நான் அம்மாவிடம் சொல்லி சிந்தாமணியை அவர்கள் கடைக்கு பூ கொடுப்பதை நிறுத்த சொல்கிறேன் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயாவை சந்தித்து, சுருதி- ரவி இருவரும் நீத்துவின் பூக்கடையை பற்றி பேசுகிறார்கள். விஜயா தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறார். ஸ்ருதி, இனிமேல் சிந்தாமணி எந்த உதவியும் செய்யக்கூடாது. சொல்லி வையுங்கள் என்கிறார். அதற்குப்பின் விஜயா, சிந்தாமணியை சந்தித்து பேசுகிறார். அப்போது சிந்தாமணி, நான் உங்கள் மகனின் வாழ்க்கையில் இருந்து நீத்துவை நீக்க தான் இப்படி எல்லாம் செய்கிறேன். கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கதை கட்டி விட்டு விடுகிறார். அதையும் விதையா நம்பி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ஷோரூம் வந்த கிரிஷ், அப்பா ரேங்க் கார்டில் கையெழுத்து போடுங்கள் என்று கேட்கிறார். கோபப்பட்டு மனோஜ், கிரிஷை அடிக்க போகிறார். அப்போது வந்த ரோகினி அழுது டிராமா எல்லாம் செய்து நடிக்கிறார். இதையெல்லாம் பார்த்த கஸ்டமர் மனோஜை திட்டிவிட்டு பொருட்களை வாங்காமல் அங்கிருந்து செல்கிறார்கள். இதனால் மனோஜ் ரொம்பவே கஷ்டப்படுகிறார். பின் வீட்டிற்கு வந்த மனோஜ் நடந்தது எல்லாம் விஜயாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். அண்ணாமலை, மனோஜை தான் திட்டுகிறார். அதற்குப்பின் சுருதி- ரவி இருவரும் சிந்தாமணி பற்றி கேட்கிறார்கள். விஜயா, சிந்தாமணி சொன்னதை சொல்கிறார். ஸ்ருதி கோபப்படுகிறார்.