ரோகினிக்கு போட்டியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயா, மனோஜ் நிலைமை என்ன? சிறகடிக்க ஆசை
ரோகினிக்கு போட்டியாக வரும் விஜயா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணி, முத்து வீட்டை எப்படியாவது அடைய வேண்டும் என்று பல குறுக்கு வழிகளை எல்லாம் செய்தார். இருந்தாலும் முத்து-மீனா இருவரும் அதை முறியடித்து விட்டார்கள். கடைசியாக பணத்தைக் கட்டி வீட்டை முத்து-மீனா இருவரும் மீட்டு விட்டார்கள். வக்கிலுமே வீட்டை மீட்டு முத்துவிடம் கொடுத்து விட்டார்கள். இதையெல்லாம் பார்த்து அண்ணாமலைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிந்தாமணி கோபத்தில் அங்கிருந்து கிளம்பினார். மீண்டும் அண்ணாமலையின் குடும்பம் வீட்டிற்கு வந்தார்கள்.
தன்னுடைய வீட்டை பார்த்தவுடன் விஜயா எமோஷனலாக அழுதார். பல போராட்டங்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்ததால் வீட்டில் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் முத்து. தங்களுக்கு தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் எல்லோரையுமே அழைத்து இருந்தார்கள். எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து மனோஜ்க்கு கோபம் தான் வருகிறது. பார்வதி, மூத்த மகனால் தான் இந்த வீடு போக இருந்தது. ஆனால், முத்து இந்த வீட்டை உனக்காக மீட்டு கொடுத்து விட்டான். முத்துவிற்கு உன் மேல் ரொம்பவே பாசம் என்றார். அதை கேட்டு விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நல்லபடியாக தங்களுடைய வீட்டில் பூஜையை செய்தார்கள். அப்போது அண்ணாமலை, முத்து-மீனாவை பூஜையில் உட்கார சொன்னார். விஜயாவும் மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். பின் சந்தோஷமாக முத்து-மீனா இருவரும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு பூஜையில் உட்கார்ந்தார்கள். மொத்த வீடுமே சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், மனோஜ் மட்டும் வேதனையில் இருந்தார். அதற்குப்பின் விஜயா மனோஜிடம் நலம் விசாரித்தார் அப்போது மனோஜ் ரோகிணியை பற்றி ரொம்ப பெருமையாகவும் அவருடன் சேர்ந்து மீண்டும் சேர்ந்து வாழ்வதை பற்றி எல்லாம் பேசி இருந்தார். இதனால் கொந்தளித்த விஜயா, ரோகினிக்கு போன் செய்து கண்டமேனிக்கு மோசமாக பேசி இருந்தார்.
சீரியல் ட்ராக்:
ரோகிணியும் விஜயா பேசுவதை தாங்க முடியாமல் கோபப்பட்டார். ஒரு கட்டத்தில் விஜயா, ரோகினியை திட்டி போனை வைத்துவிட்டு மனோஜ்க்கு வார்னிங் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் ரோகிணியுடன் சேர்ந்து எங்கும் போகக்கூடாது, பேசக்கூடாது என்றெல்லாம் விஜயா கண்டிஷன் போட்டார். மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் ரேகாவிடம் பேச முடியாததால் சத்யா கவலையில் இருந்தார். மீனா, இந்த காதல் தேவை இல்லை. தயவு செய்து உன்னுடைய வேலையை பார் என்றார். மீனாவின் அம்மாவும் சத்யாவை திட்டி அறிவுரை சொன்னார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கணவன் மனைவியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனோஜை, ரோகிணி அழைக்கிறார். மனோஜுமே ரோகினிக்காக அங்கிருந்து தயாராகிக் கிளம்பினார். அப்போது விஜயா, என்னுடைய தோழி அம்மா மகனுக்கான நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள சொல்கிறார். நாம் இருவரும் சேர்ந்து பரிசு வாங்கிக் கொண்டு வரலாம் என்கிறார். மனோஜால் எதுவுமே பேச முடியவில்லை. விஜயா-ரோகினி இருவருமே ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தான் வந்திருக்கிறார்கள். ரோகிணி, மனோஜை கூப்பிடுகிறார். விஜயா முறைத்துக் கொண்டிருக்கிறார்.