விஜயாவுடன் சேர்ந்து கொண்டு மனோஜ் போடும் திட்டம், ரோகினியின் அலப்பறை - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், தயவுசெய்து இந்த வீட்டை விட்டு அழைத்து செல்லுங்கள் என்றார். உடனே முத்து- மீனா இருவருமே அவனுக்கு பாட்டி இருந்தார்கள். அவர்களை மீறி அழைத்துச் செல்ல முடியாது என்றார்கள். விஜயா வழக்கம் போல மீனாவை திட்டிக் கொண்டிருந்தார். ரோகிணியுமே க்ரிஷ் பாட்டியிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்றார். ஆனால், யார் பேச்சையும் விஜயா கேட்கவில்லை. கடைசியில் மீனா, கிரிஷ் இந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்று சொல்வதை கேட்டு விஜயாவிற்கு ஷாக்காக இருந்தது.
மீனா, கிரிஷ் இந்த குடும்பத்தை சேர்ந்தவன் தான். அவனை தத்து கொடுப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர் பாட்டி தான் முடிவு எடுக்கணும் என்றார். விஜயா, மனோஜ் தவிர வீட்டில் உள்ள யாருமே கிரிசை தத்து கொடுப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பின் பார்வதி, சிவன் இருவருமே அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். அதற்குப்பின் முத்து, கிரிஷை தத்து எடுப்பதற்கு என்னென்ன தேவைகள் என்பது எல்லாம் தெரிந்து கொண்டு மீனாவை அழைத்துக் கொண்டு ஆஸ்ரமத்திற்கு போனார். இதை அறிந்த மீனா, யாரை கேட்டு இந்த முடிவு எடுத்தீர்கள்? கிரிஷை தத்தெடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.
சிறகடிக்க ஆசை:
இதை நான் கிரிஷ் நலனுக்காக தான் சொல்ல வருகிறேன். கூடிய சீக்கிரத்திலேயே நான் உண்மையையும் சொல்கிறேன். இப்போது என்னால் எதுவும் பேச முடியாது என்று அங்கிருந்து சென்றார். இதையெல்லாம் கேட்டு முத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது. முத்து எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மீனா ஒத்துக் கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் மனோஜ் தன்னுடைய பிஏவிடம் கிரிசை வேறொரு நாட்டிற்கு தத்து கொடுப்பதை பற்றி சொன்னார். அவருமே தனக்கு தெரிந்தவர்களின் மூலம் கிரிஷை தத்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தார். இதை அறிந்த ரோகினி பயங்கரமாக கோபப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, மனோஜ் உடைய பிஏவை திட்டிவிட்டு உங்களுக்கு இது தேவையில்லாத விஷயம். முத்து - மீனா சும்மா விடமாட்டார்கள். அமைதியாக இருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மனோஜை சமாதானம் செய்கிறார். இன்னொரு பக்கம் மீனா, கிரிஷை தத்தெடுத்துக் கொள்வதற்கு ஒத்துக் கொள்ளாததால் கோபத்தில் முத்து பகலிலேயே குடித்துக் கொண்டிருக்கிறார். செல்வம் எவ்வளவு தடுத்தமே முத்து கேட்கவில்லை. மீனா, என் பேச்சை மதிக்கவில்லை. அவள் உண்மையாக இல்லை, நடிக்கிறாள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே முத்து குடித்துக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ஸ்ருதியை பார்க்க வந்த அவருடைய அம்மா, ரவி உன்னை ஏமாற்றுகிறார். நீத்து உடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார் என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக ஏற்றி விடுகிறார். ஆனால், ஸ்ருதி அதை நம்பவில்லை. ரவிக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். அதற்குப்பின் மனோஜ்- விஜயா இருவருமே சேர்ந்து கொண்டு கிரிஷை வீட்டை விட்டு எப்படி துரத்துவது என்றெல்லாம் திட்டம் போடுகிறார்கள். ரோகிணியால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்கு பின்பு ரூமுக்கு சென்ற மனோஜிடம் பேய் வந்தது போல ரோகிணி
நடித்துக் கொண்டு கிரிஷை வெளியில் அனுப்பக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார். பயத்தில் மனோஜ் எதுவும் செய்யமாட்டேன் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது