பேய் வேஷம் போட்டு ரோகினி செய்த அட்ராசிட்டி, பயத்தில் மனோஜ் செய்த வேலை - சிறகடிக்க ஆசை

By subhashini · 9/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, கிரிஷை எழுப்பி ரோகினியிடம் தூங்க வைப்பதற்கு அனுப்பி வைத்தார். கிரிஷ் ரோகிணியுடன் சேர்ந்து தூங்கினார். காலையில் க்ரிஷ் பக்கத்தில் படுத்திருப்பதை பார்த்த மனோஜ் கத்திக்கொண்டு வீட்டில் பிரச்சினையை செய்தார். விஜயா, மீனாவையும் கிரிஷையும் திட்டிக் கொண்டிருந்தார். பின் அண்ணாமலை, விஜயாவை திட்டி அறிவுரை சென்றார். அதற்குப்பின் சிந்தாமணி, விஜயா, ரோகினி மூவருமே பார்வதி வீட்டிற்கு சென்று மீண்டும் கிரிஷை என்ன செய்வது என்று திட்டம் போடினார்கள். இதை பார்த்து ரோகினிக்கு கோபம் தான் வந்தது.

சிந்தாமணி, அந்தப் பையன் உடம்பில் அவர் அம்மா ஆவி புகுந்திருக்கும் கவனமாக இருங்கள் என்றெல்லாம் விஜயாவை பயமுறுத்தினார். பின் விஜயா, கிரிஷை எப்படியாவது இந்த வீட்டை விட்டு அனுப்பனும் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டே இருந்தார். பின் இதைப்பற்றி பேசுவதற்காக ரோகினி, மீனாவை மகேஸ்வரி வீட்டிற்கு வரவைத்தார். கோபத்தில் மீனா, வழக்கம் போல ரோகினியை திட்டிக் கொண்டிருந்தார். அப்போது ரோகினி, சிந்தாமணி சொன்ன விஷயத்தை சொன்னார். உடனே மீனா, என் உடம்பில் பேய் இருக்கிறது என்று நாடகமாட போகிறீர்களா? என்றார்.

சிறகடிக்க ஆசை

அதற்கு ரோகினி, நல்ல ஐடியா தந்தீர்கள். நான் எனக்கே பேய் பிடித்தது போல நடித்து மனோஜுடன் கிரிஸை பேச வைக்கிறேன் என்றார். அதற்கு மீனா, உண்மையை ஒழுங்கு மரியாதையாக வீட்டில் சொல் என்றெல்லாம் புலம்பி விட்டு அங்கிருந்து சென்றார். இன்னொரு பக்கம் நீத்து செய்த வேலையால் சுருதி- ரவிக்கிடையே வாக்குவாதம் நடந்தது. அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்து, கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது என்று போட்டி நடப்பதாக சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, எனக்கு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்கிறார். இன்னொரு பக்கம் ரோகினி- மனோஜ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரோகினி, தன் உடம்பிற்குள் கிரிஷ் அம்மாவின் ஆவி வந்தது போல டிராமா செய்து மனோஜை மிரட்டுகிறார். மனோஜிமே பயந்து கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து விடுகிறார். பின் ரோகினி, கிரிஷிடம் அன்பாக பாசமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உன்னை சும்மா விட மாட்டேன் என்று மிரட்டுகிறார். மனோஜ், பயத்தில் வெளியே சென்று கிரிஷை உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி விட்டு கொண்டு இருக்கிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

விஜயா, எதற்காக நீ இந்த வேலை செய்து கொண்டிருக்கிறாய். ஒழுங்கு மரியாதையாக எழுந்து வா என்று திட்டுகிறார். ஆனால் மனோஜ் எதுவும் பேசாமல் கிரிஷ் சாப்பாடு ஊட்டி விடுகிறார். அதற்குப் பெண்
மனோஜுடன் தூங்க கிரிஷ் ரூமிற்கு வருகிறார். மனோஜ் ஆரம்பத்தில் மறுத்தாலும் கிறிஸ் அம்மாவின் ஆவி வந்துடுமோ என்ற பயத்தில் அங்கேயே கிரிஷை தூங்க சம்பாதிக்கிறார். இதை எல்லாம் பார்த்து ரோகினிக்கு சந்தோசமாக இருக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full