ஸ்ருதி-மீனாவை மிரட்டி விட்டு செல்லும் ரோகினி, விசாரணையில் இறங்கிய முத்து - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, அத்தையின் பயம் போகட்டும். அதற்குப் பிறகு வீட்டிற்கு வருகிறேன் என்றார். அதனால் முத்து எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் அண்ணாமலையை பார்ப்பதற்காக ஸ்ருதி வீட்டிற்கு வந்தார். சுருதியை பார்த்தவுடன் விஜயாவிற்கு சந்தோசம். மீனா வீட்டில் இல்லாததை அறிந்த சுருதி மூடநம்பிக்கையில் இப்படி எல்லாம் நடந்து கொள்வதா? உங்கள் பயம் தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் என்றெல்லாம் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், விஜயா கேட்பதாகவே இல்லை.
சுருதி எவ்வளவு எடுத்து சொல்லியுமே விஜயா கேட்கவில்லை. கடைசியில் அங்கிருந்து ஸ்ருதி கிளம்பி விட்டார். அண்ணாமலை, முத்து விடம் மீனாவை அழைத்து வர சொன்னார். முத்து, அவளே வருவாள் என்றார். அதற்குப்பின் வீட்டில் உள்ள கணவன்மார்கள் எல்லோருமே தங்களுடைய மனைவிகளை விட்டு பிரிந்து இருப்பதால் வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் கண்ணுக்கு முன்பும் அவர்கள் மனைவி இருப்பது போல நினைத்து கவலைப்பட்டார்கள். மீனாவும் முத்துவை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
மறுநாள் காலையில் மீனாவை சந்தித்து சுருதி பேசி இருந்தார். மீனா, என்னால் மாமாவிற்கு எதுவும் ஆகக்கூடாது. அத்தையின் பயம் போகட்டும். அதற்கு பிறகு நான் வருகிறேன் என்றார். சுருதி, இத்தனை வருடமாக இல்லாமல் இப்போது ஏன் ஒரு சாமியாரை பார்க்கணும். இது உங்களை வீட்டை விட்டு அனுப்ப தான் திட்டம் போட்டார்கள். இதற்கெல்லாம் பின்னாடி ரோகிணி இருப்பாரோ? என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றார். மீனாவும் ஸ்ருதி சொல்வதை யோசித்துப் பார்த்தார். அந்த சமயம் பார்த்து ரோகினி அந்த இடத்திற்கு வந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் ரோகினி, என்னை போல் தான் நீங்களும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டீர்கள். எனக்கு சப்போர்ட் செய்தீர்கள் என்றால் மூவருமே அந்த வீட்டில் சந்தோஷமாக வாழலாம் என்கிறார். சுருதி, நாங்கள் எப்ப வேண்டும் ஆனாலும் அந்த வீட்டுக்கு போகலாம். நாங்கள் உனக்கு உதவி செய்ய மாட்டோம் என்கிறார். ரோகிணி, என்னை மீறி எப்படி அந்த வீட்டிற்கு போகிறீர்கள் என்று பார்க்கிறேன் என மிரட்டி விட்டு செல்கிறார். மீனாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் முத்து, ரவி இருவரும் வீட்டு வேலைகளை பிரித்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
மனோஜ் எதுவும் செய்யவில்லை. கேள்வி கேட்டால் விஜயா, மனோஜ் செய்ய மாட்டார் என்கிறார். அதற்குப்பின் அண்ணாமலை, இந்த வீட்டின் முதுகெலும்பே மீனா. அவர் இல்லாததால் வீடு கலை இழந்து இருக்கிறது என்கிறார். விஜயா, மீனாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்குப்பின் முத்து, மீனாவை சந்தித்து பேசுகிறார். அப்போது மீனா, ரோகிணி வந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இந்த சாமியார் விஷயத்தில் ரோகினியின் திட்டம் இருக்குமா என்று ஸ்ருதி சந்தேகப்படுகிறார் என்கிறார். முத்து, சாமியார் யார் என்பதை கண்டுபிடிக்கிறேன் என்று சொல்கிறார்