காணாமல் போன கிரிஷை நினைத்து வேதனைப்படும் ரோகினி, உண்மையை அறிந்தாரா முத்து? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண், முத்து தான் இப்படி எல்லாம் செய்தார் என்று தேவையில்லாததெல்லாம் சொல்லி சீதாவின் மனதை கலைக்க பார்த்தார். இன்னொரு பக்கம் மனோஜ் ஷோரூமுக்கு ராஜா- ராணி இவருமே தங்களுடைய வக்கீலை அழைத்து வந்து மீண்டும் பிரச்சினை செய்தார்கள். அப்போது வக்கீல், மனோஜ் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்கு கேஸ் போடுகிறேன். ஊர் முழுக்க ஆதாரத்தை ஒட்டி இந்த கடையின் மீது அசிங்கத்தை ஏற்படுத்துகிறேன் என்றார். கோபத்தில் மனோஜ், நானே போலீசை வர வைக்கிறேன் என்று சொன்னார். இதை கேட்டு ரோகினி ஷாக் ஆனார்.
ரோகினி, மனோஜை தடுத்து ராஜா- ராணி கேட்கும் பொருளை கொடுத்து அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் சீதாவை சந்தித்து மீனாவின் நிலைமையை பற்றி முத்து எடுத்து சொன்னார். பின் முத்து, நடந்த உண்மை நானே உனக்கு சொல்லி புரிய வைக்கிறேன் என்றார். சீதாவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பின் வீட்டில் மனோஜ், ராஜா- ராணி செய்த வேலையை பற்றி ரவியிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த முத்துவிடம் ரவி நடந்ததை சொன்னார் . உடனே முத்து, எதற்காக பணமும் பொருளும் கொடுத்தாய் என்று மனோஜை திட்டி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
பின் முத்து, இனி நீங்கள் போலீஸ் ஸ்டேஷன் போக முடியாது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் வாயில் உண்மையில் வருமாறு பேசி வீடியோ எடுத்து கொள் என்றார். இதை கேட்டு மீனா பாராட்டி இருந்தார். இதே போல் அருண் இடம் செய்யலாம் என்றார் முத்து. மறுநாள் காலையில் அருணை சந்தித்த முத்து, எதற்காக இப்படி செய்தாய்? என்று போட்டு வாங்கி இருந்தார். அருணுமே எல்லா உண்மையும் சொன்னார். இதை எல்லாம் காரில் இருந்து சீதா- மீனா இருவரும் கேட்டு விட்டார்கள். சீதாவை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார் அருண்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட் சீதா, நீங்கள் இப்படி நடந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. தயவு செய்து என்னிடம் எதுவும் பேசாதீர்கள். உங்களால் நான் என்னுடைய அக்கா மாமாவை தப்பா நினைத்து விட்டேன் என்று கோபப்பட்டு சண்டை போடுகிறார். மீனாவுமே தன்னுடைய பங்கிற்கு அருணை திட்டுகிறார். எதுவுமே பேச முடியாமல் அருண் அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப்பின் சீதா- மீனா இருவருமே பேசிக் கொள்கிறார்கள். இதை பார்த்து முத்து சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் கிரிஷ் தன்னுடைய அம்மாவை நினைத்து வேதனையில் இருக்கிறார். அப்போது அவருடன் படிக்கும் மாணவன், கிரிஷை வெறுப்பேற்றும் வகையில் பேச, கோபப்பட்டு கிரிஷ் அந்த பையனை அடித்து விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் பள்ளி ஆசிரியர், கிரிஷை போலீசில் பிடித்துக் கொடுப்பதாக மிரட்டுகிறார். அதனால் கிரிஷ் பயந்து வேண்டாம் என்று கத்துகிறார். அந்த சமயம் பார்த்து பள்ளிக்கு மீனா வருகிறார். ஆனால், கிரிஷை மீனா பார்க்கவில்லை. இன்னொரு பக்கம் அருண், சீதாவை சமாதானம் செய்வதற்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். சீதாவும் மனம் இறங்கி அருணை மன்னிக்கிறார். இருந்தாலுமே அருண் மனதிற்குள் முத்துவை பழிவாங்கும் எண்ணத்தில் தான் இருக்கிறார். கடைசியில் முத்து, சவாரியில் ஒரு நபரை அழைத்து செல்கிறார். அவர் தன்னுடைய மனைவியை புகழ்ந்து பேசுகிறார். முத்துவும் அதை பார்த்து ஆச்சரியப்பட்டு வியக்கிறார்.
https://www.youtube.com/watch?v=gqjfFwwevdE
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் டீச்சர் மிரட்டியதால் பள்ளிக்கூடத்தில் இருந்து கிரிஷ் ஓடி விடுகிறார். பின் முத்துவின் கார் டிக்கியில் கிரிஷ் ஒளிந்து கொள்கிறார். ஆனால், இது முத்துவிற்கு தெரியவில்லை. இன்னொரு பக்கம் கிரிஷை காணவில்லை என்று ரோகினி ரொம்பவே பயந்து கொண்டிருக்கிறார். அதற்குப்பின் காரை திறந்து பார்க்கும்போது கிரிஷ் இருப்பதை பார்த்த முத்து பதறிப் போய் அவரை எழுப்புகிறார். மீனாவும் கிரிஷுக்கு என்ன ஆனது என்று பயந்து கொண்டிருக்கிறார்.