ஆசிரியர் மிரட்டியதால் ஓடிப்போன கிரிஷ், கவலையில் தேடும் ரோகினி, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, மனோஜை தடுத்து ராஜா- ராணி கேட்கும் பொருளை கொடுத்து அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் சீதாவை சந்தித்து மீனாவின் நிலைமையை பற்றி முத்து எடுத்து சொன்னார். பின் முத்து, நடந்த உண்மை நானே உனக்கு சொல்லி புரிய வைக்கிறேன் என்றார். சீதாவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பின் வீட்டில் மனோஜ், ராஜா- ராணி செய்த வேலையை பற்றி ரவியிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த முத்துவிடம் ரவி நடந்ததை சொன்னார் . உடனே முத்து, எதற்காக பணமும் பொருளும் கொடுத்தாய் என்று மனோஜை திட்டி இருந்தார்.
பின் முத்து, இனி நீங்கள் போலீஸ் ஸ்டேஷன் போக முடியாது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் வாயில் உண்மையில் வருமாறு பேசி வீடியோ எடுத்து கொள் என்றார். இதை கேட்டு மீனா பாராட்டி இருந்தார். இதே போல் அருண் இடம் செய்யலாம் என்றார் முத்து. மறுநாள் காலையில் அருணை சந்தித்த முத்து, எதற்காக இப்படி செய்தாய்? என்று போட்டு வாங்கி இருந்தார். அருணுமே எல்லா உண்மையும் சொன்னார். இதை எல்லாம் காரில் இருந்து சீதா- மீனா இருவரும் கேட்டு விட்டார்கள். சீதாவை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார் அருண்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட் சீதா, நீங்கள் இப்படி நடந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. தயவு செய்து என்னிடம் எதுவும் பேசாதீர்கள். உங்களால் நான் என்னுடைய அக்கா மாமாவை தப்பா நினைத்து விட்டேன் என்று கோபப்பட்டு சண்டை போட்டார். மீனாவுமே தன்னுடைய பங்கிற்கு அருணை திட்டி இருந்தார். எதுவுமே பேச முடியாமல் அருண் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் சீதா- மீனா இருவருமே பேசிக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் கிரிஷ் தன்னுடைய அம்மாவை நினைத்து வேதனையில் இருந்தார். அப்போது அவருடன் படிக்கும் மாணவன், கிரிஷை வெறுப்பேற்றும் வகையில் பேச, கோபப்பட்டு கிரிஷ் அந்த பையனை அடித்து விட்டார்.
நேற்று எபிசோட்:
இதனால் பள்ளி ஆசிரியர், கிரிஷை போலீசில் பிடித்துக் கொடுப்பதாக மிரட்டி இருந்தார். அதனால் கிரிஷ் பயந்து வேண்டாம் என்று கத்தினார். அந்த சமயம் பார்த்து பள்ளிக்கு மீனா வருகிறார். ஆனால், கிரிஷை மீனா பார்க்கவில்லை. இன்னொரு பக்கம் அருண், சீதாவை சமாதானம் செய்வதற்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். சீதாவும் மனம் இறங்கி அருணை மன்னித்தார். இருந்தாலுமே அருண் மனதிற்குள் முத்துவை பழிவாங்கும் எண்ணத்தில் தான் இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் மிரட்டியதால் கிரிஷ் ரொம்பவே பயந்து விடுகிறார். இதனால் யாருக்கும் தெரியாமல் பள்ளிக்கூடத்தில் இருந்து கிரிஷ் ஓடி விடுகிறார். இதை அறிந்த ஆசிரியர், கிரிஷின் கார்டியனுக்கு போன் செய்து தகவல் சொல்கிறார். மகேஸ்வரி, ரோகினிக்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார். இதனால் ரோகிணி ரொம்பவே பயந்து விடுகிறார். பின் ரோகினி, கிரிஷை தேடி செல்கிறார். இன்னொரு பக்கம் முத்து சவாரியில் ஒரு நபரை இறக்கிவிட்டு நின்று கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து வந்த கிரிஷ், முத்து கார் என்று தெரியாமல் அவருடைய கார் டிக்கியில் எரி ஒளிந்து கொள்கிறார். இதை அறியாமல் முத்துவும் காரை எடுத்துக் கொண்டு செல்கிறார். பின் முத்து வரும் வழியில் மீனாவையும் அழைத்துக் கொண்டு வருகிறார். அப்போது அண்ணாமலையின் நண்பர் ரோட்டில் இருப்பதை பார்த்த முத்து, அவர்களையும் வீட்டில் கொண்டு போய் விட்டு உதவி செய்கிறார். அதற்குப்பின் மீனாவின் அம்மா வீட்டிற்கு முத்து கிளம்புகிறார். இன்னும் அந்த சமயத்தில் ரோகினி, மீனாவிற்கு போன் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.