முத்துவால் கதிகலங்கிய ரோகினி, சிட்டி என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ஸ்ருதி- ரவி இருவரும் தங்களுடைய முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாட பங்க்ஷன் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். பின் முத்து, தன்னுடைய மொபைலை வித்யாவிடம் காண்பித்து விசாரித்தார். உஷாரான வித்யா, ஏதேதோ காரணங்களை சொல்லி சமாளித்தார். இன்னொரு பக்கம் ரவி, ரெஸ்டாரண்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய திருமணநாளுக்கு லீவு வேண்டும் என்று தன்னுடைய ஓனரிடம் கேட்ட உடன் அவரும் சம்மதித்தார். அந்த சமயம் பார்த்து ஓனர் கீழே விழுந்ததால் அவரை தூக்கி கொண்டு வெளியில் வந்தார்.
இதை பார்த்த சுருதி பயங்கரமாக கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார். ரவி, சுருதியை சமாதானம் செய்ய வீட்டிற்கு வந்தார் . ஆனால், சுருதி வீட்டிலேயே இல்லை. வீட்டில் உள்ள எல்லோருமே ஸ்ருதி எங்கே? என்று கேட்டதற்கு ரவி ஏதேதோ சொல்லி சமாளித்தார். இதை பார்த்து முத்துவிற்கு சந்தேகம் வந்து ரவியிடம் விசாரித்தார். ரவி எல்லா உண்மையும் சொல்லி விட்டார். உடனே முத்து-மீனா இருவரும் சுருதியை தேடி போனார்கள். மண்டபத்திற்கு வந்த அனைவரும் ஸ்ருதியை தான் விசாரித்தார்கள். ரவிக்கு என்ன சொல்வது என்று புரியாமல் சமாளித்தார்.
சிறகடிக்க ஆசை:
இதையெல்லாம் பார்த்த ஸ்ருதியின் அப்பா, அம்மாவிற்கு சந்தேகம் வந்தது. ஒரு வழியாக முத்து-மீனா இருவரும் சுருதி இருக்கும் இடத்திற்கு சென்று விட்டார்கள். அப்போது அவரிடம் விசாரிக்க சுருதி, இனிமேல் அவனுடன் வாழ முடியாது. நான் வக்கீலை பார்த்து விவாகரத்து கொடுக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் இருவருமே ஷாக் ஆனார்கள். நேற்று எபிசோட்டில் ஸ்ருதி, ரவியின் உடைய சுயரூபம் எனக்கு தெரிந்து விட்டது. இனி நான் அவனுடன் வாழ மாட்டேன். வக்கீலை பார்த்து விவாகரத்து வாங்க போகிறேன் என்று சொன்னவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது.
நேற்று எபிசோட்:
பின், மீனா ரவியின் ஹோட்டலில் நடந்த விபரத்தை சொன்னவுடன் ஸ்ருதி, தான் செய்த தவறை உணர்ந்தார்.
மூவருமே மண்டபத்திற்கு கிளம்பி போனார்கள். இன்னொரு பக்கம் மண்டபத்தில் எல்லோருமே ரவியை சூழ்ந்து கொண்டு ஸ்ருதி எங்கே? என்ன பிரச்சனை? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, எந்த பதிலும் சொல்ல முடியாமல் ரவி திணறி இருந்தார். அந்த சமயம் பார்த்து ஸ்ருதி மண்டபத்திற்குள் வந்தார். பின் நல்லபடியாக தங்களுடைய திருமண நாளை ரவி- சுருதி இருவருமே கொண்டாடி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
பின் அவர்கள், தங்களுக்கு துணையாக இருந்த முத்து,மினாவை பற்றி ரொம்ப பெருமையாகவும் பேசி இருந்தார்கள். அதற்கு பின் பாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரவி- சுருதி இருவருக்கும் எல்லோரும் பரிசு கொடுத்தார்கள். நல்லபடியாக தங்களுடைய திருமண நாளை கொண்டாடி முடிக்கிறார்கள். பின் வீட்டில் உள்ள எல்லோருமே அதை பற்றி சந்தோஷமாக பேசி இருக்கிறார்கள். அப்போது ஸ்ருதி, மீனாவிற்கு பரிசு கொடுக்கிறார். இதை பார்த்தவுடன் ரோகினி, மனோஜ் இருவரும் வயிறு எரிகிறது. இன்னொரு பக்கம் ட்ராபிக் போலீஸ் ஹாஸ்பிடலில் தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது அவர்கள் அட்மிட் பண்ண சொல்கிறார்கள். ஆனால், அவருக்கு நேரம் இல்லாததால் தயங்குகிறார். உடனே சீதா, நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வேலையை முடித்துவிட்டு அம்மாவை அழைத்து செல்லுங்கள் என்று சொன்னவுடன் அந்த போலீஸ் ரொம்ப சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி- சிட்டி இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது ரோகினி, சத்யா வீடியோ வெளியில் வந்ததை பற்றி முத்து தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார். நீதான் என்று தெரிந்தால் பிரச்சனையாகும் என்று சொல்கிறார். உடனே சிட்டி, அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.