சத்யாவின் காதல் விவகாரம் அறிந்து கொந்தளித்த மீனா, முத்து சொன்ன அறிவுரை - பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, சந்தோஷை ஒரு இடத்திற்கு வரவைத்து சவுக்கடிப்பவரை வைத்து அடி வெளுத்து வாங்கினார். பின் சந்தோஷ், மனோஜிக்கு போன் செய்து நடந்ததை சொன்னார். முத்து-மனோஜ் இருவருமே அந்த இடத்திற்கு போனார்கள். பின் எப்படியோ அந்த நபரிடம் இருந்து சந்தோஷை முத்து காப்பாற்றினார். பின் இதெல்லாம் ரோகிணியின் வேலை என்று தெரிந்தவுடன் மனோஜ் கோபப்பட்டார். பின் இதைப் பற்றி எல்லாம் முத்து, ரவி இருவரும் மீனா-ஸ்ருதி இடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் முத்து, நீத்து விஷயத்தில் ஏதாவது செய்யணும் என்றார்.
ரோகிணி, நீ போடும் திட்டமெல்லாம் உன்னை மாதிரி சொதப்பலாக தான் இருக்கிறது. இவன் எல்லாம் ஒரு ஆளு, இவனை வைத்து திட்டம் போடுகிறாயா? என்றார். பின் தனக்கு கிடைத்த ஒரு புது ஆர்டரை மனோஜிடம் கொடுத்துவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் முத்து- மீனா வேலை செய்யும் இடத்திற்கு அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்கள் நன்றி சொல்ல வந்தார்கள். அப்போது முத்து வண்டி ஓட்டுவதை அறிந்த அந்த நபர், நீங்க வேன் வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்பாடு நான் செய்து தருகிறேன். இங்கு நிறைய டூர் போவார்கள். உங்களுக்கும் நிறைய ஆர்டர் கிடைக்கும் என்றார்.
சிறகடிக்க ஆசை:
முத்து-மீனா இருவரும் புதிய தொழில் கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் பார்வதியின் வீட்டிற்கு சிந்தாமணி, விஜயா இருவருமே வந்தார்கள். அப்போது மனோஜை பெண்பார்க்கும் விஷயமாக இருவர் வந்தார்கள். அப்போது அவர்கள், பெண்ணிற்கு 30 வயது. ஆனால், பெரிய வசதியான வீடு என்றார்கள். இதனால் சந்தோஷப்பட்ட விஜயா, என் மகனையுமே நிறைய பேர் கேட்டார்கள். என் பையன் பெரிய தொழிலதிபர் என்றெல்லாம் பில்டப் விட்டார். பின் இதைப் பற்றி சிந்தாமணி, ரோகினி இடம் சொன்னார். அதனால் ரோகிணி கோவப்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் போட்டு உடைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, மனோஜ் எனக்கு மட்டும்தான் சொந்தம். அவர் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள விட மாட்டேன் என்றெல்லாம் சபதம் விடுகிறார். இன்னொரு பக்கம் பெண் வீட்டார் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதால் விஜயா, மனோஜிடம் சொல்கிறார். பின் விஜயா, பெண் பார்க்க போகும் விஷயத்தைப் பற்றி அண்ணாமலை இடம் சொல்கிறார். முத்து, கிண்டல் செய்கிறார். உடனே விஜயா கோபப்பட்டு திட்டுகிறார். பின் மனோஜ் தனக்கு பெண் பார்க்கும் விஷயம் அறிந்தவுடன் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சத்யா பிறந்தநாள் என்பதால் மீனா அம்மா வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள். அந்த சமயம் பார்த்து ரேகா சத்யாவிற்காக காஸ்ட்லி கிப்டையும் கேக்கையும் வாங்கிக் கொண்டு வருகிறார். அதை பார்த்து முத்து, மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் ரேகா வாங்கி வந்த கேக்கை வெட்டி எல்லோருமே கொண்டாடுகிறார்கள். அதற்கு பின்பு ரேகா, இந்த நாளில் உங்களிடமிருந்து நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். இதைக் கேட்ட முத்து, மீனா இருவரும் சத்யாவிடம் விசாரிக்கிறார்கள். சத்யா, ரேகா தன்னை காதலிக்கும் விஷயத்தை பற்றி சொல்கிறார். முத்து, நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய் என்று கேட்கிறார். சத்யா, நானும் காதலை சொல்ல போகிறேன் என்கிறார். மீனா கோபப்பட்டு திட்டுகிறார். முத்து அதெல்லாம் ஒன்றும் இல்லை. உனக்கு பிடித்திருந்தால் காதலி. உனக்காக நான் சப்போர்ட் செய்கிறேன் என்று சொல்கிறார்.