காதல் விஷயத்தை போட்டுடைத்த சத்யா, ரேகா அப்பா எடுக்கும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை
காதல் விஷயத்தை போட்டுடைத்த சத்யா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பல போராட்டங்களுக்குப் பிறகு முத்து குடும்பம் வீட்டிற்கு வந்ததால் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். தங்களுக்கு தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் எல்லோரையுமே அழைத்து இருந்தார்கள். எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து மனோஜ்க்கு கோபம் தான் வருகிறது. பார்வதி, மூத்த மகனால் தான் இந்த வீடு போக இருந்தது. ஆனால், முத்து இந்த வீட்டை உனக்காக மீட்டு கொடுத்து விட்டான். முத்துவிற்கு உன் மேல் ரொம்பவே பாசம் என்றார். அதை கேட்டு விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
நல்லபடியாக தங்களுடைய வீட்டில் பூஜையை செய்தார்கள். அப்போது அண்ணாமலை, முத்து-மீனாவை பூஜையில் உட்கார சொன்னார். விஜயாவும் மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். பின் சந்தோஷமாக முத்து-மீனா இருவரும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு பூஜையில் உட்கார்ந்தார்கள். மொத்த வீடுமே சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், மனோஜ் மட்டும் வேதனையில் இருந்தார். அதற்குப்பின் விஜயா மனோஜிடம் நலம் விசாரித்தார் அப்போது மனோஜ் ரோகிணியை பற்றி ரொம்ப பெருமையாகவும் அவருடன் சேர்ந்து மீண்டும் சேர்ந்து வாழ்வதை பற்றி எல்லாம் பேசி இருந்தார். இதனால் கொந்தளித்த விஜயா, ரோகினிக்கு போன் செய்து கண்டமேனிக்கு மோசமாக பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
ரோகிணியும் விஜயா பேசுவதை தாங்க முடியாமல் கோபப்பட்டார். ஒரு கட்டத்தில் விஜயா, ரோகினியை திட்டி போனை வைத்துவிட்டு மனோஜ்க்கு வார்னிங் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் ரோகிணியுடன் சேர்ந்து எங்கும் போகக்கூடாது, பேசக்கூடாது என்றெல்லாம் விஜயா கண்டிஷன் போட்டார். மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் ரேகாவிடம் பேச முடியாததால் சத்யா கவலையில் இருந்தார். மீனா, இந்த காதல் தேவை இல்லை. தயவு செய்து உன்னுடைய வேலையை பார் என்றார். மீனாவின் அம்மாவும் சத்யாவை திட்டி அறிவுரை சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவும் அவருடைய அம்மாவும் சத்யாவின் காதலுக்கு எதிராக நிற்கிறார்கள். ரேகாவை மறக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். சத்யவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் இதைப்பற்றி சத்யா, முத்துவிடம் சொல்கிறார். முத்து, எதுவாக இருந்தாலும் நான் உனக்கு துணையாக இருப்பேன். நீ முதலில் ரேகா அப்பாவிடம் உன்னுடைய காதலை சொல்லிவிடு. அதற்கு பிறகு முடிவெடுக்கலாம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் கார்ப்பரேட் விழாவிற்கு ரோகிணி சென்றிருக்கிறார். விழாவில் கலந்து கொள்வதற்காக ரோகிணி, மனோஜை வர சொல்கிறார். அப்போது விஜயா, என்னுடைய தோழி நம் இருவரையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொல்கிறார். நாம் சிறந்த அம்மா- மகன் காண விருதை வாங்கிக் கொண்டு வரலாம் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
மனோஜால் எதுவும் பேச முடியவில்லை தன் அம்மாவுடன் செல்கிறார். விஜயா சொன்ன நிகழ்ச்சியும் ரோகினி சொன்ன நிகழ்ச்சியும் ஒன்று தான். ரோகிணியை பார்த்தவுடன் விஜயா முறைக்கிறார். மனோஜ் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். இன்னொரு பக்கம் ரேகாவின் அப்பாவை சந்தித்த சத்யா, தங்களுடைய காதலை பற்றி போட்டு உடைத்து விடுகிறார். ரேகாவின் அப்பா, எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவு எடுக்கிறேன் என்று சொல்கிறார். சத்யாவும் சரி என்று அங்கிருந்து வந்து விடுகிறார். பின் இதைப்பற்றி சத்யா, முத்துவிடம் சொல்கிறார். முத்து, அவர் நல்ல முடிவு தான் சொல்லுவார் என்கிறார்.