சத்யா-ரேகாவின் திருமணத்தில் விஜயா செய்யும் சூழ்ச்சி, சிந்தாமணி செய்த சம்பவம் - சிறகடிக்க ஆசை
சத்யா-ரேகாவின் திருமணத்தில் விஜயா செய்யும் சூழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகிணி, யாரிடம் இப்படி பொய் பேச கற்றுக் கொண்டாய்? எதற்காக இப்படி செய்கிறாய் என்று கேட்டார். கிரிஷ், உன்னிடம் தான் நான் கற்றுக் கொண்டேன். நீ தான் என்னை பொய் பேச சொன்னாய். என்னிடம் எல்லாரிடமும் நீ கோபப்படுகிறாய் என்று ரோகிணி தவறை சுட்டிக்காட்டினார். எதுவும் பேசாமல் அங்கிருந்து அழுது கொண்டே ரோகினி வெளியே வந்து விட்டார். பின் தன் மகனின் வாழ்க்கை தன்னாலே கெட்டுப் போனது நினைத்து ரோகினி வருத்தப்பட்டார். அது மட்டும் இல்லாமல் தன் மகனை நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் ரோகினி நினைத்தார்.
இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் சத்யா- ரேகா இருவருக்கும் திருமணம் செய்வது பற்றி வீட்டில் பேசி இருந்தார்கள். விஜயா, சீக்கிரமாகவே திருமணம் ஏற்பாடு செய். அந்த சிந்தாமணி முகத்தில் கறியை பூச வேண்டும் என்றார். பின் தாம்பூல தட்டோடு சிந்தாமணியின் வீட்டிற்கு சென்று ரேகா-சத்யா திருமணத்தை பற்றி முத்து-மீனா பேசி இருந்தார்கள். இதனால் கொந்தளித்த சிந்தாமணி, என்னை மீறி நீ எப்படி திருமணத்தை நடத்துகிறாய்? என்று சவால் விட்டார். முத்து, கண்டிப்பாக இந்த திருமணம் நடக்கும் என்று பதிலுக்கு சவால் விட்டு வந்தார்.
சிறகடிக்க ஆசை:
சத்யா, ரேகாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் முத்து-மீனா செய்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சிந்தாமணியும் அவருடைய கணவரும் திருமணத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று தங்களுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியிடம் உதவி கேட்டிருந்தார்கள். அதற்குப் பின் மனோஜ், கனகாவின் அம்மா சொன்ன ப்ரோபசல் பற்றி என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தார். அப்போது வந்த ஜோதிடர், இது உங்களுக்கு நல்ல வாய்ப்பு. அந்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மனோஜ் கடைக்கு வந்த ரோகிணி, நீ என்னிடம் எப்போதும் வரப்போவதில்லை. நீ உன்னுடைய அம்மாவை பற்றி யோசிக்கிறாய். நான் என் மகனைப் பற்றி யோசிக்க விரும்புகிறேன். ஐந்து லட்சம் பணத்தை கொடுத்துவிடு. நான் விவாகரத்து கொடுத்து விடுகிறேன் என்றார். இதைக்கேட்டு மனோஜிக்கு கஷ்டமாக இருக்கிறது. பின் வீட்டிற்கு சென்ற மனோஜ், ரோகினி உடன் இருந்த நினைவுகளை எல்லாம் நினைத்து பார்த்து வருத்தப்பட்டார். ரோகினிக்கு விவாகரத்து கொடுப்பதா? கனகாவை திருமணம் செய்து கொள்வதா? என்று புரியாமல் குழம்பி போய் இருந்தார் மனோஜ்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சத்யா, ரேகாவின் திருமணம் முத்துவின் பாட்டி வீட்டில் நடக்கிறது. இதை தகவலை விஜயா, சிந்தாமணிக்கு சொல்லி விடுகிறார். சிந்தாமணியும் வேகவேகமாக கல்யாணத்தை நிறுத்த வருகிறார். ஆனால், கல்யாணம் நடந்து விடுகிறது. இதனால் கொந்தளித்த சிந்தாமணி, முத்துவை அரிவாளால் வெட்ட போகிறார்.