முத்து வைத்த செக்கால் ஆடிப்போன போலீஸ், விடுதலையானரா சத்யா? சிறகடிக்க ஆசை

விடுதலையாகும் சத்யா

By subhashini · 11/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, நீ தைரியமாக இரு. ரேகாவின் அப்பாவிடம் பேசி இருக்கிறோம் என்றார். அதற்குப்பின் சிந்தாமணி, அவருடைய கணவரும் ஹோட்டலில் சந்தித்து பேசி கொண்டார்கள். சத்யா தன்னிடம் சொன்ன விஷயத்தை எல்லாம் சிந்தாமணியிடம் ரேகாவின் அப்பா சொன்னார். சிந்தாமணி, நான் ஒரு யோசனை சொல்கிறேன். அதைப்படியே செய்யுங்கள். ரேகாவை சென்னைக்கு வர வைத்து ஒரு ரூமில் அடைத்து வைத்து விடுங்கள். போலீஸ் ஸ்டேஷனில் சத்யா தான் கடத்திவிட்டான் என்று புகார் கொடுத்து விடுங்கள். போலீஸ் பண்ணும் டார்ச்சலில் சத்யாவின் குடும்பம் ரேகாவின் பக்கம் திரும்பவே மாட்டார்கள் என்றார். ரேகாவின் தந்தையும் சிந்தாமணியின் ஐடியாவிற்கு ஒத்துக் கொண்டு ரேகாவிடம் பேசி இருந்தார்.

சிந்தாமணி கொடுத்த புகாரால் போலீஸ் சத்யாவை கைது செய்தார்கள். சத்யா, தனக்கும் ரேகா கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். போலீஸ் அதை கேக்கவே இல்லை. சத்யாவை அடித்து இழுத்துக் கொண்டு சென்றார்கள். மீனாவின் அம்மா சந்திரா, எவ்வளவு எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், போலீஸ் கேட்பதாக இல்லை. பின் சந்திரா, மீனா- முத்து எல்லோருக்குமே போன் செய்து நடந்ததை சொன்னார். போலீஸ் ஸ்டேஷனில் சத்யாவை அடி வெளுத்து வாங்கினார்கள். வலி தாங்க முடியாமல் சத்யா கதறினார். அதை பார்த்து சந்திரா ரொம்பவே உடைந்து போனார். அப்போது வந்து அருணிடம் சந்திரா- சீதா இருவரும் சத்யாவை காப்பாற்ற சொல்லி கெஞ்சினார்கள். ஆனால், அருண் எதுவும் செய்ய முடியாது என்று அங்கிருந்து சென்றார்.

சிறகடிக்க ஆசை:

முத்து- மீனா இருவருமே போலிஸிடம் எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. அதற்குப்பின் முத்து, நீ சிந்தாமணியை பாலோ செய்து ரேகா இருக்கும் இடத்தை கண்டுபிடி என்று அனுப்பி வைத்தார். மீனாவும் சிந்தாமணியை பாலோ செய்து போனார். சிந்தாமணி அவருடைய கணவரும் ஒரு வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த நபரிடம் மீனா, பைனான்சியரிடம் பணம் வாங்க வேண்டும் என்றார். அந்த நபர், சிந்தாமணியின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் சென்று பேசி என்றார். அதற்குப் பின் மீனா, அந்த பெண்ணிடம் பணம் வேண்டும் என்பது போலவே பேசி இருந்தார். அவர், ரேகா தான் உதவி செய்வார். ஆனால், அவர் காலையில் இருந்து வீட்டை விட்டு வெளிய வரவில்லை என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவின் நண்பர் மிஸ்ரா, போலீஸ் இடம் சத்யாவை விடுதலை செய்ய சொல்லி கேட்கிறார். ஆனால், போலீஸ் ஒத்துக்கொள்ளவில்லை. மிஸ்ரா, இது முழுக்க முழுக்க பொய் கேஸ். ரேகா அவருடைய வீட்டில் தான் இருக்கிறார். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. நீங்கள் சத்யாவை விடுதலை செய்யவில்லை என்றால் கமிஷனரிடம் உங்கள் எல்லோர் மீதும் புகார் கொடுப்பேன் என்கிறார். இதனால் பயந்து போன போலீஸ், ரேகாவின் அப்பாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை சொல்கிறார். அதற்கு பின் சத்யாவையும் விடுதலை செய்கிறார்கள். பின் மீனா-முத்து இருவரும் அருணின் செயலை கண்டித்து திட்டுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் சத்யா விடுதலை ஆனதால் சிந்தாமணி பயங்கரமாக கோபப்படுகிறார். ரேகாவின் அப்பா, இனி என்ன செய்வது என்று புலம்புகிறார்? அப்போது சிந்தாமணி, ரேகாவை உண்மையாலுமே கடத்திவிடலாம் என்று திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த சத்யாவிடம் சந்திரா, மீனா, சீதா மூவருமே ரேகாவை மறந்துவிட சொல்லி வற்புறுத்துகிறார்கள். சத்யா, ரேகாவை கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறார். அப்போது வந்த முத்து, நீங்கள் இப்படி எல்லாம் கட்டாயப்படுத்தினால் ரேகா மருந்து குடித்து இறந்து விடுவாள். இவனும் ரேகா போன கவலையில் தற்கொலை செய்து கொள்வான். இதெல்லாம் தேவையா? என்று உண்மையை எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். அதனால் மீனாவும் சத்யாவின் காதலுக்கு சப்போர்ட் செய்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full