கேவலமாக முத்து மீது பழி போட்டு சகுனி வேலை செய்த அருண், கோபத்தில் சீதா - சிறகடிக்க ஆசை

By subhashini · 28/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் ஸ்பீச் கொடுக்க தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது க்ரிஷ் படிக்கும் ஸ்கூலுக்கு தான் மனோஜ் செல்கிறார் என்ற விஷயத்தை அறிந்து கொண்ட ரோகினி ஷாக் ஆனார். இன்னொரு பக்கம் விஜயா மரக்கன்றுகளை நடுவதை பற்றி எல்லாம் பேசிய வீடியோ போட்டுக் கொண்டிருந்தார். இதை எல்லாம் பார்த்து முத்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்குப்பின் மனோஜ் காரில் சென்று கொண்டு இருக்கும் போது போன் செய்த ரோகினி, எனக்கு உடம்பு முடியவில்லை, என்னவோ செய்கிறது என்று ஏதேதோ காரணங்களை சொல்வதால் மனோஜ் பதறி கொண்டு வீட்டிற்கு கிளம்பப் பார்த்தார்.

ரோகினி உடம்பு முடியவில்லை என்று சொன்னதால் மனோஜ் பள்ளிக்கூடத்திற்கு போகாமல் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு வாசலில் நாய், மனோஜை பார்த்து குறைக்கிறது. கோபத்தில் மனோஜ் அந்த நாயை அடிக்கும் போது அந்த நாய் மனோஜின் காலை கடித்து விட்டது. பின் வலி தாங்க முடியாமல் மனோஜ் கத்தினார். அந்த நாயின் உரிமையாளர், மனோஜை வீட்டில் கொண்டு வந்து விட்டு நடந்ததை சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே வழக்கம் போல மனோஜை கேலி செய்து பேசி இருந்தார்கள். அப்போது மனோஜை செக் செய்த டாக்டர், அந்த நாய் உயிருடன் இருக்க வேண்டும். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பயமுறுத்துவிட்டு சென்றார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் மனோஜ் ஒவ்வொரு செயலையும் நாய் மாதிரியே செய்து கொண்டிருந்தார். இதனால் விஜயா ரொம்பவே பயப்பட்டார். அந்த சமயம் பார்த்து நாயை காணவில்லை என்று உரிமையாளர் புலம்பி கொண்டிருந்தால் மனோஜ், நாய் செத்துவிட்டது என்று நினைத்து கொண்டு நானும் செத்து விடுவேன், எனக்கு என்னென்னவோ ஆகிறது என்றெல்லாம் அலப்பறை செய்து கொண்டிருந்தார். உடனே முத்து, உனக்கு ஒன்றும் ஆகாது. நான் பார்த்துக்கொள்கிறேன். நீ தேவையில்லாததை எல்லாம் யோசிக்காதே அவருக்கு அறிவுரை சொன்னார். அதற்கு பின் ரோகினி, கிரிஷை பார்க்கப் போனார்.

நேற்று எபிசோட்:

அந்த இடத்தில் மீனா, தன்னுடைய தம்பி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். கிரிஷை பார்த்த மீனா, கத்திக்கொண்டே வந்தார். உடனே ரோகினி, கிரிசை வேகமாக காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் டிராபிக் ரூல்ஸ் மீறி சில பேர் வண்டி ஓட்டி வந்ததால் அருண் அவர்களை பின்தொடர்ந்து சென்று சண்டை போட்டார். அந்த வழியாக வந்த முத்து, அருணை காப்பாற்றி அந்த நபர்களை அடித்து விரட்டினார். இதனால் அருணுக்கு தலையில் அடிபட்டது. ஆனால், முத்து தனக்கு உதவி செய்ததற்கு நன்றி கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அருண் சென்று விட்டார். கடைசியில் ரோகினி, கிரிஷ் இடையே வாக்குவாதம் நடந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகிணி, க்ரிஷ்க்கு எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். கிருஷ் அதை ஏற்றுக் கொள்கிறார். இன்னொரு பக்கம் முத்து, அருணை மூன்று பேர் சேர்ந்து அடித்த விஷயத்தை பற்றி மீனாவிடம் சொல்கிறார். அதற்கு மீனா, நன்றி கூடவா உங்களிடம் சொல்லவில்லை என்கிறார். உடனே முத்து, அவர் பேசி இருந்தால் நானும் கண்டிப்பாக பழசை மறந்து பேசி இருப்பேன் என்று சொல்கிறார். தன்னுடைய கணவர் பெருந்தன்மையாக நடந்து கொள்வதை நினைத்து மீனா சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் தலையில் அடிபட்டதை பார்த்து சீதா பயந்து போனார். உடனே அருண், ஒரு மூன்று பேர் விதியை மீறி சென்றதால் நான் அவர்களை பிடித்து கேட்டேன். அதற்கு அவர்கள் என்னை தாக்கி விட்டார்கள். நானும் சமாளித்து பார்த்தேன் முடியவில்லை. அந்த பக்கம் வந்த முத்து காப்பற்றினார். ஆனால், முத்து அந்த சமயத்தில் எப்படி வந்தார் தெரியவில்லை.

சீரியல் ட்ராக்:

அவர் வைத்த ஆளாகத்தான் அந்த நபர்கள் இருந்தார்கள். அவர் சொன்ன உடனே கேட்டு சென்று விட்டார்கள் என்கிறார். இதையெல்லாம் கேட்டு சீதாவிற்கு முத்து மீது கோபம் வருகிறது. பின் சீதா, தன் அக்காவிற்கு போன் செய்து பேச வரவைற்கிறார். இதை பார்த்த உள்ளுக்குள் அருண் சந்தோசப்படுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ், மனோஜனின் நண்பர், ரோகினி மூவருமே ஸ்கூலில் நடந்ததை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஸ்கூலில் எடுத்த போட்டோவை எல்லாம் மனோஜின் தோழர் காண்பிக்கிறார். அதில் கிரிஷ் இருந்த போட்டோவை ரோகிணி எடுத்து கிழித்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full