தன் தவறை உணர்ந்து மீனாவிடம் மன்னிப்பு கேட்ட சீதா, முத்து சொன்ன வார்த்தை - சிறகடிக்க ஆசை

By subhashini · 28/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, சீதாவின் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்தார். இதனால் அருணுக்கு பயங்கர கோபம் வருகிறது. அதற்குப்பின்
முத்து- சத்யா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்து, கஷ்டப்பட்டு இருப்பவர்களிடம் அநியாயவட்டி போட்டு பணத்தை வாங்குவது ரொம்ப தவறு. அதனால்தான் அந்த ஆட்டோ டிரைவர் ஆள் வைத்து பணம் திருடினார். தயவு செய்து இந்த தொழில் வேண்டாம். இந்த பாவம் உன்னை சும்மா விடாது என்றார்.

நீத்து ரெஸ்டாரண்ட்க்கு வந்த சுருதி, சாப்பாடு ஆர்டர் செய்தார். நீத்துவுக்கு ஒன்னுமே புரியவில்லை. உடனே சுருதி, நீங்கள் என்னிடம் வேலை செய்பவர்களை விலை கொடுத்து வாங்கும்போது உங்களிடம் ஆர்டர் வாங்க வேண்டாமா? அதோடு நான் கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுத்து இருக்கிறேன் என்றெல்லாம் பேசுவதால் நீத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. இதையெல்லாம் கேட்ட ரவி, எதற்காக இப்படி செய்தீர்கள்? என்றார். அதற்கு நீத்து, இதெல்லாம் ஒரு அரசியல் என்றார். ரவி, இது சுத்தமாக சரி இல்லை என்று சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் சத்யா, முத்து சொன்னதை நினைத்து பார்த்து தன்னுடைய ஓனரிடம் வேலை வேண்டாம் என்றார். ஆனால், அங்கு இருந்தவர் ஓனரின் மகள் ரேகா. அதாவது, சிந்தாமணியின் மகள் தான் அந்த இடத்தில் இருந்தார். சத்யா, அதிக வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களுடைய சாபம் வாங்க எனக்கு விருப்பம் இல்லை என்றார். இதை கேட்ட ரேகா, வட்டியை குறைத்து பைனான்ஸ் நடத்தலாம் என்று தன் அப்பாவிடம் சொல்வதால் அவரும் ஒத்துக்கொண்டார். பின் பழையபடி சத்யாவும் அந்த இடத்தில் வேலை செய்ய சம்மதித்தார். அதற்கு பின் சிந்தாமணி தன் மகளை சந்தித்து ரொம்ப அன்பாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுருதி, ரவிக்கிடையே சண்டை நடந்து கொண்டிருப்பதை முத்து-மீனா இருவரும் கவனிக்கிறார்கள். பின் இவர்கள் இடையே இருக்கும் சண்டையை தீர்த்து வைக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் சீதாவிடம் பணத்தை கொடுத்து பேங்கில் போட சொல்கிறார்கள். சீதா, இந்த முறை வேண்டாம் என்று பயப்படுகிறார். இருந்தாலுமே ஹாஸ்பிடல் இன்சார்ஜ், நீயே கொண்டு போய் கொடு, பயப்படாதே என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். பின் சீதா ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர், முத்துவை பார்த்து அவரிடம் நன்றி சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்து சீதா, எதற்காக நேரம் வீணடிக்கிறீர்கள், கிளம்புங்கள் என்று சொல்கிறார். உடனே அந்த ஆட்டோ டிரைவர், முத்துவால் தான் இன்று நான் ஜெயிலுக்கு போகாமல் இருக்கிறேன். பணத்தை திருடியது நான்தான். உன்னுடைய வேலையும் போகக்கூடாது, நானும் ஜெயிலுக்கு போகக்கூடாது என்று முத்து தான் உதவி செய்தார் என்று சொல்கிறார். இதை கேட்டு சீதாவின் மனம் மாறுகிறது. பின் முத்து அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் மீனா தன்னுடைய அம்மாவிடம் சீதாவை பற்றி ரொம்ப எமோஷனாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த சீதா, மீனாவிடம் மன்னிப்பு கேட்டு முத்துவிற்கு போன் செய்து மன்னிப்பு கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full