தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட சீதா, முத்து சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 26/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிவன், கதை கொடுத்து பார்வதியிடம் படிக்க சொன்னார். அந்த சமயம் வந்த மீனா, இந்த கதை நன்றாக இருக்கிறது. நீங்கள் படிக்கும் போது இதை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் போடுங்கள் என்று ஐடியாக்களை சொன்னார். அந்த சமயம் வந்த விஜயா வழக்கம் போல் மீனாவையும் பார்வதியும் கண்டித்து திட்டினார். அதற்குப் பார்வதி, உனக்கு குடும்பம், மகன்கள், மருமகள் எல்லோரும் இருந்தார்கள். எனக்கு யாரும் இல்லை. சிவன் உடன் நண்பராகத்தான் பழகுகிறேன் என்றார்.

இன்னொரு பக்கம் தன் ரெண்டு மகள்களின் நிலைமையை நினைத்து மீனாவின் அம்மா உடம்பு சரியில்லாமல் போனது. பின் அவரை ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள். அதற்குப்பின் டாக்டர், மீனாவின் அம்மா ஓய்வு எடுக்க வேண்டும் என்றார். அப்போது மீனா, நான் ஒரு வாரம் நம் வீட்டிலேயே தங்கி உன்னை கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் வேலைக்கு போக வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். உடனே சீதா, நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். பின் மீனா-சீதா இருவரும் சண்டை போட்டார்கள். முத்து, சீதா வீட்டிற்கு அத்தை போகட்டும் என்றார்.

சிறகடிக்க ஆசை:

சீதா தான் பணத்தை திருடினார் என்று ஹாஸ்பிடல் இன்சார்ஜ் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது வந்து அருண், சீதா மீது எந்த தவறும் இல்லை என்று தன்னுடைய உயரதிகாரியிடம் சிபாரிசு லெட்டர் வாங்கிட்டு வந்து கொடுத்தார். இருந்தாலுமே அந்த ஹாஸ்பிடல் ஓனர், சீதா இங்கு வேலை செய்ய முடியாது. எங்கேயுமே வேலை செய்ய முடியாத மாதிரி செய்து விடுவேன் என்றெல்லாம் மிரட்டினார். அந்த சமயம் வந்த முத்து, சீதா மீது எந்த தவறும் இல்லை. திருடர்களை பிடித்து பணத்தை கொண்டு வந்த விட்டோம் என்றார்.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்து சீதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் முத்து, சீதாவின் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்தார். இதனால் அருணுக்கு பயங்கர கோபம் வருகிறது. அதற்குப்பின்
முத்து- சத்யா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்து, கஷ்டப்பட்டு இருப்பவர்களிடம் அநியாயவட்டி போட்டு பணத்தை வாங்குவது ரொம்ப தவறு. அதனால்தான் அந்த ஆட்டோ டிரைவர் ஆள் வைத்து பணம் திருடினார். தயவு செய்து இந்த தொழில் வேண்டாம். இந்த பாவம் உன்னை சும்மா விடாது என்றார்.

https://www.youtube.com/watch?v=5UkV2YLAxa4

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் மீனா, எப்படியாவது இந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்து நான் சீதாவிடம் பழையபடி பேசணும் என்று தன்னுடைய அம்மாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது வீட்டிற்கு வந்த சீதா, என்னை மன்னித்து விடுங்கள் அக்கா. எனக்கு மீண்டும் வேலை கிடைத்ததற்கு காரணம் மாமா தான் என்று நடந்ததை எல்லாம் சொல்கிறார். பிறகு சீதா, முத்துவிற்கு ஃபோன் செய்து மன்னிப்பு கேட்டு அழுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full