முத்து கொடுத்த டீவ்ஸ்டால் ஆடிப்போன அருண், சீதா என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் யோகா கிளாசில் சிந்தாமணியும் மாணவியாக சேர்ந்தார். அதற்குப்பின் மீனா, உடம்பு அசதியாக இருப்பதால் தூங்கிருந்தார். வீட்டிற்கு வந்த விஜயா கிச்சனில் சாப்பாடு எதுவும் இல்லாததால் கோபத்தில் தண்ணீரை எடுத்து தூங்கி இருந்த மீனாவின் முகத்தில் ஊற்றி விட்டார். இதை பார்த்த முத்து, கோபத்தில் விஜயா கையிலிருந்து ஜக்கை புடிங்கி கீழே போட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். அப்போது முத்து நடந்ததை சொன்னவுடன் ஸ்ருதி, அண்ணாமலை, ரவி எல்லோருமே விஜயாவை திட்டினார்கள்.
வழக்கம் போல் மனோஜ் தன்னுடைய அம்மாவிற்கு தான் சப்போர்ட் செய்தார். இருந்தாலுமே அண்ணாமலை கோபத்தில் விஜயாவை பயங்கரமாக திட்டி அனுப்பி விட்டார். பின் விஜயா, செய்த தவறுக்காக மீனாவிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். உடனே மீனா, நீங்கள் எதுவும் கேட்கத் தேவையில்லை மாமா என்று சொன்னார். அதற்குப்பின் மொட்டை மாடியில் அண்ணாமலை திட்டியதை நினைத்து பார்த்து விஜயா வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பின் அண்ணாமலை, விஜயாவை சமாதானம் செய்யப் போனார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் சீதா பேசியதை நினைத்து வேதனையிலேயே மீனாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனது. இதை அறிந்த முத்து தன்னுடைய பாட்டியிடம் வைத்தியம் கேட்டு அதை செய்து கொடுத்தார். பின் மீனா, சீதா சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். உடனே முத்து, இது அருண் செய்த வேலைதான். உங்கள் இருவரையும் பிரிக்க பார்த்தார். அதற்கு நான் ஒரு வழி செய்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் சத்யா, சீதா- மீனா இருவரையும் சேர்த்து வைப்பதற்காக சீதாவிடம் பேசி இருந்தார். ஆனால் சீதா, சத்யா செல்வதை கேட்கவே இல்லை. இது எல்லாம் அருண் ஒட்டு கேட்டு சந்தோஷப்பட்டார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் அருண், நான் எல்லோரும் ஒன்றாக தான் நினைக்கிறேன். முத்து தான் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்று இன்னும் தேவையில்லாததெல்லாம் சொல்லி சீதாவின் மனதை கலைக்க பார்த்தார். இன்னொரு பக்கம் மனோஜ் ஷோரூமுக்கு ராஜா- ராணி இவருமே தங்களுடைய வக்கீலை அழைத்து வந்து மீண்டும் பிரச்சினை செய்தார்கள். அப்போது வக்கீல், மனோஜ் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்கு கேஸ் போடுகிறேன். ஊர் முழுக்க ஆதாரத்தை ஒட்டி இந்த கடையின் மீது அசிங்கத்தை ஏற்படுத்துகிறேன் என்றார். கோபத்தில் மனோஜ், நானே போலீசை வர வைக்கிறேன் என்று சொன்னார். இதை கேட்டு ரோகினி ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, மனோஜை தடுத்து ராஜா- ராணி கேட்கும் பொருளை கொடுத்து அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் சீதாவை சந்தித்து மீனாவின் நிலைமையை பற்றி முத்து எடுத்து செல்கிறார். பின் முத்து, நடந்த உண்மை நானே உனக்கு சொல்லி புரிய வைக்கிறேன். தயவுசெய்து மீனாவை புரிந்து கொள்கின்றார். சீதாவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப் பின் வீட்டில் மனோஜ், ராஜா- ராணி செய்த வேலையை பற்றி ரவியிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த முத்துவிடம் ரவி நடந்ததை சொல்கிறார். உடனே முத்து, எதற்காக பணமும் பொருளும் கொடுத்தாய் என்று மனோஜை திட்டுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் முத்து, இனி நீங்கள் போலீஸ் ஸ்டேஷன் போக முடியாது. போனால் உங்களுக்கு தான் பிரச்சனை அடுத்த முறை வரும்போது அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் வாயில் உண்மையில் வருமாறு பேசி வீடியோ எடுத்து கொள் என்கிறார். இதை கேட்டு மீனா பாராட்டுகிறார். இதே போல் அருண் இடம் செய்யலாம் என்கிறார் முத்து. மறுநாள் காலையில் அருணை சந்தித்த முத்து, எதற்காக இப்படி செய்தாய்? என்று போட்டு வாங்கினார். அருணுமே எல்லா உண்மையும் சொல்கிறார். இதை எல்லாம் காரில் இருந்து சீதா- மீனா இருவரும் கேட்டு விடுகிறார்கள். சீதாவை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார் அருண். இத்துடன் சீரியல் முடிகிறது.