அருணின் சூழ்ச்சியால் முத்துவை மோசமாக பேசும் சீதா, கோபத்தில் கொந்தளித்த மீனா - சிறகடிக்க ஆசை

By subhashini · 17/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதி, தன் அம்மா சொன்னதை நம்பவில்லை. ரவிக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். அதற்குப்பின் மனோஜ்- விஜயா இருவருமே சேர்ந்து கொண்டு கிரிஷை வீட்டை விட்டு எப்படி துரத்துவது என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். ரோகினியால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்கு பின்பு ரூமுக்கு சென்ற மனோஜிடம் பேய் வந்தது போல ரோகிணி
நடித்துக் கொண்டு கிரிஷை வெளியில் அனுப்பக்கூடாது என்றார். பயத்தில் மனோஜ் எதுவும் செய்யமாட்டேன் என்றார்.

மயக்கம் தெளிந்த ரோகினி, எனக்கு என்னானது? என் உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா? ஹாஸ்பிடல் போகலாமா? என்றெல்லாம் நடிக்கிறார். மனோஜ், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ மயங்கி விட்டாய் என்று சமாளித்தார். அதற்குப்பின் முத்து நன்றாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். மீனா, சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா? என்றார். உடனே முத்து, மீனாவின் துணிகளை எல்லாம் பேக் செய்து நான் குடித்திருக்கிறேன். நீ உடனே வீட்டை விட்டு கிளம்ப போகிறாய் தானே என்றார். மீனா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்கு பின் முத்து, எதற்காக நீ கிரிசை தத்தெடுத்து ஒத்துக் கொள்ளவில்லை.

சிறகடிக்க ஆசை:

அதுக்கான காரணத்தை சொல் என்றார். மீனா, நீங்கள் தெளிவாக இல்லை. அதற்கு பிறகு சொல்கிறேன் என்றார். அதற்குப்பின் மீனா, ரோகினியை வரவைத்து உன்னால் தான் என் வாழ்க்கை பிரச்சனையில் இருக்கிறது. நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். தயவு செய்து வீட்டில் உண்மையை என்றார். மறுநாள் காலையில் ரோகினி, மனோஜின் புகைப்படத்தை வரைந்து கிரிசிடம் கொடுத்து எல்லோரிடமும் காண்பிக்க சொன்னார். கிரிஷ், தான் வரைந்ததாக எல்லோரிடமும் காண்பித்தார். எல்லோருமே பாராட்டினார்கள். ஆனால், விஜயா மட்டும் வழக்கம் போல கிண்டல் கேலி செய்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் மீனா, கிரிஷ் தத்தெடுக்காததற்கு காரணம் எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் நான் கிரிஷை அதேபோல் நடத்துவேனே என்று தெரியவில்லை .எனக்கு பயமாக இருந்தது. அதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன் என்கிறார். மீனாவின் நியாயத்தை புரிந்து கொண்ட முத்து மன்னிப்பு கேட்கிறார். பின் விஜயாவுமே மீனாவின் எண்ணத்தை பாராட்டுகிறார். இன்னொரு பக்கம் முத்து தன்னை அடித்ததால் உண்மையை சொல்லாமல் ஒன்னுக்கு ரெண்டாக வழக்கம் போல அருண் கதையை அவிழ்த்து விடுகிறார். இதைக் கேட்ட அருண் அம்மா, இனிமேல் நீ உன்னுடைய அக்கா, மாமாவுடன் பேசக்கூடாது என்றெல்லாம் ஏற்றி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இதனால் சீதாவும் கோபப்படுகிறார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் சீதாவிடம் பேசுவதற்காக மீனாவின் அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது வந்த சீதா, என்ன சொல்கிறார்கள் என்று கூட கேட்கவில்லை. வழக்கம் போல வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறார். மீனா, முத்து தரப்பு பற்றி சொல்லியுமே சீதா கேட்கவில்லை. கோபத்தில் சீதா, இந்த உறவு எங்களுக்கு தேவையில்லை. இனிமேல் நான் முத்து-மீனாவிடம் பேசப்போவதில்லை. யாரும் எங்களுக்கு தேவையில்லை. எங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள தெரியும் என்றெல்லாம் மோசமாக பேசுகிறார். இதைக் கேட்டு மீனா கோபப்பட்டு திட்டுகிறார். இருந்தாலுமே முத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full