மன்னிப்பு கேட்க சொல்லி மோசமாக பேசும் சீதா, கோபத்தில் மீனா சொன்ன விஷயம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-மீனா இருவரும் எதற்காக கிரிஸ் பாட்டி வந்தார்கள்? யாருக்கு உறவினர்? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். முத்து, கிரிஸ் பாட்டி ஏதோ ஒரு ரகசியத்தை மறைத்து இருக்கிறார். சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன் என்றார். இதை கேட்ட ரோகினி பயந்து கொண்டு தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து திட்டினார். அதற்குப்பின் முத்து சவாரிக்கு வரும் வழியில் ஒரு பெண் மீது பைக் மோதிவிட்டு சென்றுவிட்டது. இதனால் முத்து அவர்களுக்கு உதவி செய்கிறார். ஆனால், அருண் அந்த பைக்காரனை பிடிக்க சென்றார்.
அடிபட்ட பெண்ணை முத்து மருத்துவமனையில் சேர்த்து விட்டார். ஆனால், அருண் அந்த பைக்காரனை துரத்திக் கொண்டு சென்றார். இதையெல்லாம் சோசியல் மீடியாவில் போட்டு முத்துவை பெருமையாகவும் அருணை திட்டியும் பேசி இருந்தார்கள். இதை பார்த்த சீதா வருத்தப்பட்டார். பின் வீட்டில் அருணின் அம்மாவிற்கு சீதா ஆறுதல் சொன்னார். அப்போது வந்த அருண், என்னை 3 நாள்கள் சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள். இது எல்லாம் உன்னுடைய மாமா வேண்டும் என்று தான் செய்திருக்கிறார்.
சிறகடிக்க ஆசை:
என்னை பழி வாங்க தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்றார். அருணின் அம்மாவும் முத்துவை பற்றி தவறாக புரிந்து கொண்டு பேசியதால் சீதாவிற்கு இன்னும் முத்து கோபம் அதிகமானது.
இன்னொரு பக்கம் முத்துவை பெருமையாக பேசி டிவி, சோசியல் மீடியாவில் எல்லாம் வருவதை பார்த்து மீனா ரொம்ப சந்தோஷப்பட்டார். வழக்கம் போல விஜயா, மனோஜ் எல்லாம் வயிறு எரிந்தார்கள். வீட்டிற்கு வந்த முத்துவிற்கு சுத்தி போட்டு உள்ளே வரவைக்க வரவேற்கிறார் அண்ணாமலை. பின் முத்துவின் செயலை பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி-மனோஜ் இருவரும் அருணை பழி வாங்கத்தான் முத்து இப்படி செய்திருக்கிறார் என்று ரொம்ப ஏளனமாக பேசுகிறார்கள். உடனே மீனா கோபப்பட்டு பேசுகிறார். அதற்கு முத்து, எனக்கு யாரையும் அவமானப்படுத்தனும் என்ற எண்ணம் கிடையாது. நான் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்தேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது வந்த சீதா, உன் புருஷன் செய்வது சரியில்லை. உன் புருஷனால்தான் அருண் வருத்தப்பட்டு இருக்கிறார். அவருடைய சுயரூபம் இப்பதான் தெரிந்தது. அவருடைய நண்பர்களை வைத்து இப்படி எல்லாம் கீழ் தனமாக நடந்து கொள்வதா? என்றெல்லாம் மோசமாக பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதைக் கேட்டு மீனாவுக்கு கோபம் அதிகமாகிறது. சீதா, அருணிடம் உன் புருஷன் மன்னிப்பு கேட்கணும் என்கிறார். அதற்கு மீனா, என் கணவர் சம்மதித்தாலும் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். என் கணவர் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்கிறார். அதற்குப்பின் முத்துவின் செயலை பாராட்டி விருது கொடுப்பதாக சிலர் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். இதை பார்த்து வழக்கம் போல் விஜயா கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். முத்து, நான் எந்த விருதுக்காகவும் உதவி செய்யவில்லை என்று அவர்களை அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் மீனா, சீதா சொன்னதை எல்லாம் சொல்கிறார். அதற்கு முத்து, மன்னிப்பு கேட்பதால் ஒன்னும் நான் குறைந்து போக மாட்டேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.