உண்மை அறிந்து முத்துவை கேள்வி கேட்கும் சீதா, புது ரெஸ்ட்ராண்ட் தொடங்கிய ஸ்ருதி- சிறகடிக்க ஆசை

By subhashini · 10/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வீட்டில் மனோஜ், ரோகினி வாங்கிய பணத்தை பற்றி சொன்னார். இதனால் கோபப்பட்ட விஜயா ருத்ர தாண்டவம் ஆடி ரோகினியை வெளுத்து வாங்கினார். ரோகினியால் எதுவுமே பேச முடியவில்லை. அந்த சமயம் வந்த முத்து, மீனா வண்டி விஷயத்தை பற்றி சொன்னார். அதோடு இந்த விஷயம் எல்லாம் செய்தது சிந்தாமணி தான் என்றார். விஜயா அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். பின் மீனாவிற்கு புது வண்டி வாங்குவதை பற்றி முத்து சொன்னார்.

மீனாவிற்கு புது ஸ்கூட்டி வாங்குவதற்காக அண்ணாமலை பணம் தருகிறேன் என்று சொல்கிறார். அப்போது ஸ்ருதி- ரவி இருவருமே தங்கள் பங்கிற்கு பணம் தருகிறேன் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த விஜயாவிற்கு கடுப்பாகிறது. அதற்கு பின் ரூமில் ரோகினி, எதற்காக பணம் தந்த விஷயத்தை அத்தையிடம் சொன்னாய்? என்று மனோஜிடம் சண்டை வாகிறார். வழக்கம்போல் மனோஜால் எதுவும் பேச முடியவில்லை திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறார். அதற்குப்பின் சுருதி தன்னுடைய ஓட்டலுக்கு சமைக்க இருக்கும் செப் செய்த சாப்பாட்டை வீட்டிற்கு கொண்டு வந்து எல்லோருக்குமே பரிமாறுகிறார்.

சிறகடிக்க ஆசை:

எல்லோரும் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது. ரவி சமைத்த மாதிரியே இருக்கிறது என்றார்கள். அப்போது ஸ்ருதி, ரவியிடம் வேலை செய்த குமார் தான் என்னுடைய ரெஸ்டாரண்டுக்கு செப்பாக வர இருக்கிறார் என்றார். இதை எல்லாம் கேட்டு ரவிக்கு பயங்கர கோபம் தான் வந்தது. இன்னொரு பக்கம் சுருதியின் அம்மா- அப்பா இருவருமே ரவியை சந்தித்து புது ரெஸ்டாரண்டுக்கு போவதை பற்றி பேசினார்கள். ரவி என்னால், இப்போதைக்கு வர முடியாது என்றார். அந்த சமயம் பார்த்து நீத்து, ரவி இடம் ரெஸ்டாரன்ட் பற்றிய விஷயங்களை பேசிக் கொண்டிருப்பதால் சுருதியின் அம்மா, அப்பாவிற்கு பயங்கர கோபம் வந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, ஒரு வழியாக மீனாவிற்கு பேட்டரி ஸ்கூட்டியை முத்து வாங்கி தந்து விடுகிறார். பின் கோயிலில் பூஜை போட்டுவிட்டு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு போகிறார்கள் முத்து- மீனா. அப்போது அருண், ஸ்கூட்டியை பார்த்து நன்றாக இருக்கு என்று சொல்லி முத்துவின் சம்பளத்தையும் வேலையும் நக்கலாக பேசுகிறார். ஆனால், முத்து அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதற்குப்பின் சுருதி தன்னுடைய புது ரெஸ்டாரண்டை திறக்கிறார். அதற்கு வீட்டில் எல்லோருமே வந்து விடுகிறார்கள். நீத்துஅந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அதை பார்த்து சுருதியின் அம்மா, அப்பா இருவருமே பயங்கர , கோபப்படுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் செப் குமாரின் அத்தை, மாமா வருகிறார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை உயர் அதிகாரியும், கோகிலாவும் தான். மீனாவை பார்த்து கோகிலா, உங்கள் கணவர் முத்து ரொம்ப நல்லவர். உங்க அம்மாவின் கடை வருவதற்கு காரணம் முத்து தான். அருண், சிபாரிசு கடிதம் கொடுத்தார். ஆனால், என்னுடைய கணவர் ஒத்துக்கொள்ளவில்லை. பின் முத்து, அருண் செய்ததாக சொல்ல சொன்னார் என்கிறார். இதைக் கேட்ட சீதா, முத்துவிடம் கேள்வி கேட்கிறார். உடனே முத்து, யார் செய்தால் என்ன? அத்தை கடை வந்தால் போதும் என்று தன்னடக்கமாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full