முத்துவை மன்னிப்பு கேட்டு சொல்லும் சீதா, கோபத்தில் மீனா சொன்ன வார்த்தை - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ் அப்பா உறவினர், நீ கல்யாணி தானே, எப்படி இருக்கிறாய்? என்றெல்லாம் விசாரித்தார். உடனே ரோகிணி கோபப்பட்டு அவர்களைத் திட்டி அனுப்பி விட்டார். பின் நல்லபடியாக வித்யா- முருகன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு ரோகினி பேச்சை மீறி அவருடைய அம்மா வந்து சென்றிருந்தார். இது யாருக்கும் தெரியவில்லை. பின் வீட்டிற்கு வந்த முத்து, வித்யா- முருகன் கல்யாணத்தில் எடுத்த புகைப்படங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு புகைப்படத்தில் கிரிஸ் பாட்டி இருப்பதை பார்த்து சாக் ஆனார்கள்.
பின் முத்து-மீனா இருவரும் எதற்காக கிரிஸ் பாட்டி வந்தார்கள்? யாருக்கு உறவினர்? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். முத்து, கிரிஸ் பாட்டி ஏதோ ஒரு ரகசியத்தை மறைத்து இருக்கிறார். சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன் என்றார். இதை கேட்ட ரோகினி பயந்து கொண்டு தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து திட்டினார். அதற்குப்பின் முத்து சவாரிக்கு வரும் வழியில் ஒரு பெண் மீது பைக் மோதிவிட்டு சென்றுவிட்டது. இதனால் முத்து அவர்களுக்கு உதவி செய்கிறார். ஆனால், அருண் அந்த பைக்காரனை பிடிக்க சென்றார்.
சிறகடிக்க ஆசை:
அடிபட்ட பெண்ணை முத்து மருத்துவமனையில் சேர்த்து விட்டார். ஆனால், அருண் அந்த பைக்காரனை துரத்திக் கொண்டு சென்றார். இதையெல்லாம் சோசியல் மீடியாவில் போட்டு முத்துவை பெருமையாகவும் அருணை திட்டியும் பேசி இருந்தார்கள். இதை பார்த்த சீதா வருத்தப்பட்டார். பின் வீட்டில் அருணின் அம்மாவிற்கு சீதா ஆறுதல் சொன்னார். அப்போது வந்த அருண், என்னை 3 நாள்கள் சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள். இது எல்லாம் உன்னுடைய மாமா வேண்டும் என்று தான் செய்திருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
என்னை பழி வாங்க தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்றார். அருணின் அம்மாவும் முத்துவை பற்றி தவறாக புரிந்து கொண்டு பேசியதால் சீதாவிற்கு இன்னும் முத்து கோபம் அதிகமானது.
இன்னொரு பக்கம் முத்துவை பெருமையாக பேசி டிவி, சோசியல் மீடியாவில் எல்லாம் வருவதை பார்த்து மீனா ரொம்ப சந்தோஷப்பட்டார். வழக்கம் போல விஜயா, மனோஜ் எல்லாம் வயிறு எரிந்தார்கள். வீட்டிற்கு வந்த முத்துவிற்கு சுத்தி போட்டு உள்ளே வரவைக்க வரவேற்கிறார் அண்ணாமலை. பின் முத்துவின் செயலை பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்கள்.
https://youtu.be/X1Yg6bAGCKE?si=Nc-Q_g4oBkQkPEFn
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் முத்துவால் தான் நான் சஸ்பெண்ட் ஆனேன் என்று அருண் சொன்னதால் சீதா பயங்கரமாக கோபப்படுகிறார். பின் இதைப்பற்றி மீனாவிடம் சொல்லி சீதா சண்டை போடுகிறார். அதற்கு மீனா, என் கணவர் மீது எந்த தவறும் இல்லை. நீங்கள்தான் தவறாக புரிந்து இருக்கிறீர்கள். அவர் நல்லது தான் செய்தார் என்று சொல்கிறார். அதற்கு சீதா, வேண்டும் என்றுதான் மாமா இதெல்லாம் செய்திருக்கிறார். அவர் என் கணவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு மீனா, என் கணவரே ஒத்துக்கொண்டாலும் நான் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார்.