தன் காதலை மறைக்கும் சீதா, முத்துவுக்கு தெரிய வந்ததா- அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பாட்டி, இனிமேல் நீ இந்த வீட்டிற்கு உண்மையாகவும், மனோஜிற்கு உண்மையாகவும் இருக்க வேண்டும். சத்தியம் செய் என்று சொன்னார். ஒரு நிமிடம் செய் அமைதியாக இருந்தார். உடனே அண்ணாமலை, வேறு ஏதாவது சொல்லனுமா? என்று கேட்டதற்கு ரோகினி, எதுவும் இல்லை. நான் எல்லா உண்மையும் சொல்லிவிட்டேன். நான் இந்த குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய்தார். இதையெல்லாம் பார்த்து விஜயாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. ரோகினி, முத்து-மீனா இருவரையும் முறைத்துக் கொண்டே ரூமிற்கு சென்றார்.
அதற்குப்பின் பாட்டி, விஜயா மீதும் தவறிருக்கிறது. மருமகள்களை சமமாக நடத்து என்று திட்டி இருந்தார். அதற்குப்பின் ரூமில் ரோகினி, மனோஜ் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ரோகினி, மனோஜ், நீ சொல்வதில் எது உண்மை என்று நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு நீ பொய் சொல்கிறாய். உன் மீது எனக்கு நம்பிக்கையும் இல்லை என்று பேசி இருந்தார். ரோகினி எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே மனோஜ் கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் மாடியில் சுருதி, முத்து, மீனா, ரவி எல்லோரும் ரோகினி பஞ்சாயத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் மனோஜ் கேட்டு வேதனைப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
மீனா எல்லோருக்குமே சமைத்து வைத்து கூப்பிட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். அப்போது முத்து, மீனா, ஸ்ருதி சாப்பிட்டு இருந்தார்கள். விஜயாவை கிண்டல் அடித்து கேலியாக பேசி இருந்தார்கள். இதனால் கோபமடைந்த விஜயா கத்தி இருந்தார். ஆனால், கடைசியில் அது விஜயா கண்ட கனவு. இதற்கெல்லாம் காரணம் ரோகினி தான் என்று அவரை முறைத்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் பாட்டி, நான் ஊருக்கு கிளம்புகிறேன். சண்டை போடாமல் எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். சீக்கிரத்தில் குழந்தையை குழந்தையை பெற்றுக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சொன்னார்.
கடந்த வாரம் எபிசோட்:
அதற்குப்பின் மனோஜ்- ரோகினி இருவரும் வேலைக்கு கிளம்பி இருந்தார்கள். அப்போது மனோஜிடம் விஜயா, நீ இனிமேல் ரோகினி இடம் பேசக்கூடாது. அவள் தனியாகவே போகட்டும். அவள் பேசக்கூடாது. ரூமுக்கு போகக்கூடாது என்று நிறைய கண்டிஷன் போட்டார். மனோஜால் எதுவுமே பேச முடியவில்லை. ரோகினி, எனக்கு தான் ஆடிட்டிங் தெரியும் என்று சொன்னவுடன் இன்னும் கோபப்பட்ட விஜயா, என் மகனை ஏமாத்தாதே. அவன் பார்த்துக் கொள்ளுவான். உன் வேலையை செய் என்று மிரட்டி அனுப்புகிறார். வேதனையில் உள்ளே சென்று ரோகினி அழுது கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து போன் செய்து அவருடைய அம்மா, என்னுடைய பிறந்தநாளை மறந்து விட்டாயா? என்று பேசி இருந்தார். பின் ரோகினி தன்னுடைய அம்மாவையும் மகனையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, தன் மனைவியை காதலித்த முருகனை ரோடில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர், நான் என்னுடைய லவ்வை சொல்ல போகிறேன். ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் முத்து, இந்த முறை சரியான பெண்ணை தேர்ந்தெடுத்தாயா? என்று கிண்டலாக பேசுகிறார். அதற்கு பின் இருவருமே கோயிலுக்கு வருகிறார்கள். கோயிலில் சீதா-அருண் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அருண், எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்? வீட்டில் பேச வரட்டுமா என்று கேட்கிறார். அதற்கு சீதா, நாம் இருவரும் பழகி தெரிந்து கொள்ளலாம். அதற்கு பிறகு வீட்டில் பேசலாம். யாராவது பார்ப்பதற்குள் கிளம்பி விடுங்கள் என்கிறார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து மீனா கோயிலுக்கு வருகிறார். அப்போது அவர், வீட்டில் ரோகினி செய்த வேலையை பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொன்னவுடன் அவர் ஷாக் ஆகிறார். அதற்குப்பின் கோயிலுக்குள் சீதா இருக்கும் விஷயத்தை அறிந்து உள்ளே மீனா வருகிறார். அதற்குள்ளேயே அருண் சென்று விடுகிறார். சீதாவும் ஏதேதோ சொல்லி மீனாவை அங்கிருந்து அழைத்து வந்து விடுகிறார். பின் முத்து- முருகன் இருவருமே கோயிலுக்கு வருகிறார்கள். கோயிலில் அருணை பார்த்தவுடன் முருகன் அவரிடம் பேசுகிறார். அதற்கு பின் முத்து, இந்த ஆளை தெரியுமா? என்று கேட்கிறார். அதற்கு முருகன், நன்றாக தெரியும். ரொம்ப நல்லவர். அவருடைய காதல் சக்சஸ் ஆகிவிட்டது என்று சொல்கிறார். உடனே முத்து, அவனை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப பாவப்பட்டவள் என்று நக்கலாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.