தாலி கோர்க்கும் விழாவில் விஜயா செய்த வேலை, அதிர்ச்சியில் சீதா - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 7/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீதான் விஜயா. நீ மருமகளுக்கு என்னைக்கு மரியாதை கொடுத்திருந்தார். 10 லட்சம் ரூபாய் பணத்தை ரோகிணி எப்படி ரெடி பண்ண முடியும். இந்த பிரச்சினையை விட்டிருந்தால் முத்து, மீனாவே சரி செய்திருப்பார்கள். எங்கேயும் அசிங்கப்பட்டு இருக்க வேண்டாம் என்று சொன்னார். இதைக் கேட்டு விஜயாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் ரூமில் அண்ணாமலையிடம் வருத்தத்தில் விஜயா, இந்த வீட்டிற்கும் உங்களுக்கும் மரியாதை சேர்ப்பதற்கான வேலை செய்கிறேன் என்று பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ஷோரூமில் கூட்டம் அலைமோதியது.

ராஜா சொன்ன ஐடியாவை வைத்து ரோகினி- மனோஜ் இருவரும் வியாபாரம் செய்ய லாபம் கிடைத்தது. இன்னொரு பக்கம் பார்வதி, இவர் தான் டாக்டர் பட்டம் வாங்கி தருகிறார் என்று சொன்னவுடன் விஜயா, டாக்டர் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார். பின் விஜயா, நானும் நிறைய நல்ல விஷயம் செய்து இருக்கிறேன். என்று மீனா திருமணம், கிரிஷ் வீட்டுக்கு வந்த கதை என எல்லாமே தான் செய்தது போல சொன்னார். அதற்கு பார்வதி நண்பர், நீங்கள் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் தான் தருவார்கள். இனிமேல் நீங்கள் செய்யும் நல்ல காரியத்தை எல்லாம் வீடியோ எடுத்து வையுங்கள் என்று சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்று விஜயா, பார்வதியுடன் சேர்ந்து திட்டம் போட்டார். அதன் பின் வீட்டிற்கு வந்த விஜயா, பார்வதியை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு மீனாவிற்கு புடவை தந்து அன்பாக பாசமாக பேசி இருந்தார். இதை பார்த்து மீனாவிற்கே ஷாக் ஆனது. அதோடு வீட்டில் உள்ள எல்லோருமே கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால், வீடியோ எடுக்கும் விஷயம் முத்து, மீனாவிற்கு தெரியவில்லை. விஜயா பாசமாக தான் பேசுகிறார் என மீனா நினைத்து கொண்டார். அதற்குப்பின் வீடியோ எடுத்து முடித்த உடனே விஜயா, மீனாவை திட்டி புடவையை உள்ளே கொண்டு போய் வைக்க சொன்னார்.

நேற்று எபிசோட்:

இதனால் முத்துவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்குப்பின் கிரிஸ் உடன் விஜயா சந்தோமாக கொஞ்சி பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க சொன்னார். இதையெல்லாம் பார்த்து ஸ்ருதி, ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வீடியோவை எல்லாம் எடுத்து முடித்த பின் விஜயா மீண்டும் அந்நியனாக மாறி கிரிஷை திட்டினார். இன்னொரு பக்கம் மீனாவின் அம்மாவை பார்க்க அருணின் அம்மா, சீதா வந்தார்கள். அப்போது அருணின் அம்மா, தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடத்த இருக்கிறோம். நீங்கள் எல்லோரும் வரவேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு பின் மீனாவின் அம்மா, உன் மாமியார் வீட்டு குடும்பத்தில் சொல்லிவிடு என்று மீனாவிடம் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சீதாவின் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு அழைக்க மீனாவின் அம்மா, முத்து வீட்டிற்கு வருகிறார். அங்கு மீனாவின் அம்மா, சீதா பங்ஷனை பற்றி பேசுகிறார். அண்ணாமலை, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. இன்னொரு நாள் நான் வந்து பார்க்கிறேன். என்னுடைய மகன்கள் மருமகள்கள் எல்லோருமே வருவார்கள் என்று சொல்கிறார். உடனே விஜயா, நான் இல்லாமல் இந்த பங்க்ஷன் நடப்பதா? நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் சீதாவின் அம்மாவிற்கு ஷாக் ஆகிறது.

சீரியல் ட்ராக்:

இதையெல்லாம் பார்த்து ரோகினிக்கு பயங்கர கடுப்பாகிறது. மறுநாள் காலையில் சீதாவின் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு முத்துவின் வீட்டிலிருந்து எல்லோருமே கிளம்புகிறார்கள். அப்போது பார்வதியிடம் விஜயா, அங்கு விழாவில் நடப்பது எல்லாம் வீடியோ எடுக்க சொல்லி விடுகிறார். அதற்குப்பின் விஜயா விழாவிற்கு வந்த ஒவ்வொருவராக பார்த்து அன்பாக பேசி பழகினார். இதை எல்லாம் வீடியோ எடுக்கிறார்கள் இதையெல்லாம் பார்த்து சீதாவிற்கு ஷாக் ஆகிறது. முத்துவும் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். விஜயாவுமே தன் மகளுக்கு செய்வது போல பார்த்து பார்த்து செய்கிறார். நல்லபடியாக சீதாவின் தாலி பிரித்து கோரிக்கும் விழா நடந்து முடிகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full