சைக்கோ போல் நடந்து கொள்ளும் அருண், பயத்தில் தவிக்கும் சீதா, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நகை திருடுபவர்கள் எல்லாரையும் போலீஸ் கைது செய்தார்கள். அவர்களுடன் முத்து,மீனாவையும் கைது செய்தார்கள். முத்து, தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை. பின் போலீஸ் ஸ்டேஷனில் முத்து தன்னுடைய குடும்பத்தை பற்றி எல்லாம் சொன்னார். பின் போலீஸ், அண்ணாமலைக்கு போன் செய்து நடந்ததை சொன்னார். போலீஸ் ஸ்டேஷன் வந்த ரவி, ஸ்ருதி இருவரும் முத்து, மீனாவை பற்றி எல்லாம் சொன்னார்கள். ஆனால், போலீஸ் நம்பவில்லை.
அண்ணாமலை, முத்து-மீனா செய்யும் வேலையெல்லாம் காண்பித்து அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபிக்கிறார். அதோடு மீனா தங்கையின் தாலியை கண்டுபிடிக்க தான் இப்படி எல்லாம் செய்தார்கள் என்று சொல்லி மன்னிப்பு கேட்டார். போலீஸ் உண்மையை புரிந்து கொண்டு முத்து, மீனா இருவரையும் விட்டு விட்டார்கள். அதற்கு பின் போலி சாமியார் சொர்ணம் திருட்டு நகை விற்கும் இடத்திற்கு வருவதை தெரிந்து கொண்டு முத்து-மீனா சென்றார்கள். வீட்டில் யாரும் இல்லாததால் சொர்ணம் சந்தேகப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
ஒரு கட்டத்தில் மீனா அம்மன் வேஷம் போட்டு சொர்ணத்தின் வாயில் உண்மையை வர வைத்து விட்டார். இன்னொரு பக்கம் முத்துவின் வீட்டிற்கு மீனாவின் அம்மா தங்கை வந்து இருந்தார்கள். அப்போது முத்து-மீனா இருவரும் சொர்ணத்தை அலைத்துக் கொண்டு வந்தார்கள். விஜயா சாமியாரை பார்த்து கையெழுத்து கூப்பிட்டார். உடனே முத்து, நடந்ததை எல்லாம் சொன்னார். விஜயா ஷாக் ஆனார். சொர்ணமும் தான் போலி சாமியார் என்ற உண்மையை சொன்னார். கோபத்தில் விஜயா, சொர்ணத்தை அடித்து யார் இப்படி செய்ய சொன்னது என்றார். சொர்ணம், ரோகிணி சொல்லி தான் செய்தேன் என்றார். மனோஜ் அதிர்ச்சி அடைந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சொர்ணம், எல்லாம் உண்மையும் சொன்னதால் விஜயா வாய் அடைத்துப் போனார். முத்து, போலீசுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வைத்தார். சொர்ணத்தை போலீஸ் கைது செய்து செல்கிறார்கள். அதற்கு பின் அண்ணாமலை, ரவி எல்லோருமே விஜயாவின் மூடநம்பிக்கையை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் முத்து, மீனாவை வெளியே போ என்று சொல்கிறார். விஜயாவை ஆரத்தி எடுத்து மீனாவை உள்ளே வர வைக்க சொல்கிறார் முத்து. விஜயா அமைதியாக இருக்கிறார் அண்ணாமலை சொன்னதால் வேறு வழி இல்லாமல் விஜயா, மீனாவிற்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கிறார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு பயங்கர கடுப்பாகிறது.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் தாலி செய்னுடன் சீதா வீட்டிற்கு போகிறார். அருண் மன்னிப்பு கேட்கிறார். உடனே சீதா, மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள். டாக்டரை போய் பார்க்கலாம் என்கிறார். அருண், நான் பைத்தியமா? என்னுடைய வலி உனக்கு தெரியவில்லை. உன் அம்மா இறந்தால் அந்த வலி தெரியும் என்று ஒரு சைக்கோ மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். சீதாவிற்கு ஒற்றுமை புரியவில்லை. பின் மனோஜ், யமுனா என்ற பெண்ணை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார்.