ஸ்ருதி சொன்ன வார்த்தையால் கடுப்பாகும் ரவி, மனோஜை வெளுத்து வாங்கிய ரோகினி - சிறகடிக்க ஆசை

By subhashini · 9/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணி, மீனா வண்டியை எடுத்த ஆட்கள் இருக்கும் இடத்தை சொல்லி வந்தார். அந்த இடத்திற்கு சென்ற முத்து, எல்லோரையும் அடித்து விட்டு வண்டி கேட்டார். அதற்கு அவர்கள், வண்டி இல்லை அதற்கான பணம் வேணும் என்றால் தந்து விடுகிறோம். ஆனால், பாதி பணம் தான் தருவேன் என்றார்கள். உடனே முத்து, சிந்தாமணியிடம் மீதி பணத்தை வாங்கி கொடு என்று மிரட்டினார். அவர்களும் சிந்தாமணிக்கு போன் செய்து சொன்னார்கள்.

ரோகிணிக்கு போன் செய்த சிந்தாமணி, முத்துவிற்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. அவன் என்னிடம் பணத்தை கேட்டு மிரட்டுகிறான். அவன் போலீசுக்கு போனால் நான் உன்னுடைய பெயரை தான் சொல்லுவேன். 40 ஆயிரம் பணத்தை நீயே கொடுத்து விடு என்றார். பின் ரோகினி, மனோஜிடம் வித்யா கல்யாணத்திற்காக ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி சிந்தாமணி இடம் கொடுத்து விட்டார். அதற்குப்பின் சிந்தாமணி, முத்துவிடம் பணத்தை கொடுத்துவிட்டு இனிமேல் நான் நேரடியாகவே மீனாவிடம் மோதுகிறேன். அவளை இந்த தொழிலை விட்டு ஓட வைக்கிறேன் என்றெல்லாம் சவால் விட்டார்.

சிறகடிக்க ஆசை:

அதற்கு பதிலுக்கு பதில் முத்துவுமே சவால் போட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ், ரோகினி வாங்கிய பணத்தை பற்றி சொன்னார். இதனால் கோபப்பட்ட விஜயா ருத்ர தாண்டவம் ஆடி ரோகினியை வெளுத்து வாங்கினார். ரோகினியால் எதுவுமே பேச முடியவில்லை. அந்த சமயம் வந்த முத்து, மீனா வண்டி விஷயத்தை பற்றி சொன்னார். அதோடு இந்த விஷயம் எல்லாம் செய்தது சிந்தாமணி தான் என்றார். விஜயா அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். பின் மீனாவிற்கு புது வண்டி வாங்குவதை பற்றி முத்து சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவிற்கு புது ஸ்கூட்டி வாங்குவதற்காக அண்ணாமலை பணம் தருகிறேன் என்று சொல்கிறார். அப்போது ஸ்ருதி- ரவி இருவருமே தங்கள் பங்கிற்கு பணம் தருகிறேன் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த விஜயாவிற்கு கடுப்பாகிறது. அதற்கு பின் ரூமில் ரோகினி, எதற்காக பணம் தந்த விஷயத்தை அத்தையிடம் சொன்னாய்? என்று மனோஜிடம் சண்டை வாகிறார். வழக்கம்போல் மனோஜால் எதுவும் பேச முடியவில்லை திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறார். அதற்குப்பின் சுருதி தன்னுடைய ஓட்டலுக்கு சமைக்க இருக்கும் செப் செய்த சாப்பாட்டை வீட்டிற்கு கொண்டு வந்து எல்லோருக்குமே பரிமாறுகிறார்.

சீரியல் ட்ராக்:

எல்லோரும் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது. ரவி சமைத்த மாதிரியே இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்போது ஸ்ருதி, ரவியிடம் வேலை செய்தவர் தான் என்னுடைய ரெஸ்டாரண்டுக்கு செப்பாக வர இருக்கிறார் என்கிறார். இதை எல்லாம் கேட்டு ரவிக்கு பயங்கர கோபம் தான் வருகிறது. பின் சாப்பாட்டை எல்லோரும் பாராட்டுவதால் அந்த செப்பையே சமைக்க வைக்க சுருதி முடிவெடுக்கிறார். இன்னொரு பக்கம் சுருதியின் அம்மா- அப்பா இருவருமே ரவியை சந்தித்து புது ரெஸ்டாரண்டுக்கு போவதை பற்றி பேசுகிறார்கள். ரவி என்னால், இப்போதைக்கு வர முடியாது என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து நீத்து, ரவி இடம் ரெஸ்டாரன்ட் பற்றிய விஷயங்களை பேசிக் கொண்டிருப்பதால் சுருதியின் அம்மா, அப்பாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full