பணம் கேட்டு ரோகினியை மிரட்டும் ஸ்ருதி அம்மா, விஜயா சொன்ன விஷயம் - சிறகடிக்க ஆசை

By subhashini · 30/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஆட்டோ டிரைவர், முத்துவால் தான் இன்று நான் ஜெயிலுக்கு போகாமல் இருக்கிறேன். பணத்தை திருடியது நான்தான். உன்னுடைய வேலையும் போகக்கூடாது என்று முத்து தான் உதவி செய்தார் என்றார். இதை கேட்டு சீதாவின் மனம் மாறியது. இன்னொரு பக்கம் வீட்டில் மீனா தன்னுடைய அம்மாவிடம் சீதாவை பற்றி ரொம்ப எமோஷனாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த சீதா, மீனாவிடம் மன்னிப்பு கேட்டு முத்துவிற்கு போன் செய்து மன்னிப்பு கேட்டார்.

முத்து, நீயும் உன் அக்காவும் சேர்ந்தால் சந்தோஷம். எனக்கு எப்போதும் நம் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோசமாக தான் இருக்க வேண்டும். அதை தான் நானும் செய்வேன் என்றெல்லாம் சொன்னார். இது எல்லாம் கேட்டு சீதா ரொம்ப எமோஷனல் ஆனார். இன்னொரு பக்கம் மனோஜ் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு வந்த பாம்பாட்டி, அயன் பாக்ஸ் கேட்டார். அப்போது அவரிடம் இருந்த பாம்பு ரோகிணி எடுத்து வந்த பையில் சென்று விட்டது. பின் ரோகினி, மனோஜ் இருவருமே வீட்டிற்கு வந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

மீனா, தன் மாமியாருக்கு வைத்த பாலை பாம்பு குடித்தது. ஆனால் விஜயா, மீனாவை திட்டிக் கொண்டிருந்தார். பாம்பு யார் கண்ணுக்குமே தெரியவில்லை. பின் இரவு விஜயா தண்ணி குடிக்க வரும்போது பிரிட்ஜ் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து பயங்கரமாக கத்தி அலறினார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாம்பு இருப்பதை பார்த்து பயந்தார்கள். அப்போதுதான் பாம்பு வந்த விஷயத்தை அறிந்து மனோஜை திட்டிக் கொண்டிருந்தார்கள். பின் ஒரு வழியாக முத்து அந்த பாம்பை பிடித்து விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, வீட்டிற்கு பாம்பு வந்த விஷயத்தை பார்வதி- சிந்தாமணி இடம் சொல்கிறார். அப்போது சிந்தாமணி, பாம்பு வீட்டுக்கு வருவது நல்லது இல்லை. குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள் என்கிறார். பின் இதைப் பற்றி விஜயா வீட்டில் எல்லோரிடமும் சொல்கிறார். அதற்குப்பின் சுருதி ரெஸ்டாரண்டிற்கு மீனா சென்றிருக்கிறார். அப்போது கோகிலா அந்த ரெஸ்டாரண்டுக்கு வந்திருக்கிறார். பின் கோகிலா, தன்னுடைய தோழியை மீனாவிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது கோகிலா, மீனாவின் பூ வியாபாரத்தை பற்றி தன்னுடைய தோழிக்கு சொல்வதால் அவர்களும் மீனாவை பூ போட சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது மீனா, என்னுடைய கணவரின் அண்ணன் கடை வைத்திருக்கிறார். வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் நீங்கள் அங்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு சுருதி-கோகிலா இருவருமே மீனாவின் குணத்தை ரொம்பவே பெருமையாக பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா, ரோகினிக்கு போன் செய்து பணத்தை கேட்கிறார். ஆனால், ரோகிணி இப்போது அப்போது என்று சமாளிக்கிறார். உடனே ஸ்ருதி அம்மா, பணத்தை கொடுக்கவில்லை என்றால் நான் உன்னுடைய மாமியாரிடமே சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் ரோகிணி, மனோஜிடம் பணத்தை கேட்கிறார். ஆனால், மனோஜ் முடியாது என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full