நீத்துவின் முகத்திரையை கிழித்த ஸ்ருதி, ரவி சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 27/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் அம்மா உடம்பு சரியில்லாமல் போனதால் ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள். அதற்குப்பின் டாக்டர், மீனாவின் அம்மா ஓய்வு எடுக்க வேண்டும் என்றார். அப்போது மீனா, நான் ஒரு வாரம் நம் வீட்டிலேயே தங்கி உன்னை கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் வேலைக்கு போக வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். உடனே சீதா, நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். பின் மீனா-சீதா இருவரும் சண்டை போட்டார்கள்.

முத்து, சீதா வீட்டிற்கு அத்தை போகட்டும் என்றார். சீதா தான் பணத்தை திருடினார் என்று ஹாஸ்பிடல் இன்சார்ஜ் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது வந்து அருண், சீதா மீது எந்த தவறும் இல்லை என்று தன்னுடைய உயரதிகாரியிடம் சிபாரிசு லெட்டர் வாங்கிட்டு வந்து கொடுத்தார். இருந்தாலுமே அந்த ஹாஸ்பிடல் ஓனர், சீதா இங்கு வேலை செய்ய முடியாது. எங்கேயுமே வேலை செய்ய முடியாத மாதிரி செய்து விடுவேன் என்றெல்லாம் மிரட்டினார். அந்த சமயம் வந்த முத்து, சீதா மீது எந்த தவறும் இல்லை. திருடர்களை பிடித்து பணத்தை கொண்டு வந்த விட்டோம் என்றார்.

சிறகடிக்க ஆசை:

இதை பார்த்து சீதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் முத்து, சீதாவின் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்தார். இதனால் அருணுக்கு பயங்கர கோபம் வருகிறது. அதற்குப்பின்
முத்து- சத்யா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்து, கஷ்டப்பட்டு இருப்பவர்களிடம் அநியாயவட்டி போட்டு பணத்தை வாங்குவது ரொம்ப தவறு. அதனால்தான் அந்த ஆட்டோ டிரைவர் ஆள் வைத்து பணம் திருடினார். தயவு செய்து இந்த தொழில் வேண்டாம். இந்த பாவம் உன்னை சும்மா விடாது என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நீத்து ரெஸ்டாரண்ட்க்கு வந்த சுருதி, சாப்பாடு ஆர்டர் செய்கிறார். நீத்துவுக்கு ஒன்னுமே புரியவில்லை. உடனே சுருதி, நீங்கள் என்னிடம் வேலை செய்பவர்களை விலை கொடுத்து வாங்கும்போது உங்களிடம் ஆர்டர் வாங்க வேண்டாமா? அதோடு நான் கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுத்து இருக்கிறேன் என்றெல்லாம் பேசுவதால் நீத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது. இதையெல்லாம் கேட்ட ரவி, எதற்காக இப்படி செய்தீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு நீத்து, இதெல்லாம் ஒரு அரசியல் என்று சொல்கிறார். ரவி, இது சுத்தமாக சரி இல்லை என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் சத்யா, முத்து சொன்னதை நினைத்து பார்த்து தன்னுடைய ஓனரிடம் வேலை வேண்டாம் என்றார். ஆனால், அங்கு இருந்தவர் ஓனரின் மகள் ரேகா. அதாவது, சிந்தாமணியின் மகள் தான் அந்த இடத்தில் இருக்கிறார். சத்யா, அதிக வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களுடைய சாபம் வாங்க எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்கிறார். இதை கேட்ட ரேகா, வட்டியை குறைத்து பைனான்ஸ் நடத்தலாம் என்று தன் அப்பாவிடம் சொல்வதால் அவரும் ஒத்துக்கொள்கிறார். பின் பழையபடி சத்யாவும் அந்த இடத்தில் வேலை செய்ய சம்மதிக்கிறார். அதற்கு பின் சிந்தாமணி தன் மகளை சந்தித்து ரொம்ப அன்பாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full