ரோகினி செய்த வேலையால் வீட்டுக்குள் நடக்கும் கலவரம், முத்துவின் தரமான சம்பவம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா, முத்து சொன்னதை நினைத்து பார்த்து தன்னுடைய ஓனரிடம் வேலை வேண்டாம் என்றார். ஆனால், அங்கு இருந்தவர் ஓனரின் மகள் ரேகா. அதாவது, சிந்தாமணியின் மகள் தான் அந்த இடத்தில் இருந்தார். சத்யா, அதிக வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களுடைய சாபம் வாங்க எனக்கு விருப்பம் இல்லை என்றார். இதை கேட்ட ரேகா, வட்டியை குறைத்து பைனான்ஸ் நடத்தலாம் என்று தன் அப்பாவிடம் சொல்வதால் அவரும் ஒத்துக்கொண்டார். பின் பழையபடி சத்யாவும் அந்த இடத்தில் வேலை செய்ய சம்மதித்தார். அதற்கு பின் சிந்தாமணி தன் மகளை சந்தித்து ரொம்ப அன்பாக பேசி இருந்தார்.
சுருதி, ரவிக்கிடையே சண்டை நடந்து கொண்டிருப்பதை முத்து-மீனா இருவரும் கவனித்தார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் சீதாவிடம் பணத்தை கொடுத்து பேங்கில் போட சொன்னார்கள். சீதா, இந்த முறை வேண்டாம் என்று பயந்தார். இருந்தாலுமே ஹாஸ்பிடல் இன்சார்ஜ், நீயே கொண்டு போய் கொடு, பயப்படாதே என்றெல்லாம் அறிவுரை சொன்னார். பின் சீதா ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர், முத்துவை பார்த்து அவரிடம் நன்றி சொல்லி பேசிக் கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
இதை பார்த்து சீதா கோபப்பட்டு கிளம்ப சொன்னார். ஆட்டோ டிரைவர், முத்துவால் தான் இன்று நான் ஜெயிலுக்கு போகாமல் இருக்கிறேன். பணத்தை திருடியது நான்தான். உன்னுடைய வேலையும் போகக்கூடாது என்று முத்து தான் உதவி செய்தார் என்றார். இதை கேட்டு சீதாவின் மனம் மாறியது. இன்னொரு பக்கம் வீட்டில் மீனா தன்னுடைய அம்மாவிடம் சீதாவை பற்றி ரொம்ப எமோஷனாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த சீதா, மீனாவிடம் மன்னிப்பு கேட்டு முத்துவிற்கு போன் செய்து மன்னிப்பு கேட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, நீயும் உன் அக்காவும் சேர்ந்தால் சந்தோஷம். எனக்கு எப்போதும் நம் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோசமாக தான் இருக்க வேண்டும். அதை தான் நானும் செய்வேன் என்றெல்லாம் சொல்கிறார். இது எல்லாம் கேட்டு சீதா ரொம்ப எமோஷனல் ஆகிறார். இன்னொரு பக்கம் மனோஜ் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது கடைக்கு வந்த பாம்பாட்டி, அயன் பாக்ஸ் கேட்கிறார். அப்போது அவரிடம் இருந்த பாம்பு ரோகிணி எடுத்து வந்த பையில் சென்று விடுகிறது.
சீரியல் ட்ராக்:
பின் ரோகினி, மனோஜ் இருவருமே வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். மீனா, தன் மாமியாருக்கு வைத்த பாலை பாம்பு குடித்து விடுகிறது. விஜயா, மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார். பாம்பு யார் கண்ணுக்குமே தெரியவில்லை. பின் இரவு விஜயா தண்ணி குடிக்க வரும்போது பிரிட்ஜ் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து பயங்கரமாக கத்தி அலறுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாம்பு இருப்பதை பார்த்து பயப்படுகிறார்கள். அப்போதுதான் பாம்பு வந்த விஷயத்தை அறிந்து மனோஜை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். பின் ஒரு வழியாக முத்து அந்த பாம்பை பிடித்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.