நன்றி கெட்ட தனமாக நடக்கும் ரோகினி, வெளுத்து வாங்கும் ஸ்ருதி - சிறகடிக்க ஆசை

By subhashini · 1/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சுருதி-கோகிலா இருவருமே மீனாவின் குணத்தை ரொம்பவே பெருமையாக பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா, ரோகினிக்கு போன் செய்து பணத்தை கேட்டார். ஆனால், ரோகிணி இப்போது அப்போது என்று சமாளித்தார். உடனே ஸ்ருதி அம்மா, பணத்தை கொடுக்கவில்லை என்றால் நான் உன்னுடைய மாமியாரிடமே சொல்லிவிடுவேன் என்று மிரட்டினார். இதனால் ரோகிணி, மனோஜிடம் பணத்தை கேட்டார். ஆனால், மனோஜ் முடியாது என்றார்.

மீனா, தனக்கு கிடைத்த புது ஆர்டரை பற்றி முத்துவிடம் சொன்னார். முத்து, நானும் சீக்கிரத்தில் வண்டி வாங்கி அந்த பெரிய கான்ட்ராக்ட் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கிறேன். நிறைய ஆர்டர் கிடைக்கும் என்று சொன்னார். அதற்குப்பின் ரோகிணி வந்தார். அவரிடம் ஒரு கார்டை கொடுத்து மீனா புது ஆர்டர் விஷயமாக பேசினார். ரோகினி சந்தோஷப்பட்டார். பின் ரோகினி, இந்த ஆர்டர் நான் வாங்கி கொடுத்ததாக அத்தை இடம் சொல்கிறேன். நீங்கள் எதையும் சொல்லாதீர்கள் என்று சொல்வதால் மீனாவும் சரி என்றார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் ரோகினி புது காண்ட்ராக்ட் விசயமாக கோகிலாவின் தோழியை சந்தித்து பேசி இருந்தார். அவர்களுமே அந்த ஆர்டரை ரோகிணிக்கு கொடுத்து விட்டார்கள். பின் இதைப்பற்றி ரோகினி, மனோஜிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். பின் மனோஜ், ரோகினி இருவருமே ஸ்வீட் புடவை எல்லாம் வாங்கி வந்து விஜயாவிடம் கொடுத்து விஷயத்தை பற்றி சொன்னார்கள். ரோகினி, தானே வாங்கியது போலவே பில்டப் விட்டு செல்வதால் சுருதிக்கு பயங்கர கடுப்பானது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்களுக்கு கிடைத்திருக்கும் புது ஆர்டர் பற்றி ரோகினி சொல்கிறார். மனோஜ், இதனால் 40 லட்சம் profit கிடைக்கப் போகிறது என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் விஜயா வாயை பிளக்கிறார். இதற்கெல்லாம் காரணம், ரோகினி தான் என்று மனோஜ் செல்கிறார். விஜயா, ரோகிணியை ரொம்ப பெருமையாகவும் பாசமாகவும் நடத்துகிறார். இதையெல்லாம் பார்த்து சுருதிக்கு பயங்கர கடுப்பாகிறது. முத்து, மீனாவிற்குமே புது ஆர்டர் கிடைத்திருக்கிறது. அவரும் லச்சத்தில் லாபம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வதால் விஜயாவிற்கு கடுப்பாகிறது. பின் சுருதி, மீனா, ரோகினி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சுருதி, இந்த ஆர்டர் மீனாவால் தான் கிடைத்தது. ஆனால், ஒரு நன்றி கூட சொல்லவில்லை.

சீரியல் ட்ராக்:

நீங்களே செய்தது போல தம்மட்டம் அடித்துக் கொள்கிறீர்கள் என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு ரோகினி, மீனாவால் மட்டும் கிடைக்கவில்லை.
அந்த மேடம் எனக்கு ரொம்ப பழக்கம். என்னுடைய உழைப்புக்காக தான் அவர் தந்தார் என்று மீனா செய்த நன்றியை கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்காமல் ஏளனமாக பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இதையெல்லாம் பார்த்து சுருதிக்கு இன்னும் கோபம் அதிகமாகின்றது. அதற்குப்பின் மீனா, ரோகினிக்கு கிடைத்த ஆர்டரை பற்றி முத்துவிடம் சொல்கிறார். மறுநாள் காலையில் சிவன், பார்வதி இருவருமே தங்களுடைய கதையை பேசி வீடியோ எடுக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full