பேய் போல் சவுண்ட் எபெக்ட் கொடுத்த ஸ்ருதி, பயத்தில் நடுங்கிய விஜயா- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 29/8/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் சீதா வேலை செய்யும் இடத்தில் ரோகினி வந்தார். உடனே சீதா, ரோகினியை பற்றி விசாரிக்க, அப்போது தான் ரோகினி இரண்டாவது குழந்தைக்கான டெஸ்ட்டுக்கு வந்திருந்தார் என்று தெரிந்தது. இதை அறிந்த மீனா அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார். அப்போது வீட்டிற்கு ரோகினி- மனோஜ் இருவரும் ஸ்வீட் கொடுத்தவுடன் விஜயா, சந்தோசமான விஷயம் என்று நினைத்துக் கொண்டார். ஆனால், ஷோரூமில் நல்ல வியாபாரம் ஆகிறது என்று ரோகினி இனிப்பு கொடுத்தார்.

உடனே விஜயா, வீட்டிற்கு குழந்தை வந்தால் தானே நன்றாக இருக்கும் என்று சொல்லி இருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு அண்ணாமலை, ஸ்ருதி, ரவி எல்லோருமே வந்து முத்து செய்த சாதனையை புகழ்ந்தார்கள். அந்த சமயம் முத்து, தன்னுடைய காரில் ஒரு பெண்ணிற்கு பிரசவம் பார்த்திருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை பலருமே பாராட்டி இருந்தார்கள். பின் ஸ்ருதி, ஏன் இப்படி இருக்கிறீர்கள்? முத்து ஏதாவது சண்டை போட்டாரா? என்று கேட்டதற்கு, ரோகினி இரண்டாவது முறை கர்ப்பமாக டெஸ்ட் எடுத்து இருக்கிறார் என்று மீனா சொன்னவுடன் சுருதி அதிர்ச்சியில் உறைந்து இருந்தார். இதை ஸ்ருதி, ரவியிடம் சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

ரவி அதிர்ச்சியாகி முத்துவிடம் சொன்னார். முத்து உடனே அண்ணாமலை இடம் சொல்ல, அண்ணாமலை விஜயாவிடம் ரோகினியை பற்றி பேசி இருந்தார். உடனே விஜயா, கோபத்தில் ரோகினி இடம் கேட்டு சண்டை போட்டு, நீ இதற்கு முன்பு கர்ப்பமாக இருந்தாயா? இது இரண்டாவது குழந்தையா? என்றெல்லாம் கேட்க, ரோகினி பயத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் அழுதார். கடைசியில் ரோகினி, ஆமாம், இது இரண்டாவது குழந்தை தான். முதல் குழந்தை அபாசன் ஆகிவிட்டது என்று ஒரு புது கதையை சொல்லி இருந்தார். நேற்று எபிசோடில், ரோகினி சொல்வதைக் கேட்டு எல்லோருமே நம்பி விடுகிறார்கள்.

சீரியல் கதை:

விஜயா அழுது ரோகிணிக்கு ஆறுதல் சொல்லி இருந்தார். பின் இது யார் சொன்னது என்று கேட்டதற்கு ஒவ்வொருவருமே மாற்றி மாற்றி பெயரை சொல்ல, கடைசியில் மீனாவின் பெயரில் வந்து நிற்க, விஜயா பயங்கரமாக மீனாவை திட்டி பேசி இருந்தார். அதன் பின் ரோகினி பயந்து போய் தன் மாமியாரிடம், நான் வேறு வீட்டிற்கு செல்கிறேன் என்று சொல்ல, அவர் சமாதானம் செய்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், சீதா வேலை செய்யும் இடத்திற்கு மீனா சென்றிருந்தார். அப்போது ரோகினி போன் பண்ணி சீதா செய்த வேலையை சொன்னவுடன் மருத்துவர் அவரை பயங்கரமாக திட்டி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

பின் வீட்டில் மீனாவை பூ கட்டத்திற்கு அவருடன் வேலை செய்பவர்கள் கூப்பிடுகிறார்கள். ஆனால், மீனா வர மறுத்தார். அந்த சமயம் பார்த்து முத்து, போன் செய்து எனக்கு சவாரி இருக்கு. வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொன்னவுடன், நானும் பூ கட்ட வருகிறேன் என்று மீனா ஒத்துக் கொள்கிறார். பிறகு வீட்டில் மீனா-சுருதி இருவருமே உட்கார்ந்து பேய் படம் பார்க்கிறார்கள். பேய் படத்தை பார்த்து மீனா ரொம்பவே பயப்படுகிறார். இதை பார்த்த விஜயா கிண்டலாக பேசுகிறார். உடனே சுருதி, விஜயாவிற்கு பேய் பயத்தை காண்பிக்க நினைக்கிறார்.

https://www.youtube.com/watch?v=1_G_18LAWaQ

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், சுருதி போய் போல் பயங்கரமாக சவுண்ட் எபெக்ட் எல்லாம் வைத்து விஜயாவை பயமுறுத்துகின்றாள். விஜயா முதலில் சத்தத்தைக் கேட்டு என்ன? என்று பார்க்கிறார். உடனே சுருதி, பேய் வருவதற்கு முன் என்னெல்லாம் சவுண்ட் வருமோ அதை எல்லாம் செய்கிறார். பயத்திலேயே விஜயா கட்டில் மேலிருந்து கீழே விழுந்து விடுகிறார். ஆனால், அண்ணாமலைக்கு இது எதுவுமே தெரியவில்லை. மீனா, வேண்டாம் என்று தடுத்தும், விடாமல் சுருதி பேய் போல் சவுண்ட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full