சின்ன உடையில பெண்மை இருக்குதா? என் அம்மா, அப்பாவுக்கு கொள்ளி வச்சேன் - சிறகடிக்க ஆசை சுஜாதா எஸ்க்குளுசிவ்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சுஜாதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜில்லா விட்டு ஜில்லா வந்து என்ற பாடலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் ஈசன் சுஜாதா. இந்த ஒரே பாடலின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் நடன இயக்குனராக பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சின்ன சின்ன வேடங்களில் கூட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியாக கலக்கிக் கொண்டு இருக்கிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை தான் சிறகடிக்க ஆசை. எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் தான் நம்பர் 1. இந்த சீரியலில் வில்லி சிந்தாமணியாக சுஜாதா நடித்துக் கொண்டிருக்கிறார்.
சுஜாதா பேட்டி:
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சுஜாதா, நீ 10 மணிக்கு போனால் நான் 11 மணிக்கு வருவேன் என்பது பெண்ணியம் கிடையாது. செய்யக்கூடிய கடமைகளை மகளாகவும், மகனாகவும் இருந்து நான் தான் செய்தேன். என்னுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கொள்ளி நான் தான் வைத்தேன். எங்க வீட்டில் நாங்க இரண்டுபேரும் பெண்கள் தான். என் அப்பா தவறும் போது என் மடியில் தான் இறந்து போனார். அவர் மடியில் தான் நான் வளர்ந்தேன். அவர் என் மடியில் இறந்தது ரொம்ப நான் மனமுடைந்து விட்டேன்.
நான் என்னுடைய கடமைகள் எல்லாமே செய்தேன். ஆண்கள் மாதிரி வேஷ்டி கட்டிக்கொண்டு தான் ஈம காரியங்களை செய்தேன்.
பெண்ணியம் பற்றி சொன்னது:
எங்களுடைய நடன சங்கத்தில் இருக்கும் பெண்கள், அப்பாவின் உடம்புக்கு முன் நடனம் ஆடினார்கள். அம்மா இறக்கும்போது பையனாகவும் பெண்ணாகவும் இருந்து நான் தான் கொள்ளி வைத்தேன். என் பையனுக்கு கல்யாணம் முடிவு செய்து இருந்தோம். அவன்தான் கொல்லி வைக்கணும் என்று இருந்தது. பிறகு யோசித்துதான் நானே கொள்ளி வைத்து விட்டேன். அதுதான் பெண்ணியம். ஆடை குறைந்து போடுவதில் கிடையாது பெண்ணியம். செய்ய வேண்டிய கடமைகளை தட்டிக் கழிக்காமல் செய்வதுதான் பெண்ணியம்.
என் அப்பா இறப்பதற்கு முன்பு, ஏன் இப்படி பெண்களை போட்டு இவ்வளவு சடங்கு செய்ய சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள் என்று ரொம்ப வருத்தப்படுவார்.
https://www.youtube.com/watch?v=5DXftpMk4v0
அம்மா, அப்பா பற்றி சொன்னது:
அதனாலே என்னுடைய அம்மா தவறும் போது எங்க அம்மாவுக்கு சில சடங்குகள் எல்லாம் செய்யவில்லை. என் அப்பா ரொம்ப முற்போக்குவாரி தான். அம்மா கண் முன்னாடியே எறிந்து போவதை யாராலும் பார்க்க முடியவில்லை. இப்போது எல்லாம் மின்சார சுடுகாடுதான். அதனால் நெஞ்சில் கற்பூரம் வைத்து ஏத்த சொல்கிறார்கள். அம்மா உள்ள போறது எல்லாம் என்னால் நிச்சயம் பார்க்க முடியவில்லை. அதைப் பார்த்ததுமே நான் மயங்கி கீழே விழுந்து விட்டேன். இப்போ வரைக்கும் என் அம்மாவுடைய போட்டோஸ் வீடியோஸ் எல்லாமே என்னுடைய பிள்ளைகள் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதை பார்த்தால் எமோசனல் ஆகி விடுவேன். கல்யாணமானதுக்கு பிறகு நிறைய பேர் அப்பா, அம்மாவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
சீரியல் பற்றி சொன்னது:
எனக்குன்னு ஒரு புருஷன் வந்துட்டாருன்னு சுயநலவாதியாக இருக்க கூடாது. மேலும், நான் சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். எப்போதுமே நான் நடிப்பதில் முயற்சி செய்து கொண்டே இருப்பேன், சலிக்க மாட்டேன். பசங்களிடமும் அது சொல்லுவேன். எனக்கு ஏதாவது ஆனது என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் நடக்கணும் என்று சொல்வேன். எனது கை, கால் நல்லா இருக்கும் வரை மேக்கப் போடணும். எனக்கு வீட்டில் டிவி பார்க்க கூட பிடிக்காது. வீட்டில் இருந்தால் எம்ராய்டிங் வொர்க், மிரர் வொர்க், பார்ட் வொர்க் என்று ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். வில்லி கதாபாத்திரம் என்பதால் எல்லோரும் என்னை கேக்குறீங்க. நல்ல அம்மா கேரக்டருக்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்காது என்று கூறி இருக்கிறார்.