நீத்து செய்த வேலையால் கொந்தளித்த ஸ்ருதி, ரோகினிக்கு விஜயா போட்ட ஆர்டர் - சிறகடிக்க ஆசை

By subhashini · 6/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, நல்ல ஐடியா என்றார். பின் ரோகிணி, மீனாவிற்கு போன் செய்து கிரிஸை கடத்தும் விஷயத்தை பற்றி சொன்னார். பதறி போன மீனா, கிரிஷை அழைப்பதற்காக போக சொன்னார். அதற்குள்ளே சிந்தாமணி, தன்னுடைய ஆட்களை வைத்து கிரிஷை கடத்தி விட்டார். கிரிஷை கடத்திக் கொண்டு போகும் வண்டியை முத்து பார்த்துவிட்டு பின் தொடர்ந்து சென்றார். பின் இந்த விஷயத்தை பற்றி முத்து, மீனாவிடம் சொன்னார். இதைப் பற்றி மீனா சொன்ன உடன் ரோகிணி ரொம்பவே பதறி அழுதார்.

நல்லபடியாக கிரிஷை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்த முத்து, சிந்தாமணி ஆட்களை வைத்து கடத்திருக்கிறார். அதனால் தான் அவன் அப்படி இருக்கிறான். சிந்தாமணி வெறும் அம்பு தான். அதை ஏவி விட்டது அம்மாதான் என்றார். வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். விஜயாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பயந்து கொண்டிருந்தார். பின் அண்ணாமலை, என்ன காரியம் செய்தாய்? என்று கேட்டார். அதற்கு விஜயா, எனக்கு அவன் இங்கு இருப்பது பிடிக்கவில்லை. அதனால் தான் இப்படி செய்தேன் என்றார். கோபத்தில் அண்ணாமலை விஜயாவை அடிக்கப் போனார்.

சிறகடிக்க ஆசை:

முத்து தடுத்து விட்டார். பின் அண்ணாமலை, போலீசுக்கு போன் செய்து விஜயாவை கைது செய்ய சொன்னார். வீட்டில் எல்லோருமே கேட்டுக் கொண்டதால் அண்ணாமலை அமைதியாகி விட்டார்.
அதற்குப்பின் விஜயா, சிந்தாமணியிடம் ஃபோன் செய்து முத்து அந்த பையனை காப்பாற்றி விட்டான் என்று திட்டி விட்டார். இன்னொரு பக்கம் மீனா, கிரிஷை வீட்டுக்கு கொண்டு வருவது தான் என்னுடைய வேலை. அவன் உன்னுடைய அறையில் தூங்க வைத்து மனோஜுடன் பழக வைப்பது உன்னுடைய வேலை. சீக்கிரம் அந்த வேலையை செய்து முடி. வீட்டில் உண்மையைச் சொல்ல பாரு என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் மனோஜ், கிரிஷ் இங்க இருக்க கூடாது. இருந்தால் தேவையில்லாத பிரச்சினை வரும். ஒழுங்கு மரியாதையாக எங்கேயாவது கொண்டு போய் விடுங்கள் என்று கோபத்தில் முத்துவை திட்டுகிறார். இன்னொரு பக்கம் நீத்து, ரவியை ஹக் செய்து இருக்கும்மாறு எடுத்த போட்டோவை ஸ்ருதிக்கு கடுப்பேற்ற அனுப்பி விடுகிறார். ஸ்ருதி, ரவிக்கு போன் செய்து எனக்கு எதற்கு இப்படி எல்லாம் போட்டோ அனுப்பனும்.என்று திட்டுகிறார். உடனே ரவி, என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் நீங்கள் தலையிட வேண்டாம். ரெஸ்டாரன்ட் சம்பந்தமாக மட்டும் பேசுங்கள். தேவையில்லாமல் ஸ்ருதிக்கு மெசேஜ் அனுப்பாதீர்கள் என்றெல்லாம் நீத்துவிடம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பின் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மீனா, கிரிஷை எழுப்பி ரோகினியிடம் தூங்க வைப்பதற்கு அனுப்பி வைக்கிறார். கிரிஷ் ரோகிணியுடன் சேர்ந்து தூங்குகிறார். காலையில் க்ரிஷ் பக்கத்தில் படுத்திருப்பதை பார்த்த மனோஜ் கத்திக்கொண்டு வீட்டில் பிரச்சினையை செய்கிறார். விஜயா, மீனாவையும் கிரிஷையும் திட்டிக் கொண்டிருக்கிறார். பின் அண்ணாமலை, விஜயாவை திட்டி அறிவுரை செல்கிறார். அதற்குப்பின் சிந்தாமணி, விஜயா, ரோகினி மூவருமே பார்வதி வீட்டிற்கு சென்று மீண்டும் கிரிஷை என்ன செய்வது என்று திட்டம் போடுகிறார்கள். இதை பார்த்து ரோகினிக்கு கோபம் தான் வருகிறது

behindtalkies AMP · Quick view
View full