மீனா மீது பழி சுமத்திய விஜயா, உண்மையை கண்டுபிடிக்க முத்து போட்ட திட்டம்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By Rajkumar · 10/7/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் 'சிறகடிக்க ஆசை' ஒன்று. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்தார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைத்தார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை.

அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் கடந்த வாரம் மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். இதனால் விஜயா, மீனாவின் நகையை கொடுத்தார். ஆனால், மனோஜ் அடமானம் வைக்காமல் விற்று விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து பாட்டிக்கு கிபிட் வாங்க, மீனா நகையை வாங்கி கொண்டு கடைக்கு சென்று இருந்தார். ஆனால், அது எல்லாம் கவரிங் என்று தெரிந்தது.

சிறக்கடிக்க ஆசை :

பாட்டி பிறந்தநாள் முடிந்தவுடன் சொல்லலாம் என்று மீனா,முத்து அமைதியாக இருந்தார்கள். வீட்டில் பாட்டி பிறந்தநாளை எல்லோரும் சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள். அப்போது பாட்டி, என்னுடைய பிறந்தநாளுக்கு மனதிற்கு பிடித்த பரிசு யார் கொடுக்கிறீர்களோ? அவர்களுக்கு நான் ஒரு கிப்ட் தரப்போகிறேன் என்று சொல்லி இருந்தார். இதனால் எல்லோரும் கிப்ட் வாங்கி தந்தார்கள். ஆனால், முத்து தன் பாட்டிக்காக அவருடைய பள்ளி நண்பர்களை அழைத்து வந்திருந்தார் .

பாட்டி கொடுத்த பரிசு:

அதை பார்த்தவுடன் பாட்டி சந்தோசத்தில் அழுகிறார். பின் அவர்களுடன் பாட்டி பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தார். அதற்குப் பின் கேக் வெட்டி சந்தோசமாக கொண்டாடி இருந்தார்கள். இறுதியில் பாட்டி, என்னுடைய மனதை குளிர வைத்தது முத்து-மீனா தான். இவர்களுக்கு என்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பரம்பரை நகையை கொடுக்கிறேன் என்றதும் மற்றவர்களுக்கெல்லாம் பயங்கரமான கோபம் வந்தது. அடுத்த நாள் பாட்டி ஊருக்கு சென்ற பின் முத்து தன்னிடம் இருந்த கவரிங் நகை விஷயத்தை அண்ணாமலை இடம் சொன்னார்.

நேற்று எபிசோட்:

அண்ணாமலை, என்ன விஜயா? என்று கேட்டவுடன் எனக்கு என்ன தெரியாது என்கிறார். மீனாவின் வீட்டில் தான் நகை மாறி இருக்கும். அவருடைய தம்பி தான் இந்த வேலை எல்லாம் செய்திருப்பான் என்று விஜயா சொல்கிறார். இதனால் கோபமடைந்த மீனா, நாங்கள் ஏழைகள் தான். ஆனால், இப்படி எல்லாம் செய்ய மாட்டோம் என்று வாதம் செய்கிறார். இருந்தாலுமே மீனாவுக்கு எதிராக ரோகினி, மனோஜ், விஜயா எல்லோருமே பேசுவதால் அண்ணாமலை குழம்பிப் போய் இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Siragadikka Aasai - Vijay TV (@siragadikkaaasai)

இன்றைய எபிசோட்:

இறுதியில் முத்து, இந்த வேலையை யார் செய்தது என்று எனக்கு தெரியும். ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். அதற்குப் பிறகு சுருதியை சந்தித்து இதைப்பற்றி பேசியபோது சுருதியும் வேற குரலில் பேசியதால் மனோஜ் தடுமாறி அமைதியாக இருக்கிறார். இனி வரும் நாட்களில் மனோஜ் செய்த தில்லாலங்கடி வேலை வெளியே தெரியுமா? மீனாவின் மீது போடப்பட்ட பழி நீங்குமா? முத்து எப்படி கண்டுபிடிப்பார்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

Tamil Behind Talkies AMP · Quick view
View full