-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

மீனா போட்ட சபதம், முத்து கொடுத்த சப்ரைஸ், கோபத்தில் விஜயா- சிறகடிக்க ஆசை

0
83

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா.

-விளம்பரம்-

உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் ரோகினி மாமா என்று சொல்லிக் கொண்டு வந்த மலேசியா மாமாவை மீனா பார்த்து விடுகிறார். உடனே அவர் தப்பித்து செல்ல, மீனாவும் விடாமல் துரத்திக் கொண்டு போனார். ஒரு வழியாக மலேசியா மாமா தப்பித்து விடுகிறார். இருந்தாலும், மீனா-முத்துக்கு சந்தேகம் வருகிறது. இது குறித்து இருவருமே பேசி கொண்டு இருப்பதை ஒட்டு கேட்ட ரோகினி வீட்டில் உள்ள எல்லோர் முன்பும் தன்னுடைய மலேசியா மாமாவுடன் போனில் பேசுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல்:

முத்துவும் போனை வாங்கி பேசுகிறார். ஆனாலும், முத்துவிற்கு சந்தேகம் அதிகம் ஆகிறது. இன்னொரு பக்கம் ரூம் பிரச்சனை வந்ததால் வீடு கட்டுவது குறித்து அண்ணாமலை யோசித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவர், அனைவரிடமும் மாதம் நீங்கள் எவ்வளவு காசு கொடுப்பீர்கள் என்று கேட்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகையை சொல்கிறார்கள். அதற்குப் பின் வீடு கட்டுவதற்கு குறித்து தன் நண்பரிடம் அண்ணாமலை பேசுகிறார். அவர் 5 லட்சம் ஆகும் என்று சொல்வதால் வீட்டு பத்திரத்தை அடகு வைக்கலாம் என்று அண்ணாமலை சொல்ல விஜயா முடியாது என்று மறுக்கிறார்.

அண்ணாமலை எடுத்த முடிவு:

-விளம்பரம்-

இந்த விவகாரம் ஸ்ருதி அம்மாவிற்கு தெரிந்தவுடன் முத்து வீட்டிற்கு வந்து அவர் சகுனி வேலை செய்கிறார்.
இதனால் மனோஜ், முத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி அளவிற்கு சண்டை ஏற்படுகிறது. பின் முத்துவை எல்லோருமே திட்டுகிறார்கள். இதனால் முத்து மன வேதனையில் குடித்து விடுகிறார். மேலும், நேற்றைய எபிசோடில் சோகத்தில் இருக்கும் முத்து எல்லாத்தையும் புலம்பி பேசுகிறார். மீனா, அண்ணாமலை இருவருமே முத்துவின் நிலைமையை புரிந்து கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். மற்றவர்கள் வழக்கம் போல் முத்துவை திட்டுகிறார்கள்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

அடுத்த நாள் காலையில் முத்து குடித்து விட்டு வந்தது தவறு என்று சாமி அறையில் பூஜை செய்து கொண்டிருக்கிறார். இதை பலருமே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், வீடு கட்டுவது குறித்து முத்து எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார். உடனே ரோகினி அவரை வம்பிழுப்பது போல் பேசுகிறார். இதைக் கேட்டு மீனா, மேல் வீட்டை என்னுடைய வீட்டுக்காரர் கட்டுவார் என்று சபதம் போடுகிறார். விஜயாவும், ரோகினியும் கிண்டல் செய்து விட்டு செல்கிறார்கள்.

இன்றைய எபிசோட்:

இறுதியில் முத்து சவாரி சென்ற இடத்திலிருந்து செங்கல் வாங்கி வருகிறார். அதை மீனாவிடம் காண்பிக்கிறார். இதைப் பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே கிண்டல் செய்கிறார்கள். இருந்தும் விடாமுயற்சியுடன் நாங்கள் கட்டுவோம் என்று நம்பிக்கையோடு பேசுகிறார்கள். பிறகு மாடியில் மீனாவும் முத்துவும் கொண்டு வந்த செங்கல்களை அடுக்கி வைத்து அழகு பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கின்றனர். இத்துடன் சீரியல் முடிகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news