ரோகினி செய்த பித்தலாட்ட வேலையை போட்டுடைத்த வித்யா, அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு - சிறகடிக்க ஆசை

By subhashini · 20/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, நீ வந்த நேரம் தான் வீட்டில் இவ்வளவு பிரச்சினை. உன் ராசி தான் இதற்கெல்லாம் காரணம் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். ஆனால், முத்து இந்த முறை மீனாவிற்கு சப்போர்ட் செய்து எதுவுமே பேசவில்லை. அண்ணாமலை, நீ விசாரிக்காமல் செய்த தவறுக்காக மீனா மீது பழி போடாதே என்றார். உடனே விஜயா, நான் ரோகினிக்கு விவாகரத்து செய்து மனோஜிற்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்றார். இதை கேட்டு மொத்த குடும்பம் ஷாக் ஆனது.

ரோகினி, கோபத்தில் சுருதி- மீனாவை மிரட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் முத்து பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். அண்ணாமலை, முத்து உண்மை சொல்ல தயங்கினார்கள். ஆனால், அதற்குள் விஜயாவே போன் செய்து எல்லா உண்மையும் சொல்லி இருப்பது தெரிய வருகிறது. பாட்டி, வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினார். அதற்குப்பின் முத்து அல்வா செய்து எல்லோருக்கும் கொடுத்தார்.

சிறகடிக்க ஆசை:

அதை வாயில் வைக்க முடியவில்லை, ரொம்ப மோசமாக இருக்கிறது. அதுக்குப்பின் விஜயா, ரோகினி சம்மந்தப்பட்ட போட்டோவை எல்லாம் எடுத்து மனோஜிடம் சொல்லி எரிக்க சொன்னார். அந்த சமயம் பார்த்து பைனான்சியர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார். அப்போது பைனான்சியர், மனோஜ் ஒன்னுத்துக்கும் லாகில்லாதவன். நான் ரோகினியை நம்பி தான் பணத்தை இருந்தேன். இனிமேல் மனோஜ் பணத்திற்கு யார் கேரன்டி கொடுப்பது என்றார். கோபத்தில் விஜயா, மனோஜ் பணம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார்.
வீட்டில் எல்லோரும் தடுத்தும் விஜயா கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பைனான்சியர், சிந்தாமணிக்கு போன் செய்து முத்து வீட்டில் நடந்தது எல்லாம் சொல்கிறார். சிந்தாமணி இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயாவின் வீட்டை எழுதி வாங்குவதற்கு திட்டம் போடுகிறார். அதற்குப்பின் ரோகிணி இடம் சிந்தாமணி, உன்னுடைய மாமியார் விவாகரத்திற்கு ஏற்பாடு செய்கிறார் என்று சொல்கிறார். இதை கேட்டு ரோகினிக்கு பயங்கர கோபம் வருகிறது.
இன்னொரு பக்கம் பார்வதியை சந்தித்த விஜயா, மனோஜ்க்கு விவாகரத்து வாங்குவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். பின் மனோஜ் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த சிந்தாமணி, எனக்கு தெரிந்த பைனான்சியர் மூலம் பிரச்சனை முடிக்கலாம். அவருக்கு
அடமானம் போட பொருள் வேண்டும் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு விஜயா, வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார். இன்னொரு பக்கம் சத்யா நண்பர், முத்து காரில் இருந்து பிரேக் ஒயர் கட் பண்ணது சிட்டி தான். அதை ரோகிணி தான் செய்ய சொன்னார் என்று நடந்ததை எல்லாம் சொல்கிறார். இதை சத்யா, மீனா- முத்துவிடம் சொல்லிவிடுகிறார். முத்து வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லி ரோகினி மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பதாக சொல்கிறார். அந்த சமயம் வந்த வித்யா, ரோகினி சேர்ந்த எல்லா சதி வேலைகளையும் புட்டு புட்டு வைக்கிறார். இதைக் கேட்டு விஜயாவிற்கு தலை சுற்றுகிறது. மனோஜ், போலீசில் புகார் கொடுக்க இருக்கிறார். உடனே அண்ணாமலை, நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். ரோகினி இந்த வீட்டு மருமகள் கிடையாது. மனோஜ்க்கு விவாகரத்து வாங்கி கொடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full