இரு மகன்களின் வாழ்க்கைக்காக போராடும் விஜயா, அண்ணாமலை சொன்ன வார்த்தை - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நீத்துவின் மொபைலில், ரவி ஐ லவ் யூ என்று மெசேஜ் போட்டு இருந்தார். இதை அறிந்த சுருதி பயங்கரமாக கொந்தளித்து கடைக்கு போனார். அங்கு நீத்து, ரவியிடம் காதலை சொல்ல கேக் வைத்துக் கொண்டு இருந்தார். ஸ்ருதி, கேக்கை நீத்துவின் மீது அடித்து விட்டு சண்டை போட்டார். நீத்து, நான் உங்களை காதலிக்கிறேன் ரவி என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் ரவியுமே கோபப்பட்டார். சுருதி, ரவியை திட்டிவிட்டார் சென்று விட்டார்.
கிரிஷ் உறவினர்கள், ரோகினி இடம் சொத்தில் பங்கு தருவதாக சொன்னார்கள். ஆனால், ரோகிணி வேண்டாம் என்றார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் நீத்து உடன் பேசியதை பற்றி ரவியிடம் சொன்னார்கள். ரவிக்கு என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி போய் இருந்தார். அந்த சமயம் பார்த்து ஸ்ருதியின் அம்மா சுதா, முத்து வீட்டிற்கு வந்து ரகளை செய்து கொண்டிருந்தார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. சுதா, ரவி குடும்பத்தை மிரட்டினார். அப்போது அண்ணாமலை, சுதாவிடம் நடந்ததை விசாரித்தார்.
சிறகடிக்க ஆசை:
சுதாவிற்கு உண்மை எதுவுமே தெரியவில்லை. பின் ரவி, நீத்து செய்த வேலையெல்லாம் சொன்னார். இதை கேட்டு மீண்டும் சுதா கொந்தளித்து கத்தினார். விஜயா, ரவி மீது எந்த தவறும் இல்லை என்றார். பின் மீனா, ரவி இருவரும் சுருதியை சந்தித்து பேச போனார்கள். ஆனால், சுருதி, மீனாவை மட்டும் தான் அழைத்து பேசி இருந்தார். அப்போது நடந்ததை எல்லாம் மீனா சொன்னார். அதற்கு சுருதி, ரவி அந்த ரெஸ்டாரண்டில் இனி வேலை செய்யக்கூடாது. நீத்து தான் செய்த தவறுக்காக சோசியல் மீடியாவில் என்னிடம் மன்னிப்பு கேட்கணும் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுருதி, நான் போட்ட கண்டிஷனுக்கு சம்மதம் என்றால் நான் வீட்டிற்கு வருவேன் இல்லை என்றால் வரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார். இதை அறிந்த சுருதி பெற்றோர்கள், ரவியையும் அவருடைய குடும்பத்தையும் மோசமாக பேசி மிரட்டுகிறார்கள். வீட்டிற்கு வந்த மீனா நடந்தது எல்லாம் முத்துவிடம் சொல்கிறார். பின் ரவி, நீத்துவிற்கு போன் செய்கிறார். நீத்து, உங்களை தான் நினைத்தேன் என்று ரொம்ப காதலாக பேசுகிறார். ரவி, நான் வேலைக்கு வரமாட்டேன் என்று சொல்கிறார். நீத்து, அது எனக்கு தெரியும். நான் வேறு ஒரு ஆளை வேலைக்கு எடுத்து விட்டு தான் உங்களிடம் காதலை சொன்னேன். என் மீது எந்த தவறும் இல்லை. நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
விஜயா, ஸ்ருதிக்கு போன் செய்து வீட்டிற்கு வர சொல்கிறார். ஆனால், சுருதி தன்னுடைய பிடிவாதத்தில்
உறுதியாக இருக்கிறார். அதற்குப்பின் முத்து- மீனா இருவரும் ஸ்ருதியிடம் பேசுவதற்கு அண்ணாமலை இடம் கேட்கிறார். அண்ணாமலையும் ரவியின் வாழ்க்கைக்காக பேசுவதற்கு ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் ரோகினி, ஆர்டரை கேன்சல் செய்த ஷோரூமில் சென்று பேசுகிறார். ஆனால், அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. பின் ரோகினி, நீங்கள் ஆர்டர் கொடுத்தால் என்னுடைய விவாகரத்து நின்றுவிடும். தயவு செய்து கொடுங்கள் என்றெல்லாம் மீண்டும் டிராமா போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.