மனோஜ் வாழ்க்கையை மீட்க போராடும் விஜயா, முத்து சொன்ன வார்த்தை - சிறகடிக்க ஆசை

மனோஜ் வாழ்க்கையை மீட்க போராடும் விஜயா

By subhashini · 30/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் கடைக்கு வந்த ரோகிணி, நீ என்னிடம் எப்போதும் வரப்போவதில்லை. நீ உன்னுடைய அம்மாவை பற்றி யோசிக்கிறாய். நான் என் மகனைப் பற்றி யோசிக்க விரும்புகிறேன். ஐந்து லட்சம் பணத்தை கொடுத்துவிடு. நான் விவாகரத்து கொடுத்து விடுகிறேன் என்றார். இதைக்கேட்டு மனோஜிக்கு கஷ்டமாக இருக்கிறது. பின் வீட்டிற்கு சென்ற மனோஜ், ரோகினி உடன் இருந்த நினைவுகளை எல்லாம் நினைத்து பார்த்து வருத்தப்பட்டார். ரோகினிக்கு விவாகரத்து கொடுப்பதா? கனகாவை திருமணம் செய்து கொள்வதா? என்று புரியாமல் குழம்பி போய் இருந்தார் மனோஜ்.

முத்து, சத்யா-ரேகாவின் திருமணத்தை நடத்துவதை பற்றி அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருந்தார். யாரையெல்லாம் அழைக்கலாம் என்று முத்து, அண்ணாமலை இருவரும் டிஸ்கஸ் செய்தார்கள். அப்போது விஜயா, நானும் வருகிறேன் என்றார். இதைக் கேட்டு முத்துவிற்கு ஷாக் ஆக இருக்கிறது. ஆனால், விஜயா இந்த கல்யாணத்தில் கலந்து கொள்வதற்கு காரணம் சிந்தாமணியை பழிவாங்கத்தான். அதற்கு பின் வீட்டிற்கு வந்த மனோஜ், விஜயாவிடம் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் கனகாவை பற்றி சொன்னார். எல்லோருமே சொத்துக்காக தான் மனோஜ் திருமணம் செய்து கொள்கிறார் என்று புரிந்து கொண்டார்கள். கோவப்பட்ட விஜயா, இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லை என்றார்.

சிறகடிக்க ஆசை:

மனோஜ் எவ்வளவு சொல்லியுமே விஜயா கேட்கவில்லை. இன்னொரு பக்கம் சீதா, சந்திரா இருவரும் முத்துவின் பாட்டி வீட்டுக்கு வந்தார்கள். சீதா தன்னுடைய கணவரிடம் பொய் சொல்லிவிட்டு தான் வந்திருந்தார். சீதாவின் மீது இருந்த சந்தேகத்தால் அருண் பின் தொடர்ந்து வந்தார். அருண்- சீதா இடையே நடக்கும் சண்டையை முத்துவின் பாட்டி தெரிந்து கொண்டார். பின் சீதாவிடம் பாட்டி, யாருக்காகவும் அமைதியாகவும் அடங்கியும் போகக்கூடாது என்றார். அதற்குப்பின் விஜயா, பார்வதி சந்திக்கப் போனார். அங்கு ரோகிணி இருப்பதை பார்த்தவுடன் விஜயா வழக்கம்போல ருத்ரதாண்டவம் ஆடுகிறார். அப்போது ரோகினி, நான் மனோஜ்க்கு விவகாரத்து கொடுத்து விடுகிறேன். உங்களை ஏமாற்றியதற்க்கும் பொய் சொல்லியதற்கும் சாரி என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, பணத்தை நான் அப்புறமாக தருகிறேன். ஒழுங்கு மரியாதையாக விவாகரத்தில் கையெழுத்து போடு என்று சொல்கிறார். ரோகினி, எனக்கு உங்கள் மீதும் பையன் மீதும் நம்பிக்கை இல்லை. எனக்கு பணத்தை கொடுங்கள் நான் விவாகரத்தில் கையெழுத்து போடுகிறேன் என்று சொல்கிறார். இதனால் கோபப்பட்ட விஜயா, ரோகினியை திட்டி விட்டு அங்கிருந்து வருகின்றார். அதற்குப்பின் மனோஜ், ஜோதிடர் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜோதிடர், கனகாவை திருமணம் செய்து கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தியதால் மனோஜ் மனம் மாறுகிறார். அந்த சமயம் வந்த விஜயா, ரோகினி பணம் கொடுத்தால் விவாகரத்து தரும் விஷயத்தை பற்றி சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

மனோஜ், மீண்டும் கனகாவை கல்யாணம் செய்வதை பற்றி சொல்கிறார். விஜயா, திட்டிவிட்டு பணத்தை ஏற்பாடு செய்யும் வேலையை பார் என்று சொல்கிறார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த விஜயா, ரோகினி சொன்ன விஷயத்தையும், மனோஜ்க்கு பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார். முத்து, நாங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது யார் உதவினார்கள். இந்த வீட்டை மீட்க ரொம்பவே நாங்கள் கஷ்டப்பட்டோம். உங்கள் பையனிடம் இந்த அறிவுரை எல்லாம் சொன்னீர்களா? என்று கேட்கிறார். விஜயா, எதுவுமே பேச முடியவில்லை. இருந்தாலும் மனோஜியின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக முத்துவிடம் விஜயா பணம் கேட்டு நிற்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full