கிரிஷ் செய்த வேலையால் பதறிய ரோகினி, விஜயாவிற்கு தேடி வந்த புது பிரச்சனை - சிறகடிக்க ஆசை

By subhashini · 22/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, மீனாவிற்கு மாத்தி மாத்தி ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்து கடுப்பான முத்து, என்ன வேண்டும் என்று முதலில் சொல்லுங்கள். அவள் ஒன்னும் இந்த வீட்டு வேலைக்காரி இல்லை என்று மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். ஸ்ருதி, ரவி, அண்ணாமலை எல்லோருமே மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசுவதால் விஜயாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப் பின் ஷோரூமில் ரோகினி, ஹோட்டலில் மேக்கப் போட பெரிய ஆர்டர் கிடைத்திருப்பதால் மனோஜை அழைத்தார். மனோஜ், தன்னுடைய அம்மா திட்டுவார் என்று பயந்து கொண்டு இருந்தார்.

பின் முத்து, மீனாவின் கடைக்கு போனார். அங்கு மீனா- மூர்த்தி இருவருமே தெரிந்து கொள்ளாதவர்கள் போல் சண்டை போட்டுக் கொண்டார்கள். அந்த சமயம் பார்த்த அருண், முத்துவை பார்த்து முறைத்தார். பின் முத்து தன்னுடைய அப்பாவை அழைத்துக் கொண்டு பள்ளிக்குப் போனார். தன் அப்பாவை விட்டு வரும் வழியில் க்ரிஷ் அழுது கொண்டிருப்பதை முத்து பார்த்தார். அப்போது ஒருவர், வண்டிக்காரன் அந்த அம்மா மீது ஏற்றிவிட்டு சென்றுவிட்டான் என்றார். உடனே முத்து பதறி அடித்துக் கொண்டு கிரிஷ் பாட்டியை காரில் ஏற்றுக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் ராணி லேகியத்தை கொண்டு வந்து ரோகினிடம் கொடுத்தார். ரோகினி, மனோஜ் தன்னிடம் சந்தோசமாக பேசி பழகுவது போல் கனவு கண்டார். அதற்குப்பின் முத்து, கிரிஷை அழைத்து வந்தார். அதை பார்த்தவுடன் ரோகிணி பதறிப் போனார். முத்து வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்தார். இதனால் ரோகினி, தன்னை பற்றி உண்மை தெரிந்து விட்டதா என்று ரொம்பவே பயந்து நின்றார். அப்போது முத்து, கிரிஸ் பாட்டிற்கு அடிபட்டு இருக்கு. நான் அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு கிரிஷை அழைத்து வந்தேன். பத்து நாட்களுக்கு கிரிஸ் இங்கே தான் இருப்பார் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:

இதனால் விஜயா பயங்கரமாக கோவப்பட்டு திட்டினார். ரோகினி எதுவும் பேச முடியவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே கிரிஷ் தங்குவதற்கு சம்மதம் சொன்னார்கள். விஜயா மட்டும் ரொம்ப மோசமாக கிரிசையும் அவருடைய குடும்பத்தையும் பற்றியும் பேசினார். கடைசியில் அங்கேயே கிரிஷ் தங்கினார். அதற்குப்பின் ரோகினி தன்னுடைய அம்மாவை பார்ப்பதற்காக ஹாஸ்பிடல் போனார். அங்கு ரோகினி, தன் அம்மாவைப் பற்றி விசாரிக்காமல் திட்டி கொண்டு இருந்தார். இதனால் கோபப்பட்டு அவருடைய அம்மா, ரோகினியை திட்டினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, கிரிஷ் உன்னையும் பார்த்துக் கொள்வதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். முத்துவிடம் நான் சொல்வது போலவே சொல் என்கிறார். அதற்கு ரோகினி அம்மாவும் சம்மதிக்கிறார். பின் கிரிஷ், யாரிடமும் சொல்லாமல் ரோகினி ரூமுக்கு சென்று விடுகிறார். அப்போது ரோகினி, நான் தான் உன் அம்மா என்று யாரிடமும் சொல்லாதே என்று சொல்கிறார். அதற்கு பின்பு மீனா தேடி வர, கிரிஷ் ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார். மறுநாள் காலையில் கிரிஷ் பள்ளிக்கு லீவ் லெட்டர் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே விஜயா, முத்து-மீனா இருவரும் படிக்காததை பற்றி கிண்டல் கேலி செய்கிறார். பின் ரோகினி, கடிதம் எழுதி தருகிறார். ஆனால், பழக்க தோஷத்தில் ரோகினி தன் பெயர் எழுதி விட, மனோஜ் அதை பார்த்து கேள்வி கேட்டார். உடனே ரோகினி ஏதோ சமாளித்து விடுகிறார். இன்னொரு பக்கம் விஜயா, பரதநாட்டிய வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது காதல் ஜோடியில் அந்த பெண் மயங்கி கீழே விழுகிறார். உடனே விஜயா, மருத்துவரை வரவைத்து செக் பண்ண, டாக்டர் இந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார். நீங்கள் பாட்டியாகப் போகிறீர்கள் என்று சொல்கிறார். இதை கேட்டு விஜயா மயங்கி விழுந்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full