மீனாவிற்கு கிடைத்த புதிய ஆர்டரால் வயிறு எரியும் விஜயா, சிந்தாமணி சூழ்ச்சி என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 7/3/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ஸ்ருதியின் அம்மா, அண்ணாமலை வீட்டிற்கு வந்து ருத்ர தாண்டவம் ஆடினார். உங்களுக்கு பணம் தேவை என்றால் என்னிடம் சொல்லுங்கள். என் மகளை இரண்டு வேலை செய்ய சொல்லி கஷ்டப்படுத்தாதீர்கள் என்று ரொம்ப மோசமாக அண்ணாமலை குடும்பத்தை பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்ட முத்து, மீனாவால் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரிடம் சண்டைக்கு போனார்கள். பின் ஸ்ருதி அம்மா, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ? எழுதிக் கொள்ளுங்கள். என் மகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என்று செக் கொடுத்தார்.

உடனே முத்து, 50 கோடி செக்கில் எழுத, சுருதி அம்மா ரொம்ப பயந்துவிட்டு செக்கை வாங்கி இருந்தார். அதற்கு முத்து, உங்கள் வாய்க்கு வந்ததெல்லாம் பேச வேண்டாம். உங்கள் பணம் எங்களுக்கு தேவையில்லை என்று செக்கை கிழித்து போட்டார். அதற்கு பின் சுருதி அம்மா, ரவிக்கு ரெஸ்டாரண்ட் வைத்து தருகிறோம் என்றவுடன், எதுவாக இருந்தாலும் சுருதி- ரவி முடிவு என்றார் அண்ணாமலை. இன்னொரு பக்கம் கோவிலில் வித்யாவிடம் தன்னுடைய காதலை சொல்ல முருகன் ரொம்பவே தவித்தார். அதேபோல் அருண்-சீதா இருவரும் கோவிலுக்கு வந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் அருண், என்னுடைய காதலுக்கு எப்போது பதில் சொல்வீர்கள் என்று கேட்க, கொஞ்சம் டைம் ஆகும். உங்களால் காத்திருக்க முடியாதா? என்று சீதா கேட்டார். அதற்கு அருண், கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் மீனா-முத்து இருவரும் பவானியின் வீட்டிற்கு சென்று திருமண வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திருமணத்திற்காகும் செலவை பவானி அப்பா கணக்கு போட்டு பார்த்தார். அதற்குப் பின் வீட்டிற்கு வந்த ஸ்ருதி ரவியிடம் முத்து நடந்ததை சொன்னார்.

நேற்று எபிசோட்:

உடனே விஜயா, உன் மாமியார் ரெஸ்டாரன்ட் வைத்து தருகிறார். யோசித்து முடிவெடு என்று சொன்னவுடன் ரவி, நான் சொந்தமாக சம்பாதித்து தான் ரெஸ்டாரன்ட் தொடங்குவேன். யாருடைய பணமும் தேவையில்லை என்று கோபப்பட்டார். உடனே சுருதி, என் அப்பா தந்தால் என்ன பிரச்சனை என்று கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. அதற்குப்பின் முத்து, ரவி, மனோஜ் மூவரும் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்து, நீ எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவெடு. யார் பேச்சையும் கேட்காதே என்று சொன்னவுடன் மனோஜ், முத்துவுக்கு எதிராகவே பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, என்னைக்குமே சுய கௌரவம் என்பது ரொம்ப முக்கியம். அவர்கள் ரெஸ்டாரன்ட் வைத்து கொடுப்பதற்கு ஒத்துக்காதே என்று சொல்கிறார். உடனே மனோஜ், அது எப்படி இருந்தாலும் உங்களுக்கு தானே வர போகிறது. அவன் நீ வளரக்கூடாது என்று நினைக்கிறான் என முத்துவை ஏளனமாக பேசுகிறார். அதற்கு ரவி, யாருடைய பணமும் தேவையில்லை என்று சுயமரியாதையுடன் இருக்கிறார். இன்னொரு பக்கம் மீனா, சுருதி, ரோகினி மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரோகினி-மீனா இடையே வாக்குவாதம் வந்தது.

சீரியல் ட்ராக்:

உடனே ஸ்ருதி, தன்னுடைய அப்பா பணத்தில் ரெஸ்டாரண்ட் வைப்பதில் தவறு இல்லை என்பது போலவே பேசுகிறார். மறுநாள் காலையில் மீனாவுக்கு புதிய ஆர்டர் கிடக்கிறது. மீனா, அந்த மேனேஜர் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட்டு விடுகிறார். அதற்கு பின் வந்த சிந்தாமணி, நான் சொல்வது போல செய்து முடித்தாயா? இனிமேல் தான் மீனாவுக்கு இருக்கு ஆட்டம் என்று சிரிக்கிறார். பின் வீட்டிற்கு வந்த மீனா, தனக்கு கிடைத்த புதிய ஆர்டர் பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்படுகிறார். ஆனால், வழக்கம் போல் மனோஜ்,விஜயா இருவருமே மீனாவை கிண்டல் கேலி செய்கிறார்கள். ஆனால், அண்ணாமலை-முத்து- சுருதி எல்லோரும் மீனாவிற்கு சப்போர்ட்டாக பாராட்டி பேசுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full