கிரிஷிடம் மோசமாக நடந்து கொள்ளும் விஜயா, மனோஜ் செய்த விஷயம் - பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷை அழைத்துக் கொண்டும் மனோஜ்- ரோகிணி இருவரும் வீட்டிற்கு வருவதை பார்த்த விஜயா, வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆடினார். ரோகினியால் எதுவும் பேச முடியவில்லை. அந்த சமயம் வந்த அண்ணாமலை, கிரிஷ்க்கு பிடித்திருப்பதால் தான் மனோஜிடம் செல்ல விரும்பினார். இது எல்லாம் நீ தடுக்கக்கூடாது என்றெல்லாம் திட்டி இருந்தார். அந்த சமயம் பார்த்து ரவி வந்து விட்டார். பின் ரவி, தான் வெற்றி பெற்றதை சொல்லி வீட்டில் எல்லோருக்கும் வாங்கி வந்த கிபிட் கொடுத்தார். ரூமில் ரவி தான் எடுத்து வந்த துணிகள் எல்லாம் அடுக்கி வைத்தார். அப்போது நீத்து துணியை பார்த்து சுருதி கோபப்பட்டார்.
ஸ்ருதி, நீத்து துணி இருந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரவியிடம் சண்டை போடாமல் அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜ் செய்ததை நினைத்து சந்தோஷப்பட்டார். பின் தன்னுடைய உடம்பில் கல்யாணி ஆவி வந்தது போல ரோகிணி நடித்துக் கொண்டு கிரிஷ்க்கு நீதான் அப்பா, ரோகிணி தான் அம்மா என்றெல்லாம் சொல்வதால் மனோஜ் ஒத்துக்கொண்டார். பின் ரோகினி சொன்னது போல் கிரிஷ், மனோஜை பார்த்து அப்பா என்று கூப்பிட்டார். வீட்டில் உள்ள எல்லாருமே ஷாக் ஆனார்கள். உடனே அண்ணாமலை, யார் உன்னை அப்படி சொல்ல சொன்னது என்றார்.
சிறகடிக்க ஆசை:
அதற்கு கிரிஸ், ரோகிணி தான் என்றார். ரோகினி, நான் எதுவும் சொல்லவில்லை என்றார். இது கல்யாணி ஆவி செய்த வேலை தான் என்று புரிந்து கொண்ட மனோஜ், அவனுக்கு யாரும் இல்லை. அதனால் அவன் எங்களை அப்பா அம்மா என்று அழைக்கிறார். கூப்பிட்டு கொள்ளட்டும் என்றார். உடனே விஜயா, அதெல்லாம் முடியாது என்று மனோஜை திட்டிக் கொண்டிருந்தார்.அதற்கு பின் மீனா, ரோகிணி இருவரும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். மீனா, சீக்கிரமாக வீட்டில் உண்மையை சொல். உன் வாழ்க்கையில் நடந்த சில தவறுக்காக தான் நானும் அமைதியாக இருக்கிறேன். உண்மையை சொல்லாமல் எத்தனை நாட்கள் தான் ஏமாற்றுவாய்? என்று திட்டினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, உன் உடம்பில் கல்யாணி ஆவி வந்திருக்கிறது என்று எத்தனை நாளுக்கு நடிக்கப் போகிறாய். சீக்கிரத்தில் உண்மையை சொல்லு என்று திட்டிவிட்டு செல்கிறார். இதனால் ரோகிணி பயங்கரமாக கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் மனோஜை, பார்வதி வீட்டிற்கு வரவைத்த விஜயா, கிரிஷ் வீட்டை விட்டு அனுப்பு. நீ ஏன் அவனுக்கு அப்பாவாக ஒத்துக் கொண்டாய்? என்றெல்லாம் கேட்கிறார். மனோஜ், அதற்கு காரணம் இருக்கிறது. உண்மையை சொல்ல முடியாது என்று சமாளித்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். அதற்குப்பின் சிவன்- பார்வதி இருவரும் சேர்ந்து தங்களுடைய சேனலில் டெவலப் செய்வதற்காக ஊட்டிக்கு செல்ல திட்டம் போட்டு இருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இதை கேட்டு விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. அதற்குப்பின் வீட்டில் க்ரிஷ், தன்னுடைய மார்க் சீட்டை மனோஜிடம் காண்பித்து கையெழுத்து போட சொல்கிறார். மனோஜ், நான் எதற்கு போடணும் என்று கேட்கிறார். இதை கேட்ட விஜயா கோபப்பட்டு கிரிஷை திட்டி ஒழுங்கு மரியாதையாக இருந்துகொள் இல்லை என்றால் அவ்வளவுதான் என்றெல்லாம் மோசமாக பேசுகிறார். மீனா,முத்து, அண்ணாமலை எல்லோருமே சப்போர்ட் செய்தும் விஜயா கேட்கவில்லை. அதற்குப் பின்னர் ரூமில் ரோகினி பேய் வந்தது போல நடிப்பதால் மனோஜ் பயந்து கொண்டு ஓடி வந்து மார்க் கார்டில் கையெழுத்து போட்டு விடுகிறார். இதையெல்லாம் பார்த்து முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.