மீனாவின் ஆர்டரை கெடுக்க நினைக்கும் விஜயா, முத்து வீட்டில் நடக்கும் கலவரம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், சத்யாவை காப்பாத்தின விஷயத்தை முத்து போன் செய்து வீட்டிற்கு சொன்னவுடன் மீனா, அவருடைய அம்மாவும் சந்தோஷப்பட்டார்கள். பின் சீதாவிற்கு போன் செய்த அருண், போலீஸ் போவதற்கு முன்பே உங்களுடைய மாமா சத்யாவை காப்பாற்றி விட்டார். ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொன்னார். உடனே சீதா, நீங்கள் செய்த உதவியால் தான் இதை செய்ய முடியாது என்று நன்றி சொன்னார். இன்னொரு பக்கம் முத்து வீட்டில் விஜயாவிடம் ரோகினி தன்னுடைய சம்பளப் பணத்தை கொடுத்தார்.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த விஜயா பின் பணத்தை வாங்கி கொண்டார். உடனே அண்ணாமலை, பணத்தை வாங்குவது தவறு என்று சொன்னார். சுருதி, நாம் எல்லோரும் பேசினாலும் ரோகினி மாமியார் செய்வது சரியே என்று சொல்வார் என்றார். உடனே விஜயா, இவள் செய்த தவறுக்கு பைன் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சீதாவிற்கு உதவி செய்தது யார்? அவரைப் பார்த்து நேரில் நன்றி சொல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் சீதாவும் அவருடைய அம்மாவும் அருணுக்கு நன்றி சொல்வதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தார்கள். ஆனால், சீதா காதலிக்கும் விஷயம் அவருடைய அம்மாவிற்கு தெரியவில்லை. எதார்த்தமாக அருண் வீட்டில் பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய புதிய ஆடருக்காக மண்டபத்தில் காத்துக் கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு சிந்தாமணி வந்தார். அப்போது அந்த மண்டபத்தின் மேனேஜர், இந்த முறை யார் முதலில் டெபாசிட் செய்தார்களோ அவர்களுக்கு தான் ஆர்டர் என்று சொல்வதால் சிந்தாமணி, மீனாவை ஏளனமாக பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
உடனே மீனா, இரண்டு நாளில் நான் பணத்தை ரெடி பண்ணி ஆர்டரை வாங்குவேன் என்று சவால் விட்டு வந்தார். பின் வீட்டிற்கு வந்த மீனா, முத்துவிடம் நடந்ததை சொன்னார். உடனே முத்து, தன்னுடைய அப்பாவிடம் ஏலத்திற்காக பணத்தைக் கேட்டார். அப்போது மனோஜ் கிண்டலாக பேசி இருந்தார். உடனே விஜயா கோபப்பட்டு, மீனாவையும் முத்துவையும் ரொம்ப ஏளனமாகவும் கிண்டலாகவும் பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, முத்து என்ன சொல்ல வருகிறார் என்று கூட கேட்காமல் இஷ்டத்திற்கு பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த முத்து, நீங்கள் பேசி முடித்து விட்டீர்களா? நான் இந்த வீட்டை வைத்து பணம் கேட்கவே இல்லை. நான் கடன் வாங்க போகிறேன் என்று அப்பாவிடம் ஒரு வார்த்தை சொல்கிறேன். பாட்டியிடம் உதவி கேட்க போகிறேன் என்று முத்து சொல்கிறார். உடனே மீனா, பாட்டியிடம் கூட உதவி வேண்டாம். எனக்கு தெரிந்த பைனான்ஸரிடம் கேட்கலாம் என்று
சொல்கிறார். இன்னொரு பக்கம் விஜயா, சிந்தாமணிக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடுகிறார். பார்வதிக்கு ஒன்றுமே புரியவில்லை.
சீரியல் ட்ராக்:
அப்போது விஜயா, மீனா ஆர்டர் எடுக்க முடியாமல் பணத்திற்காக அவஸ்தைப்படுகிறார். கண்டிப்பாக இந்த ஆர்டர் உங்களுக்கு தான் என்று சொன்னவுடன் இருவருமே சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் பார்த்து பார்வதிக்கு கோபம் தான் வருகிறது. அதற்குப்பின் மீனா பைனான்சியரிடம் பணம் கேட்கப் போகிறார். ஆனால், அவர் பணம் இல்லை என்று சொல்கிறார். இதனால் வேதனையில் மீனா, முத்துவிடம் சொல்கிறார். அதற்கு அவர், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் காரில் வந்த முத்துவை நிறுத்திய அருண், குடித்திருக்கிறாயா? ஊது என்று சொல்கிறார். முத்து, குடிக்கவில்லை என்று சொல்லியுமே அருண் விடவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது