மீனாவின் அருமை தெரியாமல் தவிக்கும் முத்து குடும்பம், மிரட்டும் ஸ்ருதி அம்மா - சிறகடிக்க ஆசை

By subhashini · 16/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, உன் தம்பி மீனா மீது கோபமாக இருந்தாலும் அவளுக்காக சப்போர்ட் செய்து பேசிஇருந்தார். ஆனால், நீ எனக்கு எப்பவுமே சப்போர்ட் செய்வதில்லை என்று வருத்தப்பட்டார். இதனால் மனோஜ் ஆறுதலாக ரோகினி இடம் பேசி இருந்தார். பின் இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் போது விஜயா வந்தார். உடனே ரோகினி ஒளிந்து கொண்டார். அப்போது மனோஜ், நான் போனில் பேசிக் கொண்டிருந்தேன் என்று பொய் சொல்லி சமாளித்தார். அதை நம்பி விஜயா போய் விட்டார்.

மனோஜ் தனக்காக சப்போர்ட் செய்தது நினைத்து ரோகினி சந்தோசப்பட்டார். அதற்குப்பின் முத்து, மீனா வீட்டில் இல்லாததால் சாப்பிடாமல் சரியாக தூங்காமல் இருந்தார். இன்னொரு பக்கம் சீதா, தன்னுடைய மாமியார் வீட்டிற்கு கிளம்ப தயாராக இருந்தார். அப்போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சீதாவிற்கு அறிவுரை சொன்னார்கள். அதோடு முத்துவை ரொம்ப பெருமையாக பேசி இருந்தார்கள். இதையெல்லாம் கேட்டு அருண் மனதுக்குள்ளே கோபப்பட்டார். அதற்குப்பின் முத்து, தன்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறது மீனா சாப்பாடு கொண்டு வந்த விஷயத்தை சொன்னவுடன் அவர் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் முத்து, மீனா இருப்பது போலவே நினைத்து இருந்தார். எங்கு பார்த்தாலும் மீனா தெரிவது போலவே அவர் கண்ணுக்கு இருக்கிறது. அதற்கு பின் முத்து, மீனாவின் பூக்கடை பக்கமாக வந்தார். அப்போது மீனாவின் தோழிகள் முத்துவை வம்பு இழுத்து பூ வாங்கும் இடத்தில் விட சொல்லி கேட்டதால் முத்துவுமே அவர்களை ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது மீனாவின் தோழிகள், கணவன்- மனைவி இடையே சண்டை வருது சகஜம்தான். இருவரும் பேசிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆனால், முத்து-மீனா இருவருமே பேசிக்கொள்ளவில்லை. இருவரும் மனதுக்குள் வருத்தப்பட்டார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் மனோஜ், ரோகினி இருவருமே ஷோரூமில் இருந்தார்கள். அப்போது அங்கு கணவன் மனைவி இருவருமே வேலைக்கு கேட்டு வந்தார்கள். மனோஜ், ஒருவருக்கு தான் வேலை இருக்கிறது என்று சொன்னவுடன் அந்தப் பெண் ரோகினியை பார்த்து ஐஸ் வைத்து பேசி இருந்தார். உடனே ரோகினி, வீட்டிற்கு சமையல் செய்ய ஆள் வேண்டும். அதனால் ரெண்டு பேரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
அதற்கு பின்னர் ரோகினி, அந்த பெண்ணை வீட்டில் அழைத்து வந்த ரோகினி, மீனா வரும் வரை ராணி சமையல் செய்வார் என்றவுடன் விஜயாவும் சம்பாதித்தார். பின் ராணி சமைக்க சொல்லி அனுப்பினார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராணி சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு காரம் தாங்க முடியாமல் மொத்த குடும்பமே கதறுகிறது. விஜயா, சுருதி இருவருமே கத்துகிறார்கள். ஆனால், ரோகினி சமாளித்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார். பின் கோபப்பட்ட விஜயா, இனிமேல் இவளை கிச்சன் பக்கமே அனுப்பாதே. உன்னுடைய ஷோரூமில் வைத்துக் கொள்ளு என்று திட்டி விடுகிறார். அப்போது முத்து, இப்போதாவது மீனாவின் அருமை தெரிகிறதா? என்று கேட்கிறார். உடனே அண்ணாமலை, ஒருவர் இல்லாத போது தான் அவர்களுடைய அருமை தெரியும். அது உனக்கும் உன்னுடைய அம்மாவிற்கும் தான் சொல்கிறேன் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் செல்வம் தனக்கு தெரிந்தவருடைய கார் டெக்கரேஷன் செய்வதற்காக மீனாவை அழைத்திருக்கிறார். மீனாவும் அவருடைய தோழிகளும் கார் டெக்கரேஷன் செய்கிறார்கள். அந்த இடத்திற்கு முத்து வருகிறார். முத்துவை பார்த்தவுடன் ஜாடமாடையாக மீனா விசாரிக்கிறார். முத்துவுமே தன்னுடைய நண்பர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். உள்ளுக்குள் இருவருக்குமே பாசம் இருந்தாலும் அதை ஈகோவினால் வெளியே சொல்ல தயங்குகிறார்கள். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா ரோகினியின் ஷோரூமுக்கு போகிறார். அப்போது அவர், கொடுத்த பணத்தை எப்ப தரப்போகிறார்? என்று கேட்க, ரோகினி டைம் கேட்கிறார். பின் ஸ்ருதி அம்மா, ரவி வேலை செய்யும் இடத்திற்கு சென்று நீத்துவை பற்றி விசாரிக்க சொல்ல, ரோகினி முடியாது என்கிறார்.இதனால் ஸ்ருதியின் அம்மா மிரட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full