உண்மை அறிந்து ருத்ரதாண்டவம் ஆடிய விஜயா, தப்பிப்பாரா ரோகினி? - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் சத்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் கோவிலில் கூல் ஊத்த இருப்பதாக மீனாவிடம் சொன்னார்கள். ஆனால், உன்னுடைய புருஷன் வரக்கூடாது என்று சத்யா சொல்லி இருந்தார். ஆனால், இதை முத்து கண்டுபிடித்து, நீ போகவே கூடாது என்று சொல்லி இருந்தும் மீனா கோவிலுக்கு போய் இருந்தார். இதை அறிந்த முத்து மீனா மீது பயங்கரமாக கோபப்பட்டார். பின் முத்து, குடித்து விட்டு வந்து மீனாவிடம் சண்டை போட்டார்.
இதை பார்த்து விஜயா சந்தோசப்பட்டார். மறுநாள் முத்து வேலை செய்யும் இடத்திற்கு வந்த மீனாவின் அம்மா, தங்கை இருவருமே மன்னிப்பு கேட்க, முத்து கோபமாக பேசி அங்கிருந்து கிளம்பி விட்டார். அதன் பின் மீனாவின் நிலைமை புரிந்து கொண்டு வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிற்கு அல்வா வாங்கி கொடுத்து மன்னிப்பு கேட்கிறார். இருவரும் சந்தோசமாக பேசி சாப்பிடுவதை பார்த்து விஜயா வயிறு எறிகிறார். மேலும், சீதா வேலை செய்யும் இடத்திற்கு மீனா சென்றார். அந்த சமயம் பார்த்து ரோகினி ஹாஸ்பிடலுக்கு வந்ததை மீனா பார்த்தார்.
சிறகடிக்க ஆசை:
உடனே சீதா, ரோகினியை பற்றி விசாரிக்கிறார். அப்போது தான் ரோகினி இரண்டாவது குழந்தைக்கான டெஸ்ட்டுக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்தது. இதை அறிந்த மீனா அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார். யார் எது சொன்னாலும் காதில் கேட்காமல் அமைதியாகவே இருந்தார். அப்போது வீட்டிற்கு ரோகினி- மனோஜ் இருவரும் ஸ்வீட் கொண்டு வந்து தந்தவுடன் விஜயா, ரோகினி கர்ப்பமாக தான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டார். ஆனால், ஷோரூமில் நல்ல வியாபாரம் ஆகிறது என்று இனிப்பு கொடுத்து இருக்கிறார்கள்.
சீரியல் கதை:
பின் விஜயா, வீட்டிற்கு குழந்தை வந்தால் தானே நன்றாக இருக்கும் என்று சொல்கிறார். நேற்று எபிசோடில், மீனா அதிர்ச்சியில் இருந்து மீண்டே வரவில்லை. ரோஹிணியை மட்டுமே பார்த்து கொண்டு இருக்கிறார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு அண்ணாமலை, ஸ்ருதி, ரவி எல்லோருமே வந்து முத்து செய்த சாதனையை புகழ்கிறார்கள். யாருக்குமே புரியவில்லை. கடைசியில் முத்து, தன்னுடைய காரில் ஒரு பெண்ணிற்கு பிரசவம் பார்த்திருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை பலருமே பாராட்டி இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
வழக்கம் போல் மனோஜ்- விஜயா கிண்டல் அடித்து ஊரில், காரில் எல்லாம் சாதனை நடக்கிறது. வீட்டில் எதுவும் இல்லை என்று சொன்னவுடன் அண்ணாமலை கூடிய விரைவில் நடக்கும் என்று சொல்கிறார். ஆனால், எல்லோரும் பேசிக் கொண்டிருக்க மீனா மட்டும் அமைதியாக இருந்தார். கடைசியில் ஸ்ருதி, ஏன் இப்படி இருக்கிறீர்கள்? முத்து ஏதாவது சண்டை போட்டாரா? என்று கேட்டதற்கு, ரோகினி இரண்டாவது முறை கர்ப்பமாக டெஸ்ட் எடுத்து இருக்கிறார் மீனா என்று சொன்னவுடன் சுருதி அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், இந்த உண்மையை யாரிடம் சொல்ல வேண்டாம் என்று மீனா சொல்லியும் ஸ்ருதி ரவியிடம் சொல்கிறார்.
இன்றைய எபிசோட்:
ரவி அதிர்ச்சியாகி முத்துவிடம் சொல்கிறார். முத்து உடனே அண்ணாமலை இடம் சொல்ல, அண்ணாமலை விஜயாவிடம் ரோகினியை பற்றி பேசுகிறார். உடனே விஜயா, கோபத்தில் ரோகினி இடம் கேட்டு சண்டை போடுகிறார். நீ இதற்கு முன்பு கர்ப்பமாக இருந்தாயா? இது இரண்டாவது குழந்தையா? என்றெல்லாம் கேட்க ரோகினி பயத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் அழுகிறார். கடைசியில் ரோகினி, ஆமாம், இது இரண்டாவது குழந்தை தான். முதல் குழந்தை அபாசன் ஆகிவிட்டது. வீட்டில் நடந்த ஒரு சண்டையில் நடந்தது. வெளியில் சொல்ல முடியவில்லை என்று சொன்னவுடன் எல்லோருமே அமைதியாகி விடுகிறார்கள். இருந்தாலுமே முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.