விஜயாவை அவமானப்படுத்திய சுதா, மனோஜ் உடன் நெருக்கமாகும் ரோகினி - பரபரப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 12/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதியின் அம்மா, தனக்கு வேலை இருப்பதாக சொல்லி வீட்டில் உள்ள எல்லா ரூம்களையும் பூட்டிவிட்டு விஜயா இருக்கும் ரூமை மட்டும் பூட்டாமல் சென்றார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கடுப்பானது. பின் பார்வதிக்கு போன் செய்த விஜயா, எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. நான் உன்னுடைய வீட்டிற்கு வருகிறேன் என்றார். பார்வதி, நீ என்னுடைய வீட்டிற்கு வருவதாக இருந்தால் அண்ணாமலை அண்ணாவையும் அலைத்துக் கொண்டு வா. அண்ணாமலை அண்ணா இருக்கும் இடத்திற்கு போ என்றார். இதனால் விஜயாவுக்கு இன்னும் கோபம் அதிகமாகின்றது.

விஜயா, ஸ்ருதியின் வீட்டில் மரியாதை இல்லாமல் நடத்துவதால் ரொம்ப வேதனையோடும் கவலையோடும் இருந்தார். பின் தன் கணவர் அண்ணாமலைக்கு போன் செய்து விஜயா அக்கறையுடன் விசாரித்தார். அண்ணாமலையும் பதிலுக்கு விசாரித்தார். விஜயா, உண்மையை சொல்லாமல் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று பொய் சொல்லி விட்டார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் இங்கிலீஷ் கற்றுக்கொள்வதற்காக கிளாஸுக்கு செல்வதாக அண்ணாமலை இடம் சொன்னார்கள். அண்ணாமலையும் சந்தோசமாக அவர்கள் இருவரையும் பாராட்டி அனுப்பி வைத்தார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் ஆங்கிலம் வகுப்பு நடக்கும் இடத்திற்கு முத்து-மீனா இருவரும் சென்று விட்டார்கள். அங்கு ஸ்வேதா வந்தார். ஸ்வேதாவை பார்த்தவுடன் முத்துவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஸ்வேதா, இது என்னுடைய தோழி நடத்தும் இன்ஸ்டிடியூஷன் தான். நான் இங்கு கிளாஸ் எடுப்பேன் என்றார். ஸ்வேதா, கிளாஸ் நடத்திக் கொண்டிருக்கும்போது முருகனும் வந்தார். முருகன், என் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியவில்லை. வெளிநாடுகளில் வேலை இருப்பதால் ஆங்கிலம் கற்றுக் கொள் என்று என்னை இங்கு அனுப்பி விட்டால் என்று புலம்பி கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜிற்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு ரோகிணி வருகிறார். அதை பார்த்து மனோஜ் ரொம்பவே சந்தோசப்படுகிறார். பின் இருவருமே நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப சந்தோஷமாகவும் ஜாலியாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அண்ணாமலை, மீனாவின் வீட்டில் சந்தோசமாக பேசிக் கொண்டு இருக்கிறார். அப்போ சத்யா சோகத்தில் இருக்கிறார். இதை கவனித்த முத்து, சத்யாவிடம் விசாரிக்கிறார். அப்போது சத்யா, எங்களுடைய காதல் விவகாரம் ரேகாவின் அப்பாவிற்கு தெரிந்து விட்டதா? என்று புரியவில்லை. ரேகாவை வெளிஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

முத்து, எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். தைரியமாக இரு என்று செல்கிறார். இன்னொரு பக்கம் சுருதியின் அம்மா சுதாவின் வீட்டிற்கு அவருடைய நண்பர்கள் வந்திருக்கிறார்கள். எல்லோருமே குடித்துக்கொண்டு ஆட்டம் பாட்டம் என்று இருக்கிறார்கள். இதை பார்த்து விஜயாவுக்கு பிடிக்கவே இல்லை. சுதா, விஜயாவை நடனமாட சொல்லி கேட்கிறார். சுதாவின் நண்பர்களுமே கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் கொந்தளித்த விஜயா, குடிகாரர்களுக்கு மத்தியில் நான் என்ன நடனமாடுபவளா? என்று திட்டிவிட்டு அங்கிருந்து செல்கிறார். பின் விஜயா, மனோஜ் ஷோரூமில் தங்கிக் கொள்வதாக முடிவு எடுத்து சென்று விடுகிறார். ரோகிணி, விஜயாவை பார்த்தவுடன் ஒளிந்து கொள்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full