வசமாக சிக்கி கொண்ட ரோகினி, வெளுத்து வாங்கிய விஜயா - அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கீரை விற்கும் பெண்ணை பார்த்து விஜயா பயங்கரமாக திட்டி இருந்தார். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன ஆனது? என்று அண்ணாமலை விசாரித்தார். ஆனால், விஜயா உண்மையை சொல்லாமல் அமைதியாக நின்றார். அதற்குப் பின் விஜயா, மனோஜ்- ரோகினி இருவரையும் சாமி ரூமுக்கு அழைத்து சென்று, நீ இனி மனோஜ் ஷோரூமிற்கு போ. நீ பொய்யாக சொன்ன கோடீஸ்வரி என்ற விஷயத்தை உண்மையாக்கு. நீ கோடீஸ்வரி ஆனால் தான் இந்த வீட்டில் மரியாதை என்று ரோகினியை மன்னித்து ஏற்றுக் கொண்டார். இதனால் மனோஜ்- ரோகினி இருவருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் அருண், ரிஜிஸ்டர் மேரேஜிக்கு தேவையான எல்லா வேலையும் ஏற்பாடு செய்து விட்டேன் என்று சொன்னார்.
சீதா பயமாக இருக்கிறது என்று சொன்னார். அப்போது மீனா, நான் சீதாவிற்காக தான் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறேன். மற்றபடி எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து வந்த சத்யா, நான் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ணி விட்டேன் என்று சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். மீனா-சீதாவுக்கு ரொம்ப சந்தோசம். பின் இதைப்பற்றி முத்துவிடம் சொல்ல சத்யா கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் முத்துவின் நண்பர் முருகன் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்வதற்காக முத்துவை அழைத்தார். அந்த சமயம் வந்த சத்யா, தான் தேர்வில் பாஸ் ஆனதை பற்றி சொல்ல, முத்து சந்தோஷத்தில் எல்லோருக்குமே விருந்து போட என்று கொண்டாடி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் சிந்தாமணியின் பர்த்டே பார்ட்டிக்கு பாவாடை தாவணி ட்ரஸ் கோடில் பார்வதி- விஜயா இருவரும் போனார்கள். இதை பார்த்த மொத்த குடும்பமே ஷாக் ஆனது. முத்து- அண்ணாமலை இருவருமே இந்த கோலத்துடன் போக வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் கேட்கவில்லை சந்தோசமாக கிளம்பி போனார்கள். பார்ட்டியில் எல்லோரிடமும் விஜயாவை சிந்தாமணி அறிமுகம் செய்து இருந்தார். அதற்குப்பின் கேக் வெட்டி சந்தோஷமாக பிறந்த நாள் பார்ட்டியை சிந்தாமணி கொண்டாடி இருந்தார்.
நேற்று எபிசோட்:
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று சிந்தாமணி வீட்டில் நடந்தது. இன்னொரு பக்கம் மனோஜ்- ரோகினி இருவருமே ஷோரூம்விற்கு சென்றிருந்தார்கள். அப்போது ரோகினி, விஜயாவுக்கு ஆன்லைனில் புடவை ஆர்டர் செய்த விஷயத்தை மனோஜிடம் சொன்னார். அந்த சம்பவம் பார்த்து போன் செய்து ரோகினி அம்மா, கிரிஷ் உன்னிடம் பேச வேண்டுமாம். நேரில் வர முடியுமா? என்றெல்லாம் கேட்டார். அதற்கு ரோகினி வருகிறேன் என்று போனை வைத்துவிட்டு மனோஜிடம் பொய் சொல்லி அங்கிருந்து கிளம்பி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எபிசோட்டில் விஜயா, சிந்தாமணியின் வீட்டில் பார்ட்டியை என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த சிந்தாமணியின் தோழி, விஜயாவின் கழுத்தில் இருக்கும் செயினை பார்த்து, இது என்னுடைய திருட்டு போன செயின். உங்களிடம் எப்படி வந்தது? நீங்கள் தான் திருடினீர்களா? என்று கேட்கிறார். உடனே விஜயா, இது என்னுடைய கோடீஸ்வரி மருமகள் வாங்கி தந்தது என்கிறார். அதற்கு சிந்தாமணியின் தோழி, என்னுடைய செயினுக்கு பின் என்னுடைய கணவர் பெயர் இருக்கும் என்று சொல்கிறார். பின் அந்த செயினை வாங்கி பார்க்கிறார்கள். அதில் அவர் சொன்னது போல தான் இருக்கிறது. இதை பார்த்து விஜயா ஷாக் ஆகிறார். பின் சிந்தாமணியின் தோழி, போலீசுக்கு போன் செய்கிறேன் என்கிறார். பார்வதி, அதெல்லாம் வேண்டாம். எங்கேயோ தப்பு நடந்திருக்கிறது என்று சொல்கிறார். பின் கோபத்திலேயே விஜயா வீட்டுக்கு வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து ரோகினி, விஜயாவிற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த புடவையை கொடுக்கிறார். அதை பிரித்து பார்த்த விஜயா, இது எந்த கடையில் திருடினாய்? என்று ரோகினியை அடி வெளுத்து வாங்குகிறார். ரோகினிக்கு ஒன்றுமே புரியவில்லை. விஜயா கோபத்தில் கத்துகிறார். உடனே வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விடுகிறார்கள். அப்போது விஜயா, எனக்கு இவள் கொடுத்த செயின் திருட்டு நகை. எனக்கு இவள் பொய்காரி என்று நினைத்தேன். ஆனால், இவர் திருடின்னு இப்பதான் தெரிகிறது என்று சொல்கிறார். ரோகினிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பின் அண்ணாமலை, இதை பற்றி ரோகினி இடம் கேட்கிறார். அதற்கு ரோகினி, நான் எனக்கு தெரிந்தவர் மூலம் வாங்கினேன். நான் நிஜமாகவே திருடவில்லை. என்னை நம்புங்கள் என்று ரொம்ப எமோஷனாக அழுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரும் ரோகினிக்கு அறிவுரை சொல்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.